Wednesday 21 March 2018

சனிபகவானை பற்றி புராணம் என்ன சொல்கிறது .
பொதுவாகவே நாம் சனி பகவானை  சனீஸ்வரன் என்று அழைக்கிறோம்.  ஆனால் அவருக்கு அது பெயரல்ல.  அவர் பெயர் சனைஸ்சரன் என்று பெயர்.  அதாவது சனைஸ்சரஹா என்றால் மெதுவாக விந்தி விந்தி நடப்பவன் என்று அர்த்தம். சனியின் கோள் குருவுக்கு அடுத்த பெரிய கோள். அதிக வாயுவை உடையது. அதில் இருந்து நீல நிற கதிர்கள் வெளிப்படுகிறது.  சூரியனின் கடைசி வட்டத்தில் இருப்பதால் சூரியனை சுற்றி வர அதிக காலம் எடுத்து கொள்கிறார்.  அதனால் தான் சனி பகவானை நொண்டி, வயதானவன், அழுக்கானவன் என்கிறோம்.
ஒரு முறை இராவணன் தன் மனைவி கர்ப்பமான சமயத்தில் அவனுக்கு பிறக்கப் போகும் குழந்தை சிரஞ்சீவியாய் மரணம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நவக்கிரஹங்களை சிறையிலிட்டு அவன் அனுமதி தரும் வரை அவன் சொல்லும் இடங்களில் நிற்க வேண்டும் என் உத்தரவிட்டான்.  இது தர்மத்திற்கு மீறிய செயலாக இருக்கிறதே என கொதித்த பிரஹஸ்பதியான குரு அசுர குருவான சுக்ராச்சாரியாரிடம் சொல்ல , அவரோ, நான் என்ன செய்வது என்னையும் சிறையிலிட்டு விட்டானே என் வினவ , குருவோ, சனியை பார்த்து சற்று நகர்ந்து நிற்க சொல்கிறார் . சனி அதற்கேற்ப தன்னை நிற்க வைத்த மீன ராசி மண்டலத்தில் இருந்து தன் கால மேஷ ராசி மண்டலத்தில் வைக்க முயல்கிறார்.
அதை பார்த்த இராவணன் தன் கதாயுதத்தால் சனியில் காலை தாக்குகிறார்.  அதில் காலில் அடி பட்ட சனி பகவான நிலை குலைந்து மேஷ ராசியில் விழுந்து விடுகிறார்.   ஆகவே தான் சனி பகவான்  பலமிழந்து மேஷத்தில் நிற்கிறார்.  இதனால் கோபம் கொண்ட சூர்ய பகவான் தன் மகனை காப்பாற்ற அதிக கோபக் கனலோடு தன் மகனை தாங்கி பிடிக்கிறார். ஆகவே தான் சூரியன் மேஷத்தில் உச்சமாகி தன் மகனின் நீச்சத்தை அதாவது பலவீனத்தை போக்குகிறார். 
அதை போல் புராணக் கதைகளின் படி, சனி பகவானுக்கு ஆஞ்சநேயர் என்றால் பயமாகும். அதனால் ஆஞ்சநேயர் மந்திரங்கள் படித்தால், சனியின் தாக்கங்கள் குறையும் என நம்பப்படுகிறது.
                                                                 


ஒரு முறை தன் கால சுழற்ச்சியின் படி சனிபகவான் அனுமனை பிடிக்க வேண்டிய நேரம் வந்தது.   அந்த நேரத்தில் தன் பகவான புனர் பூச நக்ஷத்திரத்தில் உதித்து அந்த ராசி நாதன் உச்சமாக நிற்கும் கடக ராசியில் உதித்த ராம சந்திர மூர்த்தி இராவணனோடு யுத்தம் புரிய இலங்கைக்கு செல்லும் பாலம் அமைக்கும் பணியில் இருந்தார்.
அவரை கண்ட சனி பகவான், ஹனுமனே நான் உன்னை பீடிக்கும் காலம் வந்திருக்கிறது.  ஆகவே நான் உன்னை பிடிக்கப் போகிறேன் என்றார்.  அதற்கு ஹனுமனோ, நான் இப்போது என் பகவானுக்காக ஒரு பணியில் இருக்கிறேன். பிறகு வா என்கிறார்.  அதற்கு சனி பகவான், அது முடியாது நான் எனக்கு இட்ட பணியை செய்ய வேண்டும் என்கிறார்.
சரி எவ்வளவு நாள் என்னுள் இருப்பாய் என்கிறார்.  அதற்கு ஏழரை வருடம் என்கிறார் அது முடியாது நான் என் பிரபுவின் வேலையை அவ்வளவு காலம் தள்ள முடியாது என்று சொல்ல, கடைசியில் ஏழரை நாழிகை பீடிக்க ஒப்புக் கொள்கிறார்.
உன் உடலில் ஏதாவது ஒரு பகுதியை சொல் அங்கு ஏழரை நாழிகை இருந்துவிட்டு போய்விடுகிறேன்” என்றார். “கடமையைச் செய்து கொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்தல் தவறு. அதனால், தலையில் உட்கார்ந்து கொள்” என்றார்.
சனி பகவானும் ஏறி அமர்ந்தார். பாலம் அமைக்கும் வேலையில் மும்முறமாக இருந்த ஹனுமனோ தன் தலையில் கற்களையும் மலைகளையும் மாறி மாறி தலையில் ஏற்றி கடலில் போட்டு பாலம் அமைத்து கொண்டிருந்தார். இதன் வேதனையை தாங்காத சனி பகவான்அலறினார். “சொன்ன சொல் தவறக்கூடாது.இரண்டரை மணி நேரம் கழித்து தான் இறங்க வேண்டும்” என்றார் அனுமன். அத்தனை வேதனையும் பொறுத்துக் கொண்டு எழரை நாழிகை முடிந்த பிறகு  இறக்கிவிட்டார். “ராம பக்தர்களையும் ஆஞ்சநேய பக்தர்களையும் இனி தொடுவதில்லை” என்று கூறிவிட்டு அகன்றார் சனீஸ்வரன்.  அதற்கு பிரதி பலனாக,உடல் அங்க ஹீனமானவர்களை அனுமன் மிகவும் நேசிப்பான்.அவர்களுக்கு உடல் சக்தியை பெருக்கி தருவான். சனியின் தான்யமான உளுந்தில் செய்த வடை அனுமனுக்கு பீரிதியாகிறது. 


ராம நாமத்தையும் ஆஞ்சநேயர் மூல மந்திரங்களை 108 தடவை உச்சரித்து விட்டு எங்கு சென்றலும் அது நன்மையாக இருக்கும் நினைத்தது நடக்கும்.
ஜன்ம சனி நடப்பவர்கள் பிறர் பார்க்க ஒரு சிறு கல்லை எடுத்து ராம நாமத்தை சொல்லி  தன்னுடனே வைத்துக் கொண்டால் பாதிப்பு குறையும்.   
ஜாதகத்தில் சனிபகவானின் வீடுகள் இரண்டும் அருகருகே இருக்கும்.  அவரின் இரண்டு பக்கமும் குருவின் வீடுகள்.  நில ராசி, காற்று ராசி இரண்டுக்கும் சம்பந்தப்படும் கிரஹம் சனி பகவான். அதேபோல் இந்த இரண்டுக்கும் சம்பந்தப்படும் தெய்வம் ஹனுமான் ஆவார்.  ஆகவே கடல் தாண்டி வேலைக்கு செல்பவர்கள் ஹனுமனை வேண்டிக் கொண்டால் அவர் எந்த தடையையும் அகற்றி நல்ல படியாக முடித்து வைப்பார்.
அதேபோல் மூலத்தில் பிறந்தவர்களையும்,  புனர்பூசத்தில் பிறந்தவர்களையும் சனி பகவான் ஒன்றும் செய்வதில்லை. கணவன் மனைவி பிரிவில் இருப்பவர்கள் ஹனுமனை வேண்டிக் கொண்டால் பிரிவு நீங்கி ஒன்று சேர்வார்கள்.  ஜாதகத்தில் ராகுவும் கேதுவும்தான் திருமண பிரிவை தருவார்கள்.  ஜாதகத்தில் இவர்களின் மூலதிரிகோண வீடுகள் சனி பகவானின் வீடுகளாக இருப்பதால் சனிபகவானுக்கு பிரியமான ஹனுமனை வேண்டிக் கொண்டால் திருமண பிரிவு நீங்கி விடும்.
இன்னும் வரும்.
அன்புடன் ……………  ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்.  Ph: 9094176198     

 Top of Form
யோதிஷ் வித்யா பீடம். 

No comments:

Post a Comment