Wednesday, 21 March 2018


சகுனங்களும் நிமித்தங்களும்
மனிதனின் அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒன்றாய் இருப்பது சகுனமும் நிமித்தமும் ஆகும்.   மூட நம்பிக்கயில்லாதவர்கள் கூட இதில் அதிக நம்பிக்கை உள்ளவர்கள். ஆனால் அதற்கு அவர்கள் சொல்லும் வார்த்தை என்பது இல்லை சார் இது ஒரு சென்டிமென்டாக வைத்துக் கொண்டுள்ளேன் என்பார்கள்.
சகுனம்  நிமித்தம் என்பது நமக்கு எதிர்பாரமல் சுற்றுப்புரத்தில் நடப்பது, நம்மை எதிர் நோக்கி இருப்பது, கேட்கக் கூடிய சப்தங்கள் என்பவை ஆகும். நாம் ஒரு விஷயம் பேசிக்கொண்டிருக்கும் போதோ, ஒரு காரியம் நடத்திக் கொண்டிருக்கும் போதோ, பக்ஷிகள், விலங்குகள், பல்லி போன்ற ஜந்துக்களால் ஏற்படுதப்படும் சப்தங்கள், மனிதர்கள் உதிர்க்கும் வார்த்தைகள் ஆகியவைகளால் நமக்கு மனதில் ஏற்படக் கூடிய உணர்வுகள் சம்பந்தப்பட்டது.
நிமித்தம் என்பது தானே ஏற்படுவது.அதை நம்மால் மாற்ற முடியாது.  சகுனமும் என்பது அப்படி இருந்தாலும், சில சமயம் நம்மால் ஏற்படுத்திக் கொள்வது  ஆகும். தானே ஏற்படும் நிமித்தங்களை நம்மால் மாற்ற முடியாது. ஆனால் நல்ல சகுனங்களை நாமே ஏற்படுத்திக் கொள்வோம்.  உதாரணமாக நாம் ஒரு நல்ல காரியத்திற்காக வெளியே செல்கிறோம் என்றால் நம் வீட்டை சேர்ந்த பெண்களை எதிரில் வரச் செய்து அதன்பிறகு வெளியே கிளம்பிச் செல்வோம்.  எனவே இது போன்ற விஷயங்கள் ஒரு மனிதனின் அன்றாட வாழ்க்கையில் அவனோடு சம்பந்தப்பட்டு அவன் மனம் சார்ந்த விஷயங்களில் ஒரு தாக்கத்தை அதிகமாகவே ஏற்படுத்திவிடுகிறது.  வெளியே கிளம்பிச் செல்கையில் எதிரில்  ஒரு கணவனை இழந்த பெண் வந்தால் அபசகுனமாக பார்ப்பதும், அது தன்னுடைய  நெருங்கிய உறவாக இருந்தால் அதை அபசகுனமாக பார்க்காத தன்மையும்  என இருவித மனப்பாங்கில் உள்ளவர்களாக இருக்கிறோம்.  இதில் நமக்கு நாமே ஒரு ஸ்திரத்தன்மை இல்லாமல் இருக்கிறோம்.  அதேபோல் நாம் ஒரு நல்ல விஷயமாக பேசிக் கொண்டிருக்கையில், ஒருவர் தும்மினால் அபசகுனமாகவும் அவரே இன்னொரு முறை தும்மினால் சுப சகுனமாகவும் பார்க்கப் படுகிறது.  அதேபோல் சுற்றுப்புரத்தில் ஒருவர் அமங்கல வார்த்தை பேசினாலே அதுவும் அபசகுனமாக இருக்கிறது.  அதனால் தான் இன்றும் சுபகாரியங்கள் நடக்கும் இடங்களில் மங்கல

வாத்தியங்கள் முழங்கப் படுகின்றன.   அதாவது அந்த நல்ல காரியங்கள் நடக்கும் நேரத்தில் அபசகுன வார்த்தைகள் காதில் விழாமல் இருக்க மந்திர உச்சாடனங்களும், மங்கல வாதியங்களின் சத்தங்களின் அதிர்வலைகளும் அதை நல்லதாக மாற்றிவிடும்.  சங்கின் ஓலி சுப சகுனமாகும்.  பண்டய காலங்களில் போர் காலங்களில் இழைக்கப்படும் சங்கின் ஒலி வெற்றி சப்தமாகவும் நல்ல சகுனமாகவும்  கருதப்பட்டது. 
வீட்டில் உள்ள  விருக்ஷம் பூத்தால் சுப சகுனமாகும்.  அதுவே முறிந்தாலோ, அதில் காய்த்த காய் வாடினாலோ அசுப சகுனமாகும். வீட்டில் முருங்கை மரம் வளர்க்க கூடாது .  ஏனென்றால் அதை பிசாச மரம் என்பார்கள்.  அது முறிந்து விழுந்தால் சுற்றுப்புரத்தில் ஒர்  இறப்பு ஏற்படும்.  பேசிக் கொண்டிருக்கும் போது கெளலி எனப்படும் பல்லி இடும் சப்தம் அது எந்த திக்கிலிருந்து வந்தது என்பதை பார்த்து அதை சுப, அசுப சகுனமாக பார்க்கப்படுகிறது.  பஞ்சாங்கத்தில் பல்லி சொல்லுக்கு பலன், பல்லி விழுதலின் பலன் என்று கொடுக்கப்பட்டுள்ளது.  
சுப சகுனமாக, வீணை, புல்லாங்குழல், மேளம், சங்கு, இவைகளை பார்ப்பதும், இவைகளின் சப்தமும் ஆகும்.  அழகிய பெண்கள், நாட்டிய பெண்கள், தயிர், மஞ்சள் கலந்த அரிசி(அக்ஷதை) கரும்பு, அருகம்புல், நீர் நிரம்பிய குடம், பூக்கள், மாலைகள், கன்னி பெண்கள், கருடன்,ஆலய மணி ஓசை, விளக்கு, தாமரை பூ, நாய் தன் உடலை சிலிர்ப்பது, பிணம் எதிரே வருவது, இரட்டை பரதேசி, பசு மாடுகள்   இவைகளை கண்டால் சுபசகுனமாகும்.

அணையும் விளக்கு, தண்ணீர் பாத்திரம் சாய்ந்து நீர் வெளியேறுவது, உடுத்திய ஆடை கிழிவது, செருப்பு அறுந்து போதல், அமங்கல வார்த்தை, வீட்டுக்கு விலக்கான பெண்களை காணுதல், ஒற்றை தும்மல், சத்தமான வார்த்தைகள், வீட்டில் மரம் முறிதல், பல்லி இடப்புறம் கத்துவது, பன்றி, பாம்பு, குதிரையை காண்பது, சத்தமிடல், எண்ணெய் குடம், விளக்குமாற்றை கையில் வைத்திருப்பது,


தன் நக்ஷத்திரத்திற்குறிய பக்ஷி இடமிருந்து வலமாக செல்வது , விருக்ஷம் சாய்வது, மிருகம் இறந்து விட்டதாக கேட்பது  சாப்பிட்டு விட்டு போ , வந்து சாப்பிடு என்ற
வார்த்தைகளும்,  எதிரில் அலங்கரிங்கப்பட்ட தேரில் ஸ்வாமி வருபது, ஒற்றை பரதேசி,  எண்ணெய் தலையுடன் எதிரில் வரும் பெண், விதவை, எருமை மாடு ஆகியவை அசுப சகுனமாகும்.
பொதுவாக, ஜாதகத்தின் கால புருஷனனின் லக்னம் மேஷமாகும். அதன் ஏழாம் வீடு துலாம் ஆகும். அதன்அதிபதி சுக்ரன் ஆகும்.  ஒன்றொக்கொன்று ஏழாம் வீடாக வருவதால் சுபத்தன்மை நிறைந்தவையாக பார்க்கப்படுகிறது.  ஆகவே சுக்ரன் சம்பந்தப்பட்ட பொருட்களெல்லாம் சுபத்தன்மை நிறைந்தவை.  அதேபோல் கால புருஷனின் பாதகாதிபதி சனி  ஆகவே அவர் சம்பந்தப்பட்ட பொருட்களெல்லாம் அசுபத்தன்மை நிறைந்தவையாக பார்க்கப்படுகிறது. அதேபோல் சூரியன் சந்திரருக்கு  ராகு கேது பகையாவதால் அவை அசுபமாக பார்க்கப்படுகிறது.  பறவைகள் கூட்டமாக பறந்தால் சுப சகுனமாகவும், அவை கத்திக் கொண்டே பறந்தால் அபசகுனமாகவும் ஆகிறது. ஒரு நல்ல விஷயமாக வெளியே செல்லும் போது வீட்டில் வளர்க்கும் மீன்களில் ஒன்று இறந்தால் அபசகுனமாகும். 
சரி இதில் சுப சகுனம் என்பது நல்லதாக பார்க்கப்பட்டாலும் சிலருக்கு அது வெற்றியை தராவிட்டால் மனது சங்கடப்பட்டுவிடுவார்கள்.  ஏன் நாம் நல்ல சகுனம் பார்த்துதானே வந்தோம் ஏன் தடங்கல் ஏற்பட்டது என்று குழம்புவார்கள். அது வேறொன்றுமில்லை.  அவர் கிளம்புகிற நேரத்தில் அவரின்ஜாதகத்தில்  லக்னாதிபதியும்  அவரின் ஏழாம் அதிபதியும் நட்பாக இருந்தால்லும் அவர் ஜாதகத்தின் யோகாதிபதியோடு சேக்கையோ, பார்வையோ கொண்டால் நல்ல சகுனத்திற்கு ஏற்ப நல்ல பலனாகும் , பகையாக இருந்தாலும் அவர் ஜாதகத்தின் பாதகாதிபதியோடு சேர்க்கையோ பார்வையோ கொண்டால்  நல்ல சகுனம் பார்த்து கிளம்பினாலும் அது கெட்ட பலனாகவும் மாறும்.   அதேபோல் சிலர் அசுப சகுனத்தை பார்த்தாலும் அதை சட்டை செய்யாமல் வெளியே சென்று வெற்றியோடு

வருவார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் அதெல்லாம் மூட நம்பிக்கை . அதையெல்லாம் நம்பாமல் சென்றதால் தான் எனக்கு வெற்றி என்பார்கள். ஆனால் அந்த நேரத்தில் அவர் ஜாதாத்தின் ஏழாம் அதிபதி நல்ல நிலையில் அவர் லக்னாதிபதியோடு சேர்க்கை பார்வை கொண்டிருப்பார்.  அல்லது அவர் பாதகாதிபதி அவரின் யோகாதிபதியோடு நல்ல சேர்க்கையோ, பார்வையோடு கொண்டிருப்பார். இதை அந்த நேரத்திற்குண்டான ப்ரஸன்ன ஜாதகத்தின் மூலம் கண்டு உறுதிபடுத்திக் கொள்ளலாம்.  இதில் நிறைய விஷயங்கள் இருப்பதால் அடுத்த பகுதியில் தொடர்ந்து பார்க்கலாம்.

நன்றியுடன் ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்.  போன்: 9094176198.
  
     


சனிபகவானை பற்றி புராணம் என்ன சொல்கிறது .
பொதுவாகவே நாம் சனி பகவானை  சனீஸ்வரன் என்று அழைக்கிறோம்.  ஆனால் அவருக்கு அது பெயரல்ல.  அவர் பெயர் சனைஸ்சரன் என்று பெயர்.  அதாவது சனைஸ்சரஹா என்றால் மெதுவாக விந்தி விந்தி நடப்பவன் என்று அர்த்தம். சனியின் கோள் குருவுக்கு அடுத்த பெரிய கோள். அதிக வாயுவை உடையது. அதில் இருந்து நீல நிற கதிர்கள் வெளிப்படுகிறது.  சூரியனின் கடைசி வட்டத்தில் இருப்பதால் சூரியனை சுற்றி வர அதிக காலம் எடுத்து கொள்கிறார்.  அதனால் தான் சனி பகவானை நொண்டி, வயதானவன், அழுக்கானவன் என்கிறோம்.
ஒரு முறை இராவணன் தன் மனைவி கர்ப்பமான சமயத்தில் அவனுக்கு பிறக்கப் போகும் குழந்தை சிரஞ்சீவியாய் மரணம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நவக்கிரஹங்களை சிறையிலிட்டு அவன் அனுமதி தரும் வரை அவன் சொல்லும் இடங்களில் நிற்க வேண்டும் என் உத்தரவிட்டான்.  இது தர்மத்திற்கு மீறிய செயலாக இருக்கிறதே என கொதித்த பிரஹஸ்பதியான குரு அசுர குருவான சுக்ராச்சாரியாரிடம் சொல்ல , அவரோ, நான் என்ன செய்வது என்னையும் சிறையிலிட்டு விட்டானே என் வினவ , குருவோ, சனியை பார்த்து சற்று நகர்ந்து நிற்க சொல்கிறார் . சனி அதற்கேற்ப தன்னை நிற்க வைத்த மீன ராசி மண்டலத்தில் இருந்து தன் கால மேஷ ராசி மண்டலத்தில் வைக்க முயல்கிறார்.
அதை பார்த்த இராவணன் தன் கதாயுதத்தால் சனியில் காலை தாக்குகிறார்.  அதில் காலில் அடி பட்ட சனி பகவான நிலை குலைந்து மேஷ ராசியில் விழுந்து விடுகிறார்.   ஆகவே தான் சனி பகவான்  பலமிழந்து மேஷத்தில் நிற்கிறார்.  இதனால் கோபம் கொண்ட சூர்ய பகவான் தன் மகனை காப்பாற்ற அதிக கோபக் கனலோடு தன் மகனை தாங்கி பிடிக்கிறார். ஆகவே தான் சூரியன் மேஷத்தில் உச்சமாகி தன் மகனின் நீச்சத்தை அதாவது பலவீனத்தை போக்குகிறார். 
அதை போல் புராணக் கதைகளின் படி, சனி பகவானுக்கு ஆஞ்சநேயர் என்றால் பயமாகும். அதனால் ஆஞ்சநேயர் மந்திரங்கள் படித்தால், சனியின் தாக்கங்கள் குறையும் என நம்பப்படுகிறது.
                                                                 


ஒரு முறை தன் கால சுழற்ச்சியின் படி சனிபகவான் அனுமனை பிடிக்க வேண்டிய நேரம் வந்தது.   அந்த நேரத்தில் தன் பகவான புனர் பூச நக்ஷத்திரத்தில் உதித்து அந்த ராசி நாதன் உச்சமாக நிற்கும் கடக ராசியில் உதித்த ராம சந்திர மூர்த்தி இராவணனோடு யுத்தம் புரிய இலங்கைக்கு செல்லும் பாலம் அமைக்கும் பணியில் இருந்தார்.
அவரை கண்ட சனி பகவான், ஹனுமனே நான் உன்னை பீடிக்கும் காலம் வந்திருக்கிறது.  ஆகவே நான் உன்னை பிடிக்கப் போகிறேன் என்றார்.  அதற்கு ஹனுமனோ, நான் இப்போது என் பகவானுக்காக ஒரு பணியில் இருக்கிறேன். பிறகு வா என்கிறார்.  அதற்கு சனி பகவான், அது முடியாது நான் எனக்கு இட்ட பணியை செய்ய வேண்டும் என்கிறார்.
சரி எவ்வளவு நாள் என்னுள் இருப்பாய் என்கிறார்.  அதற்கு ஏழரை வருடம் என்கிறார் அது முடியாது நான் என் பிரபுவின் வேலையை அவ்வளவு காலம் தள்ள முடியாது என்று சொல்ல, கடைசியில் ஏழரை நாழிகை பீடிக்க ஒப்புக் கொள்கிறார்.
உன் உடலில் ஏதாவது ஒரு பகுதியை சொல் அங்கு ஏழரை நாழிகை இருந்துவிட்டு போய்விடுகிறேன்” என்றார். “கடமையைச் செய்து கொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்தல் தவறு. அதனால், தலையில் உட்கார்ந்து கொள்” என்றார்.
சனி பகவானும் ஏறி அமர்ந்தார். பாலம் அமைக்கும் வேலையில் மும்முறமாக இருந்த ஹனுமனோ தன் தலையில் கற்களையும் மலைகளையும் மாறி மாறி தலையில் ஏற்றி கடலில் போட்டு பாலம் அமைத்து கொண்டிருந்தார். இதன் வேதனையை தாங்காத சனி பகவான்அலறினார். “சொன்ன சொல் தவறக்கூடாது.இரண்டரை மணி நேரம் கழித்து தான் இறங்க வேண்டும்” என்றார் அனுமன். அத்தனை வேதனையும் பொறுத்துக் கொண்டு எழரை நாழிகை முடிந்த பிறகு  இறக்கிவிட்டார். “ராம பக்தர்களையும் ஆஞ்சநேய பக்தர்களையும் இனி தொடுவதில்லை” என்று கூறிவிட்டு அகன்றார் சனீஸ்வரன்.  அதற்கு பிரதி பலனாக,உடல் அங்க ஹீனமானவர்களை அனுமன் மிகவும் நேசிப்பான்.அவர்களுக்கு உடல் சக்தியை பெருக்கி தருவான். சனியின் தான்யமான உளுந்தில் செய்த வடை அனுமனுக்கு பீரிதியாகிறது. 


ராம நாமத்தையும் ஆஞ்சநேயர் மூல மந்திரங்களை 108 தடவை உச்சரித்து விட்டு எங்கு சென்றலும் அது நன்மையாக இருக்கும் நினைத்தது நடக்கும்.
ஜன்ம சனி நடப்பவர்கள் பிறர் பார்க்க ஒரு சிறு கல்லை எடுத்து ராம நாமத்தை சொல்லி  தன்னுடனே வைத்துக் கொண்டால் பாதிப்பு குறையும்.   
ஜாதகத்தில் சனிபகவானின் வீடுகள் இரண்டும் அருகருகே இருக்கும்.  அவரின் இரண்டு பக்கமும் குருவின் வீடுகள்.  நில ராசி, காற்று ராசி இரண்டுக்கும் சம்பந்தப்படும் கிரஹம் சனி பகவான். அதேபோல் இந்த இரண்டுக்கும் சம்பந்தப்படும் தெய்வம் ஹனுமான் ஆவார்.  ஆகவே கடல் தாண்டி வேலைக்கு செல்பவர்கள் ஹனுமனை வேண்டிக் கொண்டால் அவர் எந்த தடையையும் அகற்றி நல்ல படியாக முடித்து வைப்பார்.
அதேபோல் மூலத்தில் பிறந்தவர்களையும்,  புனர்பூசத்தில் பிறந்தவர்களையும் சனி பகவான் ஒன்றும் செய்வதில்லை. கணவன் மனைவி பிரிவில் இருப்பவர்கள் ஹனுமனை வேண்டிக் கொண்டால் பிரிவு நீங்கி ஒன்று சேர்வார்கள்.  ஜாதகத்தில் ராகுவும் கேதுவும்தான் திருமண பிரிவை தருவார்கள்.  ஜாதகத்தில் இவர்களின் மூலதிரிகோண வீடுகள் சனி பகவானின் வீடுகளாக இருப்பதால் சனிபகவானுக்கு பிரியமான ஹனுமனை வேண்டிக் கொண்டால் திருமண பிரிவு நீங்கி விடும்.
இன்னும் வரும்.
அன்புடன் ……………  ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்.  Ph: 9094176198     

 Top of Form
யோதிஷ் வித்யா பீடம். 
சனீஷ்வரன் ஒரு மஹா புருஷன்

சனீஷ்வரன்  : இந்த பெயரை கேட்டாலே மனதில் ஒருவித பயம், கலக்கம் தன் எதிர்காலத்தை பற்றிய கவலை இதெல்லாம் மனதில் தோன்றுகிறது.  இது சரியா தவறா.  உண்மையாக சொல்வதென்றால் இது தவறு தான்.   சனி தன் நிலையில் ஜாதகத்தில் எங்கு நின்றாலும் அந்த பாவத்தை தூய்மை படுத்ததான் நிலை பெறுகிறாரே தவிர மற்ற படி நாம் நினைப்பது போல் இல்லை. அதாவது ஒரு தொழிற்ச்சாலையில் உள்ள இயந்திரங்களுக்கு ஹாலிடே பீரியட் என்று ஒன்று இருக்கும். அதாவாது தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கும் அவற்றிற்கு ஒய்வு கொடுத்து அதை சரி செய்து மீண்டும் இயக்குவார்கள்.  அதைபோல் தான் நம் மனித உடம்பும். அதை சரி செய்வதே நம் சனீஷ்வரன்தான். 

 இதை சற்று விரிவாக பார்ப்போம்.
சனி பகவானுக்கு சுபத்தன்மை உண்டா இல்லையா.  நிச்சயமாக உண்டு.  அது எப்படி சூரியன் புதல்வன்தன் தந்தையின் குணத்துக்கு எதிராக செயல் படுவார்.  ஆஸ்ட்ரானமிபடி சூரியனில் இருப்பது ஹைட்ரஜன் வாயு.  சனியில் இருப்பதும் இதேதான் சற்று குறைவு. அதோடு ஹீலியம் வாயுவும் உண்டு. இவை தான் ஒரு அணு உருவாக காரணிகள்.  ஆகவே தான் சனியின் தன்மை கர்மாவை தரும் காரணியாக இருந்து கர்ம காரகனாக இருக்கிறார். அவர்  தயவு இல்லாமல் ஒரு கர்மாவும் நடை பெறாது.     அவரவர் கர்ம வினைகளைக்கேற்ப தான் பலன்களை தருவார்  செய்வார். சனி நல்லது செய்ய வேண்டும் என்றால் அதை அவர் குருவின் மூலமாக அல்லது லக்ன சுபர் மூலமாகத்தான் செய்வார்.

சனீஷ்வரனுக்கு வேலைக் காரன் என்ற பெயரும் உண்டு.  அதாவது ஒரு ஜாதகருக்கு வேலையை தருவதே இவர் தான். என்ன தான் ஜாதகத்தில் பத்தாம் பாவம் ஒருவரின் தொழிலை பற்றி தெரிந்து கொள்வது என்றாலும் அந்த தொழிலில் அவர் எப்படி செயல் படுவார் என்பதை சனியின் இருப்பிடத்தை வைத்து தான் தெரிந்து கொள்ளவேண்டும்.

ஒரு ஜாதகத்தில் சனீஷ்வரன் பலம் பெற்றாலும் சரி அல்லது பலம் பெறாவிட்டாலும் சரி அவர் தன் நிலையில் இருந்து சற்று விலகாமல் அவரவர் கர்ம வினைக்கு ஏற்ப பலா பலன்களை எவ்வாறு தரவேண்டுமோ அவ்வாறு தருவார். நல்ல கர்ம வினை உள்ளவர்களுக்கு நல்ல பலன்களையும் அது சரியில்லாதவர்களுக்கு கஷ்ட பலன்களையும் தருவ்வார்.  அதாவது தர்ம நியாபடி நடப்பவர்களுக்கு சனீஷ்வரன் தன் ராசி பெயர்ச்சியால் எந்த ராசியில் நின்றாலும் அவர்களுக்கு நல்ல பலன்களை தான் தருவார்.   

அதாவது ஒவ்வொருவரும் தான் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.   தினமும் நாம் ஈடுபடும் அத்துனை கர்மாவுக்கும் சனியே பிரதானமாகிறார். ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஆன்மீகத்தில் உள்ளவர் இல்லாதவர் அதாவது இறை பக்தி உள்ளவர் இல்லாதவர்.  அது எவராக இருந்தாலும் தன் ஒழுக்கத்தில் இருந்து தவறுபவராக இருந்தால் அதற்குறிய  தண்டனையை தருபவர் சனீஷ்வரன் தான்.   

சனீஷ்வரன் நம் சூரிய குடும்பத்தில் கடைசி வட்டத்தில் இருப்பவர் . அதனால் அவர் ராசி சக்கரத்தை சுற்ற எடுத்துக் கொள்ளும் காலம் முப்பது வருடங்கள் ஆகிறது. அதாவது ஒரு ராசியில் முப்பது மாதங்கள் இருப்பார்.  சனீஷ்வரன் எட்டில் நின்றாலும் மீன ராசியில் இருந்தாலுமாஆயுள் தீர்க்கம் உண்டு என்பார்கள்.  ஆனால் அப்படி இல்லாதவர்களுக்கு ஆயுள் குறைவாக இருக்கிறதா. அப்படி இல்லை.  கர்மா கணக்கு சீக்கிரம் தீர்ந்தவர்களுக்கு எதற்கு அதிக ஆயுள்.  ஆயுள் அதிகம் என்றாலே அதற்கேற்ப அதிக கஷ்டட்தையும் அனுபவிக்க வேண்டுமல்லவா.  

சனீஷ்வரனின் வீடுகளான மகரம் கும்பம் இரண்டுமே அருகருகே இருப்பதால் மேஷ லக்னத்தில் இருந்து மீன லக்னம் வரை ஒவ்வொரு ராசிக்கும் சனீஷ்வரனின் வீடு ஒரு சுப வீடாக வரும். ஆகவே ஒவ்வொரு லக்னத்திற்கும் அவர் சுப பலனை தந்துதானே ஆகவேண்டும்.  ஒருவரின் வாழ்க்கையில் கிட்டதட்ட பதினெட்டும் ஆண்டுகள் அவர் சஞ்சரிக்கும் ராசிக்கு ஏற்ப,  விரய சனி, ஜன்ம சனி, குடும்ப சனி, அர்த்தஷ்டம சனி, களத்திர சனி, அஷ்டம சனி, கண்ட சனி என்கிற ரீதியில் பலன்களை தருவார்.  அது சிலருக்கு சுப பலனையும் தருவார், சிலருக்கு அசுப பலனையும் தருவார்.  அதனால் அவருக்கு பெயர் கர்மாதிபதி என்று பெயர்.  ஆகவே இந்த கர்மாதிபதி தன் கர்ம பலனை சுபமாக தரவேண்டும் என்றால் தர்மாதிபதி எனும் குருவோடு தொடர்பு வேண்டும்.  ஆகவே ஒருவர் ஜாதகத்தில் சனியும் குருவும் தொடர்பில் இருந்தால் அவருக்கு கோசாரத்தில் சனி எந்த பாதிப்பையும் தரமாட்டார்.
அல்லது அவருக்கு ஜாதகத்தில் அவரின் பூர்வ புண்யாதிபதி அல்லது பாக்யாதிபதி தொடர்பு இருந்தால் நல்லது.  ஒருவருக்கு தொழில் சரியாக போகவில்லை என்றால் அதற்கும் சனீஷ்வரன் தான் காரணம், ஒருவருக்கு உடல் நிலை கஷ்டப்படுத்துகிறது என்றால் அதற்கும் சனீஷ்வரன் தான் காரணம் என்று சொல்லியே பழக்கப்பட்டு விட்டோம்.  ஒரு குடும்பத்தில் ஒரு பிள்ளை கருப்பாக பிறந்து விட்டால் அதற்கும் காரணம் சனீஷ்வர்ன் தான். அவனை கூப்பிடும் போதெல்லாம் சனியனே என்றுதானே கூப்பிடுவார்கள்.   தனக்கு சுக்ர தசா வந்தால் மகிழ்ச்சி என்பதாக நினைக்கும் மனம் சனி தசா வந்தால் கஷ்டப்படுத்துகிறது.   

கிரகங்களின் பலத்தை பற்றி நுணுக்கமாகச் சொல்லப் போனால் உச்சம் பெறும் அனைத்துக் கிரகங்களும் நமக்கு நன்மை செய்யும் என்றால் நமது ஞானிகள் சுபக்கிரகங்கள் பாபக் கிரகங்கள் என்று கிரகங்களை இரண்டு பிரிவாக பிரித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.  ஏன் என்றால் சிலருக்கு செவ்வாயும் லக்னாதிபதியாக வருவார்.  சனீஷ்வரனும் லக்னாதிபதியாக வருவார்.  சூரியனும் லக்னாதிபதியாக வருவார். சனீஷ்வரனின் வீட்டில் தான் செவ்வாய் உச்சமாகிறார்.  ஆனால் ஒரு சுபரான குரு அங்கு நீச்சமாகிறார்.  ஒரு சுபரான சுக்ரன் வீட்டில் தான் பாபர் எனும் சனீஷ்வரன் உச்சமாகிறார்.  ஆகவே எவரும் சுபரும் இல்லை. பாபரும் இல்லை.

ஆகவே சனிப் பெயர்ச்சி எனும் காலங்களில் மனம் தளராமல் தன் வேலைகளை நன்றாக செய்து வந்தாலே அதுவே சிறப்பை கொண்டு வரும். கோசார ரீதியாக சனிப் பெயர்ச்சி அவரவர் லக்னத்திற்கோ, ராசிக்கோ பாதகமான இடத்தில் சஞ்சரித்தாலும் அவரவர் ஜாதக ரீதியாக தசா புத்திகள் நன்றாக நடந்தால் பாதக பலன் குறைவாகதான் இருக்கும். தசா புத்தி சரியாக இல்லாதவர்களுக்கு சற்று பாதக பலன்கள் ஏற்படலாம். ஆகவே பொதுவான பரிகாரமாக அங்க ஹீனமானவர்களுக்கு உதவி செய்வது.  தன்னை விட தாழ்ந்தவர்களுக்கு உதவி செய்வது.  வாரம் தவறாமல் எண்ணெய் தேய்த்து குளிப்பது.  நள புராணம் வாசிப்பது, கேட்பது.  சனீஷ்வர காயத்திரியை தினம் 108 முறை ஜபிப்பது.  ஹனுமன் ஸ்லோகம் சொல்வது.   தன் வீட்டில் உள்ளோர் காலணிகளை தினமும் துடைத்து வைப்பது, வெளியில் சென்று வரும் போது காலை நன்கு கழுவிக் கொள்வது ,  குரங்குகளுக்கு வாழை பழம் வாங்கி தருவது, ஆகியவை செய்யலாம்.

பொதுவாக, ஜன்ம சனி நடப்பவர்கள் திருகொள்ளிக் காடு, திருநள்ளாறு சனீழ்ஹ்வரன் கோயில், சுசீந்திரம் ஆஞ்சநேயர் கோயில், தர்மராஜா கோயில் ஆகிய இடங்களுக்கு சென்று ஜன்ம நக்ஷத்திரம் அன்று வழிபாடு செய்து நலம் தரும்.

என்னடா இது  எல்லோரும் சனீஷ்வரனை கெட்டவராகவே சொல்லும் போது இவர் நல்லவராகவே சொல்கிறாரே என்று நினைப்பீர்கள்.  சனீஷ்வரனை போல் கொடுப்பார் இல்லை.  காலபுருஷனின் ஜீவனாதிபதி லாபாதிபதி ஆவார் சனீஷ்வரன்.  ஆகவே சனீஷ்வரனை துதித்து சகல சங்கடங்களையும் போக்கவேண்டும் என்று வேண்டி பிராயச்சித்தம் செய்யுங்கள். எல்லோருக்கும் சனீஷ்வர பகவான் நன்மையே செய்வார்.
வாழ்க வளமுடன். 
அன்புடன்
சிரோண்மனி ஸ்ரீரங்கம் கிருஷ்ணன்

பாரம்பர்ய ஜ்யோதிஷ் வித்யா பீடம்.