Thursday 30 June 2016


கால சர்ப்ப தோஷம் ………………………………… தொடர்ச்சி




கால சர்ப்ப தோஷம் பற்றி ஏற்கனவே பார்த்தோம்.   ராகு கேதுவின் அச்சிற்க்குள் அனைத்து கிரஹங்களும் லக்னம் உட்பட அமர்ந்து விட்டால் எப்படி பட்ட நிலைமை இருக்கும். அதன் வகை எவ்வளவு, ஒவ்வொரு வகை கால சர்ப்ப தோஷங்களும் எந்த காலத்தில் யோகத்தை தரும் என்பதையும் பார்த்தோம்.  இப்போது, அந்த அச்சிலிருந்து லக்னம், ஒவ்வொரு பாவதிபதியும் விலகி நின்றால் என்ன பலன் என்பதை பார்ப்போம்.

ராகு கேது பிடியில் இருந்து லக்னம் மட்டும் விலகி வெளியே நின்றால் தன் சொந்த உழைப்பாலேயே முன்னுக்கு வரமுடியும். சரியான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்காமல் கஷ்டப்படுவார்கள்.  தந்தையின் குணத்தில் இருந்து மாறுபட்டவர்களாக இருப்பார்கள்.   சில சமயங்களில் குடும்ப உறுப்பினர்களால் அவமானப்படுத்த படுவார்கள்.  சுய சார்பு அற்றவர்களாக இருக்க வேண்டி வரும்.  லக்னாதிபதி மட்டும் விலகி நின்றால் அந்த கிரஹ காரகத்துவம் சார்ந்த விஷயங்களில் தன்னிறைவு அற்றவர்களாக இருப்பார்கள்.  மெடிடேஷன், யோகா போன்ற மன அமைதி தரும் விஷயங்களால் பாதிப்பை குறைக்கலாம்.

இரண்டாவது பாவாதிபதி மட்டும் விலகினால் குடும்ப உறவுகளால் பண பிரச்சனை எப்போதும் இருக்கும். அதற்க்காக அடிக்கடி வேலை மாறுவார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத சூழ் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.ஆகவே யாருக்கும் உத்திரவாதம் கொடுக்காமல் இருப்பது நல்லது. முக்கியமாக ஜாமீன் தராமல் இருப்பது நல்லது. கண்ணில் சதை வளர்ந்து அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிலை ஏற்படும். எந்த விஷயத்திலும் தலையிடாமல் இருப்பது பாதிப்பை குறைக்கும்.

மூன்றாம் பாவாதிபதி மட்டும் விலகி நின்றால் இளைய சகோதரர்களால் அதிக பிரச்சனைகள் ஏற்படும். அவருக்காக கடன் பட வேண்டிய சூழல் ஏற்படும்.    வேலை விஷயமாக அடிக்கடி பயணம் ஏற்பட்டு உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும்.  வதந்திகளால் அதிக பிரச்சனைகளுக்கு ஆளாவார்கள்.  இவர்கள் மற்றவரிடம் பேசும் சாதாரண பேச்சு கூட பெரிய பிரச்சனையாகி இவர்களை தாக்கும். அந்த சமயத்தில்,  கூட வேலை செய்பவர்கள் கூட உதவி செய்யாமல் விலகுவார்கள்.  தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தால் பிரச்சனை வராது.

நான்காம் பாவாதிபதி மட்டும் விலகினால் இதயம் நுறையீரல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு.   சரியான சாப்பாடு, உறக்கம் இல்லாமல் சுகம் கெடும்.   வண்டி வாகனங்களால் அதிக செலவுகள் ஏற்படும்.  அதேபோல், வீட்டின் மராமத்து செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழல் எற்பட்டு சொத்து விரயமாகும்.  தாய் வழி பூர்வீக சொத்துக்களில் வில்லங்கம் ஏற்பட இவரே காரணமாக இருப்பார்.  வரவுக்கு ஏற்றபடி செலவு செய்ய பழகிக் கொள்வது நல்லது.

ஐந்தாம் பாவாதிபதி மட்டும் விலகினால் (ஷேர் மார்க்கெட்), பங்கு வர்த்தகத்தில் , ரேஸ், லாட்டரி போன்றவைகளில் பணம் விரயமாகும்.  பாட்டனார் சொத்துக்கள் நிலைப்பது  கஷ்டம்.  தன் புகுந்த வீட்டு உறவுகள் விரோதியாவார்கள்.  குழந்தைகளின் தவறான போக்கால் சமூகத்தில் தலை குனிவு ஏற்பட வாய்ப்புண்டு.  பிள்ளைகளை கவனமாக வளர்ப்பது பெரிய பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.

ஆறாம்பாவதிபதி மட்டும் விலகி நின்றால் உடலி நோயின் தாக்கம் அதிகம் இருக்கும்.  அதிகமான கோர்ட் வழக்கு என்று அலைச்சலை கொடுக்கும்.   அதிக கடன்களால் காவல் துறை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் சிக்க நேரிடும்.   சொத்து விஷயங்களில் சொந்தங்களே கோர்ட்டுக்கு இழுப்பார்கள்.  விட்டு கொடுத்து வாழ்வது நல்லது.   
  
ஏழாம் அதிபதி மட்டும் விலகி நின்றால்  தொழில் கூட்டாளிகளால் அதிக பிரச்சனை ஏற்பட்டு தொழில் முடங்கும். அந்நிய தேசத்தில் பாதிப்புகள் ஏற்படும்.  கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் ஏற்பட்டு குடும்ப வாழ்வு சந்தோஷம் இல்லாமல் இருக்கும்.  கூட்டுத்தொழில் செய்யாமல் இருப்பது நல்லது.  குடும்ப உறவு சார்ந்த உறவுகளை வியாபாரத்தில் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

எட்டாம் பாவாதிபதி மட்டும் விலகி நின்றால் குடும்ப தொழிலில் அதிக நஷடம் எற்படும்.  வரவை விட செலவு அதிகமாகி அதனால் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் ஏற்படும். மனைவியின்  வார்த்தைகள்  மனதை ரணமாகும்.  நிம்மதி குறையும்.  திடீரென்று விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த பாவாதிபதியின் திசை புத்தியில் மரணத்திற்கு ஒப்பான கண்டம் ஏற்பட வாய்ப்புண்டு.

ஒன்பதாம் அதிபதி மட்டும் விலகி நின்றால் தந்தையின் உடல் நிலை பாதிப்பு ஏற்படும்.  குல தெய்வம் வீட்டில் தங்காத சூழ்நிலை ஏற்படும்.  ஆகவே குல தெய்வ வழிபாடு  அவசியம் செய்ய வேண்டும்.   தன்னை சார்ந்த சமூகத்தில் கெளரவ பங்கம் ஏற்பட வாய்ப்புண்டு.  தெய்வ திருப்பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டால் பாதிப்பு குறையும்.  அதில் தடை தாமதங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. 

பத்தாம் அதிபதி மட்டும் விலகினால் தன் களத்திரத்தின் மாமியார் வகையில் மனக் கவலை ஏற்பட வாய்ப்புண்டு.  செய்தொழில் சரியாக நடக்காமல் லாபங்கள் குறையும்.  பெயர் புகழ் குறையும்.  குடும்ப உறவுகளை மதித்தி நடந்தால் பாதிப்பு குறையும்.

பதினோராம் அதிபதி மட்டும் விலகினால் மனதில் ஏற்படும் ஆசைகள் நிறைவேறாது.  வேலையில் வரும் வருமானத்தினால் குடும்பத்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு கடன் பட நேரிடும். குடும்ப சொத்து விஷயமாக மூத்த உடன் பிறப்போடு வம்பு வழக்குகள் ஏற்படும்.  சில சமயம் அவருக்காக சொத்து விரயமாகும். தாயின் உடல் நிலை கெடும்.  தனக்கு கிடைத்ததை மட்டும் ஏற்று வாழ பழகிக் கொள்வது நல்லது.

பனிரெண்டாம் பாவதிபதி மட்டும் விலகினால் தூக்கம் கெடும்.   எதிலும் தடை தாமதங்கள் ஏற்படும்.  தேவையற்ற பழக்க வழக்கங்கள் ஏற்படும்.   அதிக பெண் போகம் ஏற்படும்.  வீண் செலவுகளால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு குடும்பத்தை பிரிய நேரிடும். நண்பர்கள் சேர்கையில் கவனமாய் இருந்தால் பாதிப்பு குறையும்.
அதாவது அந்த பாவ ரீதியான பாதிப்புகளும் ஏற்பட்டு அந்த கிரஹத்தின் காரகத்துவம் கெட்டுவிடும்.   

 ............................................................................அன்புடன்ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்         


Sunday 26 June 2016



களத்திரகாரகன்களத்திர சுகத்தை
தருகிறானா பாதிக்கிறானா.

Image result for Love rose

சுக்ரன் , இந்த பெயரை கேட்டவுடனே ஒவ்வொருவர் மனதிலும் முகத்திலும் ஏழுச்சியும் மலர்ச்சியும் இருக்கும்.   ஆமாம் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் எதிர்பார்பது பணம் , வசதியான வாழ்க்கை, கார், பங்களா, சொகுசு வாழ்க்கை அழாகான மனைவி.  இதற்கெல்லாம் காரண கர்த்தாவான காரகர் அவர்தான்.ஜாதகத்தில் இவருக்கு பாக்யகாரகர் என்று பெயருண்டு.   தன் கஷ்டங்களுக்கெல்லாம் விடிவு சுக்ர தசை, சுக்ர புத்தியில் கிடைக்குமா என்று தான் எல்லோருமே எதிர்பார்பார்கள்.  ஜாதகத்தில் சுகஸ்தானம் என்ற இடத்திற்கு இவரே உரிமையாளர்.   அதிபதி யாரக இருந்தாலும் அங்கு இவர் ஸ்தான பலம் பெற்று விட்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.  ஜாதகத்தின் சுப பாவங்களான 2,4,5,7,9,11 இடங்கள் இவர் பலமாக இருந்தால், குடும்ப மகிழ்ச்சி, அறுசுவை போஜனம், அடுத்தவரை கவர்ந்திழுக்கும் முக லட்சணம், இனிக்க இனிக்க பேசும் தன்மை,  வீடு வண்டி, வாகனம் போன்ற சுக வசதிகள்,  நல்ல குழந்தைகள், மனைவியால் வருமானம்,  நல்ல களத்திரம் ,  பெருஞ் செல்வவளம், தன் ஆசைகளையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ளும் திறன் பாகயங்கள் எல்லாம் கிடைக்கும் வாழ்க்கை ஆகியவை  இருக்கும்.  இவர் கெட்டுப்போனாலோ, நீச்சம் பெற்றாலோ வாழ்க்கையில் அத்தனை சுகமும் போய்விட்டதே என்று அல்லல் படும் வேதனை .  ஒருவரின் வாழ்க்கையை இன்பமாகவும், துன்பமாகவும் மாற்றுவதில்  ஜாதகத்தில் இவருக்கு பெரும் பங்குண்டு.  
ஒரு ஜாதகத்தில்  ஏழாமாதியை விட அதற்கு காரகத்துவ கிரஹமான சுக்ரன் அதிக முக்யத்துவம் பெறுகிறார்.   சில ஜாதகங்களில் ஏழாம் அதிபதி பலவீனமாக இருந்தாலும் காரகரான சுக்ரன் பலமாக இருந்தால் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கிறது.  சில ஜாதகங்களில் ஏழாம் அதிபதி பலமாக இருந்தாலும் காரகரான சுக்ரன் பலவீனமாக இருந்து விட்டால் அவரின் திருமண வாழ்க்கை நன்றாக இருப்பதில்லை.   மேலும், கால புருஷனுக்கு எட்டாம் வீடான விருச்சிகத்தில் களத்திரகாரகர் சுக்ரன் அமர்ந்தால் அந்த இடம் சரியான இடமாக அவருக்கு இருப்பதில்லை.  ஏன் என்றால் அவரின் மூலதிரிகோண வீடான துலாத்திற்கு அதாவது கால புருஷனுக்கு எழாவது இடமான துலாம் சர ராசியாக இருப்பதாலும் அதற்கு விருச்சிகமும் மேஷமும் மாரக ஸ்தானமாக இருப்பதாலும் விருச்சிகம் அவருக்கு பாதகத்தை ஏற்படுத்தும் இடமாக இருக்கிறது.   மேலும் கால புருஷனுக்கு ஏழாம் அதிபதி சுக்ரனுக்கு எட்டாம் வீடான விருச்சிகம் மறைவு ஸ்தானமாகும் . எனவே களத்திரகாரகனோ, எந்த லக்னத்திற்கும் களத்திர ஸ்தான அதிபதியோ விருச்சிகத்தில் அமராமல் இருப்பது திருமண வாழ்க்கையில் பிரச்சனை தராமல் இருக்கும்.

பலமான சுக்ரன் லக்னத்தில் கேதுவோடு இருந்து அதற்கு ஏழில் இருக்கும் ராகு களத்திரத்திற்கு நோயை கொடுத்து, அதன் பார்வையால் கேதுவோடு சேர்ந்த சுக்ரனை பாதித்து ஜாதகரை அந்த சுகத்தை அனுபவிக்காமல் செய்து விடும்.
இரண்டில் இந்த சுக்ரன் பலமிழந்து நின்றால்   தன வருவாயை கெடுத்து  குடும்ப மகிழ்ச்சியை இழக்க வைத்து விடும்.  சில சமயம் மனைவி குடும்பத்தை விட்டு பிரிந்து போய்விடுவாள்.
மூன்றில் இந்த சுக்ரன் பலமிழந்து நின்றால் வீரியத்தை குறைத்து, தாம்பத்ய சுகத்தை எட்ட விடாமல் செய்து விடுவதோடு,  மனைவியோடு ஒத்து போகாத தன்மையை கொடுக்கும். பரத்தையர் சகவாசத்தை ஏற்படுத்தும்

நான்கில்  பலமிழந்து நின்றால்,  வீடு வண்டி ஆகியவற்றால் நஷ்டங்களும், தாயின் ஆசைகளை நிறைவேற்ற முடியாத நிலையை ஏற்படுத்தும்.  இங்கு இவர் செவ்வாய், ராகு அல்லது கேதுவோடு சேர்ந்தால் மண வாழ்க்கையை முறித்துவிடும்.  மனைவியை இரண்டாவது முறை மணக்க வேண்டும். அதாவது இரண்டாவது தாலி கட்ட வேண்டும்.

ஐந்தில் பலமிழந்து நின்றால் பணம் சம்பாதிக்க மனதை குறுக்கு வழியில் செலுத்தி, அதனால் அடுத்தவர் பணத்தை தனதாக்கி கொள்ளும் குணத்தை தரும்.  ரேஸ், லாட்டரி, சூதாட்டம் போன்ற விஷயங்களில் ஆசையை தூண்டும்.  பெண் குழந்தைகளுக்கு இள வயதில் நோயை தரும்.  பெண் ஜாதகத்தில் இங்கு ராகுவோடு சேரும் சுக்ரன் கர்ப்பப்பை கோளாறுகளை தரும்.

ஆறாம் பாவத்தில்  சுக்ரன் பலவீனமானால்  ஜாதகருக்கு அதிக காம இச்சையை தூண்டி அதிக பெண் போகத்தை கொடுத்து பால் வினை நோயை தரும். இங்கு இவர் நீச்சமானால ஜாதகரின் உடம்பில் அந்த நோயால் துர்நாற்றம் வரும். ஜாதகரின் துணைக்கு இரண்டாம் திருமணத்தை ஜாதகரே செய்து வைக்ககூடிய நிலைமை ஏற்படும். 

ஏழாம்பாவம் பாவம் மற்றும் எட்டாம் பாவத்தில்  சுக்ரன் பலமும் இல்லாமல், பலவீனமும் இல்லாமல் இருந்தால் களத்திரதோஷமாகும்.  ஆனால் இங்கு பலவீனமானால் அந்த தோஷம் அடிபட்டு போய்விடும்.  தோஷத்தை தரும் அதாவது காரக பாவ நாஸ்தியை தரும் இடத்தில் அந்த காரகன் பலவீனப்பட்டு கெட்டால் ராஜ யோகத்தை தந்து விடுவான்.  சிலருக்கு திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையில் உயர்வான நிலை ஏற்படும். ஆனால் மனைவியை ஜாதகர் தன் தொழிலில் பங்குதாரராக சேர்த்துக் கொள்ளக்கூடாது. இருப்பத்தி ஐந்து வயதிற்க்கு முன்பாக திருமணம் செய்து கொள்ளக் கூடாது.   தனிக் குடித்தனம் கூடாது.

ஒன்பதாம் பாவத்தில் சுக்ரன் பலவீனப்பட்டால் மனைவியுடன் சகோதரியோடு ஒரே வீட்டில் வசிக்காமல் இருப்பது நல்லது.   சில சமயம் மனைவியின்சகோதரியை இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும் நிலைமை ஏற்படும்.  ஜாதகரின் தந்தைக்கு இரண்டு சம்சாரம் இருக்க வாய்ப்புண்டு. 

பத்தாம் பாவத்தில் சுக்ரன் பலவீனமானால் செய் தொழிலில் நஷ்டம் ஏற்படும்.  சாதாரணமாகவே பத்தாவது கேந்திரம் சுக்ரனுக்கு நல்ல கேந்திரம் இல்லை.   சொத்தை தொழிலுக்காக அடமானம் வைத்து நஷ்டப்படுவார்கள்.   சிலபேர் மனைவியால் ஏற்படும் அதிக செலவுகளால் குடும்பத்தை சமாளிக்க முடியாமல் கடன் வாங்கி கஷ்டப்படுவார்கள்.

பதினோராம் பாவத்தில் பலவீனமானால் ஜாதகரின் ஆசைகள் நிறைவேறுவது கடினமாக இருக்கும்.  தன் குழந்தைகளின் திருமண வாழ்க்கையில்  ஏற்பட்ட பிரச்னைக்காக சிலர் கோர்ட் செலவுகளால் அதிக துன்பத்தை அடைவார்கள். 

பனிரெண்டாம் பாவத்தில் சுக்ரன் பலவீனமானால் ஜாதகருக்கு தன் வீட்டில் படுக்கை சுகம் கிடைப்பது அரிது. அதாவது ஜாதகருக்கு நிம்மதியான தூக்கம் இருக்காது.  இங்கு பலவீனப்பட்ட சுக்ரனோடு சனி சேர்ந்தால் சட்ட சிக்கல்கள் ஏற்பட்டு சிறை வாசம் ஏற்பட வாய்ப்புண்டு.   

இப்படி சுக்ரன் பலவீனப்பட்டால் ஸ்ரீரங்கம் சென்று கொள்ளிடம் ஆற்றில் பசும் பால் ஊற்றி அதில் குளித்து பரிகாரம் செய்து கொள்வது, வெள்ளிக்கிழமைகளில் லக்ஷமி பூஜை செய்வது, வீட்டில் விளக்கு பூஜை செய்வது, பசுவிற்கு உணவளிப்பது, லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது, ஏழை பெண்களுக்கு அன்ன தானம் செய்வது, மகாலக்ஷ்மி கோயிலுக்கு விளக்கிற்கு நெய் வாங்கி தருவது.   சோளிங்கர் நரசிம்மர், ஆஞ்சனேயர் வழிபாடு செய்வது, விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது ,  வீட்டில் இந்த்ராக்ஷி, சிவகவசம் பாராயணம் செய்வது, பழனி சென்று அங்குள்ள போகர் சன்னிதி முன் அமர்ந்து தியானம் செய்வது,  ஸ்ரீ சக்ர பூஜை செய்வது, பெளர்ணமி அன்று சமயபுரம் மாரியம்மன் வழிபாடு செய்வது  ஆகியவை பரிகாரமாகும்.
இதை ஏந்த பாவத்தில் சுக்ரன் பலவீனமாக இருக்கிறாரோ, அதற்கேற்ப மேலே சொன்ன எதாவது ஒரு பரிகாரம் செய்வது நல்லது. அதை உங்கள் அருகாமையில் இருக்கும் ஜோதிடரிடம் கேட்டு செய்யவும்..  
………………………………………………………………அன்புடன் ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்.     


Tuesday 21 June 2016


Why do predictions go wrong?




They have to, when self-styled astrologers with superficial ideas shoot predictions from the hip or when those with incomplete knowledge and the intention to extort money, predict with nefarious and commercial motives. Astrology is growing in popularity; the media reflects, magnifies this trend. Big money is to be had from telecast of hyped up programs of predictions. People are waylaid and made to believe what, in a true sense, is not astrology. Wrong predictions are being unleashed on the gullible.
Predictions also go wrong when even the serious astrologer, at best, reaches a sketchy picture of things in store. We can perhaps with sincere study, arrive at a range of eighty percent knowledge of the subject. The balance twenty percent needs to be achieved by an astrologers' intuition and insights acquired through spiritual practices. The dasha of the astrologers at the time he is predicting is also important. Wrong predictions could also result from incorrect birth data provided by the client. And even a well-meaning astrologer could go wrong through an inadvertent manipulation of facts or principles.
In view of this, before announcing predictions, it is the moral duty of the astrologer to make his client aware of these limitations. This advice may appear unviable for the commercially inclined astrologers, but it makes for sustainable and credible astrology, and is an essential statutory warning for our trade for, like nuclear buttons and surgical instruments, some astrological predictions too leave deep scars. Astrology should therefore be allowed to be practiced by only those who are conscientious and have the stamp of qualification from a recognized training school.
Evidence of existence of Astrology

The evidence of it can be inferred from the great epic Ramayana where astrology is a continuing theme. Lord Rama some claim lived 900,000 years ago.  We have historical evidence of mundane astrology learning dabbled in during the times of Varahamihira, sixteen hundred years ago and in the court of Mughal Emperors Akbar and Jehangir 450 years ago.   


Good Fortune is ensured by good Karmas

The Gyan (Knowledge)- truth can be had from religious literature spread all over the world and accessible on the net too. Additionally astrology with its capacity to predict correctly brings conviction that it is the karmas alone that make or mar a destiny. A person with both spiritual advancement and astrological insight can decipher the design of destiny better than a person with one of them.  

Choice of Paths 

The course of destiny does not alter much. One can at best minimize or maximize the preordained by exercising free will. The agami (current) good karmas can minimize suffering and the bad ones maximize even the predestined. The jolts of sufferings of worldly life prompt many to switch paths. Some choose spiritual life when unable to cope with torments of the worldly life.

Astrology can make you responsible

By demonstrating correct horoscope readings astrology can make people realize that there is a destiny at work. When convinced  that every act gets registered with the power that make the  destiny, corrective steps can easily come  and make people  more responsible towards the society  Wisdom is born from objectively assessed mistakes. History too makes a person ise.  Astrology not only helps one to reflect on the past, present and future but also explains the cause of bliss and suffering.


********************************************

Monday 20 June 2016


ABHIJIT MUHURTHAM




The auspicious time for every good thing 

Whenever People to do any thing for their welfare they will go to a Astrologer to fix a good muhurtha  in a  auspicious day for the same so that they can have all the fruitful and positive  results from that function.  Astrology says that good muhurtha enhances the chances of success of the work. But sometimes people do not find auspicious muhurtha for their work,  should be done immediately  for which they don’t have time to fix it.  . In this circumstance people face problems as proper muhurtha is not available for performing the work. 


Present days  people are very busy. They have limited time to spend with their relatives and missing a good muhurtha for some important occasion can really cause problems. It is because all the relatives may not gather on same days. In this scenario the abhijiit muhurtha acts as a rescuer with all its auspiciousness. 

The aim of vedic astrology is to simplify the principles of the society and life by showing the auspicious path. That’s why people consider astrological principles to avoid the negative influences in their life. Abhijit muhurtha is a flexible astrological principle which relieves people if they perform an auspicious work in it. 

According to Vedic astrology there is a special muhurta called abhijit. This muhurat is auspicious for any work. Abhijit muhurtha is not special to any particular condition but it is present every day. Astrologers say that a day’s 8th muhurtha is called abhijit muhurtha. 

The total time of the abhijit muhurtha is  48 minutes.(Exactly one gati-Nazhigai) 24 minutes before and after the mid day Sun  is called the abhijit muhurat. Basically it stays up to 48 minutes but the duration may reduce if the day is shorter according to the Sun rise time and set time based on the tamil month rasi mana As the abhijit muhurtha is auspicious people opt for this muhuratha  to perform their work. Abhijit muhurtha safe guards a work even if the day is inauspicious. You can see nowdays the ploticians taking oath at this time. 


This abhijit Muhurtha is best for everything except for Upanayanam and Marriage.  At this 48 Minutes they Sun rays will fall the natives Rasi, Lagnam, and in the 10th house in which the Sun will give full energy to the native to have all the vitality strength  to get all the prospects in their ventures.


Peoples are confusing themselves between Abijit Muhurtha and Abijit Nakshathra.  Both are entirely difference.  Abhijit Nakshathra in vedic astrology is mixing of two nakshathra  i.e. Uthradam 3 and fourth patha and Thiruvonam 1st and 2nd patham. This combination is also a good day for doing good things.  This is the 28th Nakshathra in Vedic astrology and today it is vanished 

.............................................Astro Krushnan


Wednesday 15 June 2016


Kalapurusha and Human Karma





Kala purusha the ruler of the time factor who connects  the space , the time  and the period of incident happen to pin point the plus or minus in a Janana Chart.  (In Tamil it means Kaala desa Vartha Maanam)
One of the first things jyotish learn in astrology is the kalapurusha chart which has Mesha is the rising  lagna and the rest of the signs arranged in the remaining houses.  Kalapurusha is Time-personified, TIME itself viewed as a human being. I have always taken it to represent the horoscope of all human beings, in other words a generic horoscope of the human race!


Only human beings are concerned about or interested in astrology, in which they want to know about their  Karma,  The remaining fauna and flora are perhaps entirely devoid of karma because their fate is the responsibility of The Creator and those built in the image of the CREATOR!

Let us try and match attributes of the planetary rulers and the houses in this Aries-oriented kalapurusha chart and who knows, some interesting concordances might emerge.

Almost sans exceptions for most of earth-dwellers, to achieve success in material spheres be it money or fame or in spiritual spheres too, hard work and persistence and focused application of oneself is an absolute requirement. Initiative is certainly important as also is the willingness to assume responsibilities and taking risks. Physical and mental endurance are essential attributes. Remaining blasé and waiting for blessings to drop in ones lap is generally not a good strategy, or sometimes is not even an option. Little wonder that energetic Mars rules the FIRST house in the kalapurushas Chart  through its fiery, action-oriented sign, Aries.

Venus represents LOVE in its many shades including true love, unconditional   love, selfish love, all kinds of love. Some of us love our families, our acquisitions, our knowledge, even ourselves. Our personal possessions that we want to last forever and grow are ruled in the Chart by the fixed, earthy sign of Venus B vrishabha, in the SECOND house of the Kalapurusha Chart.



Communication  as well as efforts are the attributes of the third house. Through its airy sign Mithuna, budha or Mercury gets the portfolio of the THIRD house in the chart. Unlike the emergency-type response that Mars is proficient at, Mercury is fast at thinking on its feet. The mental agility is never unidirectional and involves strategy: knowing when to push forward, when to stay put and when to step back! Mercury is good at that, being the planet that is probably literally more often moving forward and retrogressing even in its astronomical journey up in the visible sky from our geocentric perspective.
The first house deals more with physical efforts, endurance, qualities that are possessed best by mars, but the third house indicates efforts that are of a mental nature. Initiative, careful planning and strategy basically are more the forte of Mercury who gets to be the ambassador of the third house. Some astrologers look at the 3rd for communication, travels, restlessness, all of which are Mercurys portfolio. 


From inner peace comes our sense of integrity and strength of character and this we learn from our first home and the second home in this lifetime. Our first home is inside our mothers womb. Our second home is the home where our first few years were spent, usually the home of our parents. Our nurturing, the sense of belonging, of being cared and our true sense of self-confidence comes from this house. Little wonder that we find that the FOURTH house in Kalapurusha chart is ruled by Moon, the Matrukaraka. In most cases, though fathers may give us a lot of brain food, much of our cultural, instinctive and emotional formation can be attributed to our mother, regardless of our gender, or culture and location!

The primary domain of the FIFTH house deals with poorvapunya , children  and creativity. Having the natural karaka for father, Sun,  rule over the fifth house in the Kalapurusha Chart  and natural karaka for children , Jupiter rule over the ninth house of the Kalapurusha chart  does make one halt and take notice. In fact if the fifth and ninth could be switched around so that Sun became the ruler of the 9th and Jupiter the ruler of the 5th their respective karakattwas would fit the bill perfectly!  However, that is not the case in the Kalapurusha Chart. Creative energy comes from an energy Source that is higher than us, and self-sustaining. The Sun represents that with its karakattwa being associated with the SOUL. While hard effort is required, creativity of the highest order and also  requires Devatha blessings.

Mercury comes back again ,  when we arrive at the SIXTH house. This house has three attributes associated with it clearly and almost unequivocally: service, sickness, enemies  and maternal uncle. I find it very interesting that Mercury which is undeniably an intellectual and information-type planet  is also associated with effort, service and work, in the third house of purushartha and now again in the sixth. It is also an important upachaya bhava and again the growth aspect of service and sickness as the human population ages (and so does Kalapurusha) makes sense. Most of the serving, and service oriented matters these days is based on the information management and nowadays a small cell phone is a key partner with human being and according to the communication house controlled by Mercury who is also the ruler of this house and those are managed by Mercury in many ways.

Our relationships, at work, at home may have a strong component of communication and mercury which rules the 9th and 12th houses from the seventh house may have an interesting role to play in keeping the 7th house happy and friendly! But seriously, these relationships are based and derive strength from emotions and feelings! The superficial envelop in a business relationship may be about logic, gains and tangible material goals, but players and consultants tell us that in many cases it is often about emotional connectivity. The first impressions! We now hear of terms like, Emotional Intelligence and organization and beautification and streamlining. All of these terms and labels go with Venus that believes in rounding off any jagged edges, and though earlier depicted as the glue that bonds souls is probably more the lubricant that allows souls to coexist B in personal lives, in business, in ... pretty much everywhere! Venus gets the SEVENTH house..

With the EIGHTH house, Mars again comes to the helm in the Kalapurusha. The 8th is the hidden house, the house of research, and the house of litigation. Scorpio has all of these attributes and its persona spans from skepticism all the way to extreme paranoia. The negative manifestation of mistrust lands us into courts, to fight for what we believe is our due and the positive manifestation leads to tirelessly searching, exploring and researching. All of these require the energy of Mars. Whereas the fiery mobility of mars gets expressed in the fiery, movable Aries, Vrischika being a fixed and watery sign deals more with the mental and fluid energy of mars and also persistence. In some ways it has some qualities of Saturn, which is one of the karakas (karaka bhava)  of this house. Saturn is named the ayushkarka or executor of longevity. However, it rules over death and not life. The 8th house indicates vitality or life energy which will relate more naturally to mars. The 8th also represents the home of the enormous quantum of energy, the Janma Chart, the explosive steam that ties in well with the fixed, water of martian Scorpio: Janma Chart at rest but ready to pounce forth and upwards like a volcano that has come alive. Sun has also been associated with physical vitality and it rules the 10th from the 8th in the Kalapurusha chart. This is not random or inconsequential, in my thinking. The tenth house represents the highest expression for any house, the maxima and having the inherent source of vitality, Sun ruling the 10th from 8th is an ideal support for longevity B the portfolio of the 8th.


Jupiter is known to represent the highest form of knowledge, as well as of dharma, morals and is a teacher par none. The  fire of dhanu or Sagittarius in the NINTH house of Kalapurusha does not require a lot of explanations to see the appropriate place of the 9th rashi in the realm of human experience, the earthly tour for which jyotish has been serving as the tour book for eons. The 9th rules over the teacher, dharma, morals, higher education and ones father. Interestingly, Parashara has also referred to the 9th and 10th houses in a horoscope as indicative of ones father. In the absence of detailed explanations which most jyotish classics tend to shy away from B one would have to try and connect the dots by themselves. 

Saturn rules over the TENTH and ELEVENTH houses in the Kalapurusha. Saturn is known as a taskmaster, one who disciplines and introduces us to humility and limitations, and through those gives the human soul opportunities to make itself known better to the self that is living through the life plan, in other words, us! While some individuals may be so lucky as to live charmed lives with a silver or golden spoon in their mouths all through their lives, most others generally have to work fairly hard to make a living and have to experience hardships, self-sacrifice and pain and difficulties in many ways. Short-cuts and possessive greed often lead to punishment while on the other hand sharing and service to others elevates us. All very Saturnine. Without Saturn, life would be very enjoyable but completely devoid of meaning and not memorable. It would be a lifetime wasted, if we think about it.

The thirikona house in a horoscope, are the 1st, 5th and 9th houses. These have been interpreted in different ways: body-mind-soul, today-tomorrow-yesterday, self-son-father. Mars, Sun and Jupiter are chosen by Kalpurusha as the executors  for these three areas,  the structure is formed by Mars (lagna), the vitality is provided by Sun (pancham) and the true knowledge or TRUTH itself by Jupiter (navam). If one of the three executors fails  or under performing, a significant degree of happiness and fulfillment of karma remains absent from ones life.

Jupiter walks into the limelight again with the mystical TWELFTH house where the rashi of Pisces reigns with its mystical, profound, the watery nature. In a worldly sense it is the house of expenditure and losses but it also is the house of salvation and thus an important karmic house. Just as the house of longevity (8th) requires a strong fifth house for its maximal expression and the fuel it needs to run an individuals life, the 10th from 12th, the ninth house imparts meaningfulness to the 12th. Only through understanding the noble essence of Jupiter and the ninth house can losses and expenditures of many types be reconciled and paradoxically gained from ultimately! The Sayana Suha  attribute of the 12th house has been imaginatively considered by jyotishis, including sexualization of the 12th house, which may be not be the proper interpretation. However, if taken simply and directly as the house that describes the quality of sleep B one who is morally and philosophically superior sleeps peacefully! Again, I would like to emphasize the importance of the tenth house from the 12th in rendering this otherwise negative house into a constructive one that may contribute towards ones essential and spiritual being and experience. 

How can we improve ourselves if we do not understand ourselves, our drives and difficulties, our motivations and desires, our deficiencies and impediments? In focusing only on predictions, events and dates and often not doing too well on that count, across the board, we are missing out on the other important focus and powerful abilities of jyotish. Firstly, it is a tool for self-knowledge. . Without patience, we could not reach the light, because the ferry of spiritual enlightenment is not going to come to our mind and we cannot reach it without the proper training that the curriculum encapsulated in our horoscope outlines, but we have got to study it. Just as modern doctors do not have a lot of time to spend per patient, most professional astrologers probably are in the same boat with their many clients. Predictive work can be faster but less effective as a complete and long-lasting cure. The well-predicted client will be dazzled and will perhaps come back with more offerings, but the status of astrology as a mysterious and mystical discipline would remain unabated. On the other hand, if more people took up learning jyotish, they would through the study of their charts gain a better understanding of themselves over a period of years. They would do so because they have a vested interest in themselves. They should! The best remedial, one might say, is in learning how to read the charts through learning astrology.


Well , the Kalapurusha is the CEO of  the  Astrological Solutions.   Having good learning and training in astrology we can get the good placement in the area which can elevate us to the supreme power to resolve the  errors which the human do in their life.

Learn Astrology,  do practice ,  gain knowledge  and rest will be good.  
………………………………………………….Astro Krushnan







Tuesday 14 June 2016

அதிக மாதம் எனப்படும் மலமாதம்.

பஞ்சாங்கத்தில் சங்க்ரமணம் என்பது சூரியன் ஒரு ராசிமானத்தில் இருந்து அடுத்து ராசிமானத்திற்குள் நுழையும் காலம் சங்க்ரமண காலம் எனப்படும்.   கணிதப்படி சந்திரனை வைத்து  கணக்கிடும் 27 நாட்கள் ஒரு சந்தரமான வருஷம் 354 நாட்களை கொண்டது.   சூரியனை வைத்து கணக்கிடுவது   நாள்  ஒரு செளரமான வருஷமாகும். அது 365 நாட்களை கொண்டது.  இந்த இரண்டுக்கும் இடையே உள்ள வித்யாசம் 11 நாட்களாகும். 
சந்த்ராமனப்படி, 2 ஆண்டுகள் 8 மாதத்திற்கு இடையே உள்ள வித்யாசம் 29.5 நாட்களாகும்.  அதாவது ஒரு மாதத்திற்கு சமமானதாக வருகிறது.  எனவே 33வது மாதம் அதிக மாதம் என கணக்கிடப்பட்டு இரண்டு முறைகளையும் (சந்த்ரமான வருஷம், செளரமான வருஷம்) சமநிலைக்கு கொண்டு வருவது இந்த இந்த அதிக மாதமான மலமாதமாகும்.  சூரியன் சந்த்ரன் சுழர்ச்சியில் உள்ள வேக கணக்கின்படி இந்த மல மாதம் 28 முதல் 36 மாதங்களுக்குள் எந்த மாதத்தில் ஏற்படும்.  அதாவது அந்த மாதத்தின் ராசி மானத்திற்குள் சூரியன் நுழையாமல் இரண்டு அமாவாசை அல்லது இரண்டு  பெளர்ணமி ஏற்படும்.   
சித்திரையில் துவங்கி பங்குனி வரை   பானு, தாபன, இந்திர, ரவி, கபஸ்தி , ஆர்யமா, ஹிரண்ய ரேதஸ, திவாகர, மித்ரா, விஷ்ணு, அருணா, சூர்யா  என்ற  ஆதித்யர்கள் உதிக்கிறார்கள்.  இதில் எந்த அதித்யனும் உதிக்காத மாதம் அதிக மாதம் என்ப்படும் மலமாதமாகும்.  அதற்கு பெயர் மலிம்லுசா அதாவது நபும்ஸகா என்பபடும் பால் அற்ற மாதமாகும்.
எந்த ஆதித்யரும் உதிக்காத இந்த மாதத்தில் பதினோரு(ஏகாதச) ருத்திரர்கள், பனிரெண்டு (துவாதச) ஆதித்யர்கள் அஷ்ட வஸுக்கள் , பிரஜாபதி, வஷட்கார எனும் 33 பேர் இந்த மாதத்தின் அதி தேவதைகள் ஆவார்கள்.  இவர்கள் எல்லோருமே ஆதிமூலமான பரம்பொருளின் வர்க்கமாவார்கள்.
ஏகாதச ருத்ரர்கள் என்பவர்கள்   பீமா, ரைவதா, ஓஜ, அஜைகாபத, மஹன், பஹூரூபா, பாவ, வாமதைவ, உக்ர, வ்ருஷாகபி மற்றும் அஹிர்புத்னி ஆகியோர்.
துவாதச ருத்ரர்கள் என்பவர்கள்  விவஸ்வான், ஆர்யமா, பூஷா, த்வாஸ்த்ரு, ஸவித்ரு, பக, தாத்ரு, பர்ஜன்ய, வருண, மித்ர, ஷக்ர, உருக்ரம  ஆகியோர்.
அஷ்ட வஸுக்கள் என்பவர்கள் த்ரோண, துருவ, தோஷ, அர்க, அக்னி, த்யெள, பிராண,விபவக ஆகியோர் .  இந்த எட்டு பேர்தான் நம் பித்ரு உலகத்தின் காவலர்கள்.  இவர்கள் தான் அவர்களின் திதிகளை ஞாபகப்படுத்தி அந்த திதியில் பூமிக்கு அனுப்பி அவர்கள் சந்ததிகள் தரும் அவிசு எனப்படும் பிண்டத்தை எற்க அனுமதி தருவார்கள். அந்த நேரத்தில் அவர்கள் எந்த தடையும் இல்லாமல் வருவதற்கு எள்ளும் (தடைகளை அகற்றும் தானியம் – உரியவர் சனி) அந்த பிரயாணத்தில் தாகம் தீர்க்க நீரையும் கொடுத்து வரவேற்று உணவளிப்பது. 
ஆகவே இந்த மலமாதத்தில் புண்யங்களை அதிகம் திரட்ட வேண்டும் என்பதற்காக சுபங்களை நீக்கி, விரதங்களை ஏற்று தனக்கு ஏற்ப்பட்ட எல்லா பாவங்களையும் போக்கி கொள்ள அந்த பரம்பொருளே ஏகாதச, துவாதச ருத்திரர்களாகவும், பித்ரு லோகத்தின் அஷ்ட வஸுக்களும் பூமிக்கு வந்து நம்மை பாபங்களில் இருந்து காப்பாற்றி புண்ய ஸ்வரூபமாக மாற்றுவதால் இதற்கு மலமாதம் என்று பெயர்.   இந்த மாதத்தில் ஸ்தீரிகள் விரதம் இருப்பது நல்லது.
1.  அருணோதய காலத்தில் ( சூரிய உதயத்திர்கு முன்பிரம்ம முஹூர்த்தத்தில்) இந்த மாதத்தின் எல்லா நாட்களிலும் குளிப்பது.  
2.  அயசித விரதம்:  உள்ளதை கொண்டு திருப்தி அடைவது.  அதாவது இந்த மாதத்தில் எதையும் கடனாகவோ, இலவசமாகவோ பெற கூடாது.
3.  அகண்ட தீபம்: வீட்டில்  இந்த மாதம் முழுவதும் தொடர்ந்து அகண்ட தீபம் ஏற்றுவது.
4.  முப்பதாவது நாள் உங்களின் இஷ்ட தேவாதா கோயிலுக்கு சென்று 33 விளக்கு ஏற்றி வழிபடுவது.  இது மிகச்சிறந்த பரிகாரம்  எல்லா வகையான பித்ரு தோஷத்தையும் அகற்றும்.
5.  ஒன்று விட்டு ஒரு நாள்  உபவாசம் இருப்பது.
6.  அப்படி இருக்க முடியாதவர்கள்  திருவோண நக்ஷத்திரம்,  வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி, பெளர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் முழு விரதம் இருப்பது.
7.  அல்லது பகல் முழுவதும் விரதம் இருந்து அன்று இரவில் ஒருவேளை உணவு உண்பது.
8.  மாதத்தின் எல்லா நாட்களிலும் வீட்டிற்கு ஒரு தம்பதியை அழைத்து தாம்பூலம் அளிப்பது.   
இந்த மலமாதத்தில் சுப காரியங்களை விலக்கி , விரதங்களுக்கு மதிப்பளித்து அதை செயல் படுத்தி தெய்வ பிரார்த்தனைகளை செய்து  பாபங்களை போக்கி பித்ருக்களை சந்தோஷப்படுத்தி வாழ்க்கையில் தடைகளை அகற்றி முன்னேற்றம் அடைய  முயற்ச்சி செய்வது நல்லது.


அன்புடன் ஆஸ்ட்ரோ கிருஷ்ணன். 

Monday 13 June 2016

ஜோதிஷனும் ஜோதிஷமும்

Saint Tulsidas Vector Illustration - stock vector



ஜோதிடர்களாகிய நாம் எங்கே தவறு செய்கிறோம்.  ஒரு ஜாதகத்தில் பலன் கணிப்பதில் நாம் சரியான வழி முறைகளை கையாண்டு பலன் சொல்கிறோமா.  நமக்கே சந்தேகம் வருகிறது.  ஜோதிஷன் வாக்கு தெய்வ வாக்கு என்று சொலவார்கள்.  அந்த வாக்கு அந்த சமயத்தில் தவறான பலனை தந்து விட்டால் அது தான் அந்த ஜாதகத்தின் அப்போதய பலனாக இருக்கும்.  பிறகு நமக்கு மன வருத்தம் ஏற்பட்டு அதற்காக ஒரு ஜோதிஷனே பரிகாரம் செய்ய வேண்டிய நிலைக்கு செல்ல வேண்டி உள்ளது. 
.
ஜாதகத்தில் முக்கியமானவை ராசி சக்கரம், நவாம்ச சக்கரம் மற்றும் பாவ சக்கரம் ஆகியனவாகும். இதில் ராசி சக்கரம் அடிபடையானது. ஒரு சிசு ஜன்னமாகும் போது அன்றய கோசார கிரஹங்களை வைத்து கணிப்பது.  இதை வைத்தே பெரும்பாலான பலன்கள் கணிக்கப்படுகின்றன. ராசியை வைத்துமட்டும்  துல்லியமான பலனை கணிப்பது இயலாத காரியம். ராசியில் இருக்கும் கிரஹ வலிமையை நவாம்சத்தை வைத்து இறுதி செய்யவேண்டும்.  அதேபோல் கிரஹங்கள் எந்த பாவத்தில் சரியாக அமர்ந்திருக்கிறது என்பதையும் பாவச் சக்கரத்தில் இருந்து முடிவு செய்து அதன் படி பாவ பலன்களை இறுதி செய்வது நல்லது.  அடுத்து தசா புத்திகள், கோசார நிலைகளை கொண்டு இறுதி செய்த பலனை உறுதி செய்து கொண்டு பலன் உரைப்பது நலம்.

அடுத்து  உறுதி செய்து கொண்ட பலனை உரைப்பதற்கு முன் ஒரு ஜோதிஷன் தன் குல தேவதா, இஷ்ட தேவதாவை மனதில் தியானித்து நான் உரைக்கும் இந்த பலன் ஜாதகரின் குறைகளை நிவர்த்தி செய்து அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வர நீ தான் அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இது நான் சொல்லும் பலன் அல்ல. என் நாவில் அமர்ந்து நீ சொல்லும் பலன் என்று சொல்லி பலன் உரைப்பது நல்லது. திருவருளும் குருவருளும் இல்லையென்றால் ஜோதிஷன் வாக்கில் தெய்வம் நிற்காது. 

இதில் லக்கினம் முதல் வீடாக கருதப்படுகிறது. நவாம்சம் என்பது ராசியை ஒன்பதாக பிரிப்பதாகும். பாவ சக்கரம் என்பது துல்லியமான கணக்கீடாகும். இதில் ஒரு வீடு என்பது ஒரு முழு ராசி அல்ல. ஒன்றுக்கு மேற்பட்ட ராசிகளில் ஒரு பாவம் வியாபித்திருக்கலாம். ராசியில் ஒரு வீட்டில் இருக்கும் கிரகம் பாவத்தில் வேறு வீட்டில் இருக்கலாம். பாவக சக்கரம் கணிக்க பாவ ஸ்புடங்கள் கணிக்க வேண்டும். இதற்கு லக்கினம், அதற்கு நேர் எதிரே இருக்கும் ஏழாம் வீடு அடுத்து  பத்தாம் வீடு  அதற்கு நேர் எதிரே இருக்கும் நான்காம் வீடு  இவற்றை கணிக்க வேண்டும். இதற்கு நிறைந்த கணித அறிவும் பாவ அட்டவணை  மற்றும் பஞ்சாங்கம்  தேவைப்படும். ஆனால் இதெல்லாம் கணிப்பொறி காலத்திற்கு முன். இப்பொழுது கணிணியில் பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் இவற்றை உள்ளீடு செய்தால் சில  வினாடிகளில் அனைத்து கணக்கீடுகளையும் செய்து கணினி நமக்கு தருகிறது. பல மணி நேரங்களில் செய்ய வேண்டிய கணக்குகள் சில வினாடிகளில் முடிக்கப்படுகிறது! எனவே ராசி சக்கரம் என்பது தோராயமான பாவ சக்கரமாகும். ஆகவே தற்போது ராசியை வைத்து பலன் கணிப்பதில் அவ்வளவாக தவறு நேர வாயில்லை. 

நல்ல அறிவு சார்ந்த திறமையான ஜோதிஷனுக்கு உள்ள கிரஹ பலத்தை பார்ப்போம்.: 

1.  ஒரு ஜாதகத்தில் பத்தாம் பாவ அதிபதி புதனுடைய நவாம்சத்த்ல் இருப்பது.

2.  ஸூரியன் மிதுனத்தில் இருப்பது .சிம்மத்தில் இருக்கும் சந்திரனை புதன் பார்ப்பது.   கடக சந்திரனுக்கு குரு பார்வை கிடைப்பது.

3.  பத்தாம் பாவ அதிபதி ராசியில் புதனுடை வீட்டில் இருப்பது. 

4.  அஸ்வினி 3ம் பாதம், 4ம் பாதம்,  ரோகிணி 3ம் பாதம் , விசாகம் 1ம் பாதத்தில் ஜனனம் நிகழ்வது.

5.  புதன் லக்ன கேந்திரம் பெறுவது.  இரண்டாம் பாவதிபதி உச்சம் பெறுவது.  சுக்ரன் உபய ராசியில் இருப்பது. மூன்றாம் பாவ அதிபதி, சுக்ரன் உச்சம் பெறுவது..

6.  திரி கிரஹ யோகாவான சந்த்ரன் சுக்ரன் சனி ஆகியோர் ஐந்தில் இருப்பது.

7.  லக்னாதிபதி 5ல் இருந்து அங்கு அவர் பலம் பெறுவது.   2,5,8ம் அதிபதிகள் இரண்டாமிடமான வாக்கு ஸ்தானத்தில் இருப்பது. ஆனால் இதில் அந்த இடம் அந்த மூன்று வீட்டு அதிபதிகளின் நீச்ச வீடாக இருக்க கூடாது

8.  நான்காமாதி பாவியாகி திரிகோணத்தில் இருப்பது.  2, 8, 12 க்குடையவர்கள் புதன் அல்லது குருவோடு சேர்வது.

9.  கேந்திரங்களில் பாதகாதிபதிகள், பாபர்கள் இல்லாம இருக்க, சுக்ரன் உச்சம் பெற்று அது 2ம் வீடாக இருந்து புதன் சேர்வது.

10.  இரண்டாம் பாவாதிபதி கேந்திரம் ஏறி, புதன் குருவோடு சேர்வது.  அல்லது அவர்கள் வீட்டில் இருந்து பார்வை பெறுவது. பெளர்ணமி சந்திரனுக்கு சனி சேர்க்கை இருந்தால் அவர் உயர்ந்த ஜோதிடர். 

நூல் ஆதாரங்கள்:  ஜாதக பாரிஜாதம், வராஹமிஹிரரின் ஹோரா சாஸ்த்திரம்,  பலதீபிகா, ஜாதக அலங்காரம், கர்க்க முனிவரின் கிரஹ யோகம்,   ச்த்யாச்சாரியார் நூல், வீமகவி, ஜாதக சூடாமணி.


......................................................................அன்புடன் ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்    





Saturday 11 June 2016




ஜாதகத்தில் ராகுவின் நிலைமை.


  ராகு கேது இல்லை யென்றால் ஜோதிஷமே இல்லை எனலாம்.  அந்தளவுக்கு ராகு கேது கிரஹங்களோடு பிண்ணி பினைந்து கர்ம வினைகளையும் தோஷங்களையும் அதிகரித்து மனிதர்களை அல்லல் படுத்துகிறது.  ஆனால் மனிதர்களிடத்தில் ஆன்மீக உணர்வுகளை அதிகப்படுத்தி தெய்வங்களை சென்று சரணாகதி அடைய வைத்தவர்கள் அவர்கள் தனே.  அந்த் வகையில் பூமியை தாங்கி நிற்கும்  12 கால சர்ப்பங்களுக்கும்  நமஸ்காரங்கள்.

லக்கினத்தில்  ராகு இருந்தால்: 

லக்கினத்தில் ராகு இருந்தால்  ஜாதகன் சோம்பேறி. அடிக்கடி நோய்வாய்ப் படக்கூடியவன். அது தலைவலியாகவும் இருக்கலாம், காய்ச்சலாகவும் இருக்கலாம். அல்லது வயிற்றுக் கோளாறுகளாகவும் இருக்கலாம். நோயின் தன்மைகளும், வந்து தாக்கும் நேரமும், காலமும் ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து மாறுபடும் ஜாதகனுக்கு தர்மசிந்தனை, மகிழ்ச்சி மற்றும் வயதான காலத்தில் தன் குழந்தை களால் மகிழ்ச்சி போன்றவை இருக்காது. சிலருக்கு சொத்து சுகம் இருக்காது. சிலருக்கு நீண்ட ஆயுள் இருக்காது. ஜாதகத்தில் எட்டாம் வீடும்,ஆயுள்காரகனும் வலுவாக இல்லையென்றால், அவர்களுடன் ராகுவும் சேர்ந்து ஜாதகனின் பிற்காலத்தில் மிகவும் கஷ்டப்படுத்துவான். மேஷம், ரிஷபம், கடகம் ஆகிய ராசிகள் லக்கினமாக இருந்து அதில் ராகு இருந்தால் மேற்கூறியவற்றில் தீய பலன்கள்  ஜாதகனுக்கு குறைவாக இருக்கும். காரணம் ராகுவிற்கு அவைகள் உகந்த லக்கினங்கள்!

இரண்டாம் வீட்டில்  ராகு இருந்தால்: 

 ராகு 2ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகனுக்குக் செல்வ வளம் அதிகம் இருப்பது கடினம். . சிலர் அதிகமாக  கடன்வாங்கி கஷ்டப்படுவார்கள். சாதுரியம் உள்ளவன் சாமர்த்தியம் உள்ளவன். அந்த சாதுரியங்களில் சிலாருக்கு தந்திரமும் ஒளிந்திருக்கும். அதை தனக்கு சாதகமாக உபயோகப்படுதி முன்னேறுவான். இதை அடுத்தவன் கண்ணில் படாது செய்வாம். சட்டென்று கோபம் வரக்கூடியவன். பொதுவாகவே இரண்டில் தீய கிரகங்கள் இருந்தால் சொத்து இருக்காது. அல்லது சேராது. அப்படியே இருந்தாலும் பல காரணங்களால் கரைந்துவிடும். இங்கே இருக்கும் ராகு நிச்சயமாகக் கரைப்பான். அல்லது சொத்தைச் சேர்க்க விடமாட்டான்.

மூன்றாம் வீட்டில்  ராகு இருந்தால்:  

 ராகு 3ஆம் வீட்டில் இருந்தால்: அதிக பாலுணர்வு மிக்கவன். ஜாதகன் மற்றவர்களைக் கவரக்கூடியவன். யாராக இருந்தாலும் சாய்த்து விடுவான். பெண்களாக இருந்தால் எளிதில் சாய்த்து விடுவான். எப்படிச் சாய்ப்பான்.தன்னை ஆடம்பரமாக காட்டிக் கொண்டு அதிகம் செலவு செய்வான். உல்லாசப்பிரியர்கள் தன்னை பற்றி உயர்வாக நினைத்துக் கொண்டிருப்பான் (இருக்காதா பின்னே?) தாராள மனமுடையவன். ஊதாரி. கையில் காசு வைத்துக் கொள்ள மாட்டான் உறவுகள், நண்பர்கள், கேளிக்கைகள் என்று பணத்தை வைத்துத் செலவு செய்வான். பெண்ணாக இருந்தால், நகை நட்டு, புடவை, அலங்காரச்சாதனங்கள் என்று செலவு செய்வர் இந்த அமைப்பினருக்கு நீண்ட ஆயுள் உண்டு. அதோடு குபேரயோகம் போல பணம் வரும். சொத்துக்களும் வந்து சேரும்!3ஆம் வீடு, 6ஆம் வீடு, 10ஆம் வீடு, 11ஆம் வீடு ஆகிய இடங்கள் உப ஜயஸ்தானமாக இருப்பதால் இது தீய கிரகங்களுக்கு உகந்த இடங்கள் ஆகும்.

நான்காம் வீட்டில்  ராகு இருந்தால்:  

 ராகு 4ஆம் வீட்டில் இருந்தால்: மருத்துவ ஜோதிடத்தின்படி, இது இருதயத்திற்கான இடம். இங்கே ராகு இருப்பது நல்லதல்ல. இருதய சம்பந்தப் பட்ட நோய்கள் வரும். சந்திரன் சேர்க்கை பெற்றால் நுரையீரல் புற்று நோய் வர வாய்ப்புண்டு. இந்த இடம் சொத்து, சுகங்களுக்கான இடம். இங்கே அமரும் ராகு அவை இரண்டையும் இல்லாமல் செய்துவிடுவான் எப்படி என்றால் தன் சுகத்திற்காக அதிகம் செலவு செய்து தன் சொத்தை விரயம் செய்வார்கள். . இருந்தாலும் நிலைக்காது. வண்டி வாகனங்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.  பல ஜாதகர்களை  உறவினர்களிடம் ஒட்டுதல் இருக்காது. அவர்களில் பலர் விரோதிகளாகி விடுவார்கள். சிலருக்கு தன் தாயின் மீதே பிடிப்பு இருக்காது! இருக்கும் பன்னிரெண்டு இடங்களில் ராகு இங்கே அமர்வதுதான்ஜாதகரை தனிமைப்படுத்தி விரோதத்தை வளர்த்து விடும்.  வாழ்க்கை முழுவதும் சுகத்தை அதிகமாக்கி ஜாதகரை கெடுத்துவிடும்.


ஐந்தாம் வீட்டில்  ராகு இருந்தால்: 

ராகு 5ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் சுயநலவாதி. தன்னைப் பற்றி மட்டுமே நினைப்பான். வெற்றிக்கு வேண்டிய அதிரடிகள் எல்லாம் இருக்காது. சற்றுக் கோப தாபம் உடையவன். உறவினர்கள் அவனைக் கழற்றிவிட்டு விடுவார்கள். அதாவது உறவினர்கள் இவனைக் கண்டால் ஒதுங்கி விடுவார்கள்  அதிகம் செக்ஸ் உணர்வு உள்ளவர்கள் ஆதலால் சிலருக்கு குழந்தை பிறப்பது தாமதமாகும். சிலருக்கு ஒரு குழந்தை மட்டும் இருக்கும் ஜாதகத்தில் காரகன் குரு நன்றாக இல்லையெனில், இந்த அமைப்பினருக்குக் குழந்தை இருக்காது.

ஆறாம் வீட்டில்  ராகு இருந்தால்: 

ராகு 6ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகனுக்கு வயிற்றுக் கோளாறுகள் இருக்கும். செவ்வாய் சேர்க்கை இருந்தால் அல்சர் வரும். அது அவனைப் படுத்தி எடுக்கும் ஜாதகனுக்கு வளமான வாழ்க்கை அமையும். அதோடு சேர்த்து அல்லது அவனது வளமையைப் பார்த்து, பொறாமைப்படும் எதிரிகளும் இருப்பார்கள்.சுக்ரன் சேர்க்கை இருந்தால் அடுத்தவர் சொத்தை தனதாக்கி கொள்வான். ஜாதகன் தர்ம சிந்தனைகளை உடையவனாக இருப்பான். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் புகழ் உடையவனாக இருப்பான். சாப்பாட்டு ராமனாக இருப்பான்.  எதையும் ரசித்து சாப்பிடக்கூடியவனாக இருப்பான். அவன் சாப்பிடுவதெல்லாம் மருந்து மாத்திரைகள் இன்றி தானியங்கி இயந்திரம்போல ஜீரணமாகிவிடும். வெற்றிகள் பலவற்றை அடையக்கூடியவனாக இருப்பான். அவனுடைய பத்துக்குடைவையவனும் , இந்த அமைப்பும் செவ்வாயும் சேர்ந்தால், சிலர் காவல் துறை ராணுவத்தில் பணிபுரிவார்கள். அதிகாரியாக இருப்பான். ஆற்றல் நிறைந்தவனாக இருப்பான். எதிரிகள் பணிவார்கள். அரசனைப் போல வாழ்வான். நீண்ட ஆயுளைப் பெற்றவனாக இருப்பான்.

ஏழாம் வீட்டில்  ராகு இருந்தால்: 

ராகு 7ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் ஊதாரியாக இருப்பான். பணத்தின் அருமை தெரியாமல் அதிகமாகச் செலவு செய்பவனாக இருப்பான். சிலருக்கு மகிழ்ச்சி இருக்காது. எப்போதும் உழன்று கொண்டிருப்பான். சிலருக்கு தேவையான புத்திசாலித்தனம் இருக்காது. சுதந்திரமாக இருக்க ஆசைப்படுவான் அடிக்கடி நோய்வாய்ப்படுபவனாக இருப்பான், இந்த அமைப்புள்ள சிலருக்கு, மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. சிலர் அவமானத்திற்கு உள்ளாக நேரிடும். பெண்களால் திட்டு வாங்க நேரிடும். அதீத நோயால்,அதாவது பால் வினை நோய்களால்  உடல் சீர்கெடும். சிலருக்குப் அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளும்படியான வாழ்க்கை அமையும். 

எட்டாம் வீட்டில்  ராகு இருந்தால்: 

ராகு 8ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் விவேகம் இல்லாத வேகத்தோடு செயல்பட்டு அடிக்கடி துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். பொய்க் குற்றச்சாட்டுக்களுக்கும் வீண் பழிச்சொல்லிற்கும் ஆளாக நேரிடும். இந்த அமைப்புள்ள சிலருக்கு ஆயுள் குறைவாக இருக்கும்.(எல்லோருக்கும் அல்ல!) சிலருக்கு வம்ச விருத்தி இல்லாமல் இருக்கும். முன் கர்ம வினை தொடர்கிறது என்று பொருள். சிலருக்கு உறவுகளும் அதிகம் இருக்காது; செல்வமும் இருக்காது. துயரங்கள் மட்டும் அதிகமாக இருக்கும். பொதுவாக இந்த அமைப்பினர் வாக்குவாதம், விதண்டாவாதம் செய்யக்கூடியவர்கள் சமயங்களில் சாதாரணப் பேச்சுக்கூட சண்டையில் முடியும் அநேக சூழ்நிலைகளில் தோல்வியையே தழுவ வேண்டியதாக இருக்கும். வெற்றிச் செல்வி விலகிப் போய்விடுவாள். ஆண்களாக இருந்தால், சிலருக்கு மூல நோய் உண்டாகும் (Piles Complaint) பெண்களாக இருந்தால் மாதவிடாய்ப் பிரச்சினைகள் இருக்கும்.


ஒன்பதாம் வீட்டில்  ராகு இருந்தால்:  

ராகு 9ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகத்தில் மற்ற அமைப்புக்கள் வலுவாக இருந்தால் அதாவது இந்த இடத்தில் இருந்து மூன்று கேந்திரங்களில் கிரஹங்கள் இருந்தால் இந்த இடத்தில் அமரும் ராகு ராஜ யோகத்தைக் கொடுப்பான்.  அதுவும் லக்ன கேந்திரம் ராகுவின் உச்ச வீடாக வந்து அதிலிருந்து நான்கு கேந்திரங்களில் கிரஹங்கள் இருந்தால் ஜாதகர் பெயர் சொல்லும் படி இருபார்.இல்லையென்றால் இல்லை! ராஜயோகம் உள்ளவர்களுக்கு, செல்வம், உறவுகள், ஆண் குழந்தைகள் என்று எல்லாம் அசத்தலாக இருக்கும் ஞானம் உள்ளவர்களையும், பெரியோர்களையும் போற்றும் தன்மையுடையவாக ஜாதகன் இருப்பான். குரு சேர்க்கை பெற்றால் அதீதமான ஸ்பிரிச்சுவாலிடி இருக்கும். இந்த இடத்து ராகு ஜாதகனின் தந்தைக்குக் கேடாக இருக்கும். பூர்விகச் சொத்துக்களுக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும்!

பத்தாம் வீட்டில்  ராகு இருந்தால்: 

ராகு 10ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் செய்யும் தொழிலில் அதீத வேகத்தோடு செயல் பட்டு தன் தொழிலிலும் வேலையிலும் புகழ் பெறுவான். இயற்கையாகவே தொழில்நுட்ப அறிவு இருக்கும். கடல் கடந்து சென்று சம்பாதிப்பார்கள். செவ்வாய் சூரியன் பத்தில் இருக்கும் ராகுவை பார்த்தால் சிலர் பாவச் செயல்களைச் செய்வதற்குத் தயங்க மாட்டார்கள். சிலர் வீரதீரச் செயல்களைச் செய்பவர்களாக இருப்பார்கள் மொத்தத்தில் வீரம், தைரியம், பாராக்கிரமம் ஆகியவைகளைக் கொண்டவனாக ஜாதகன் இருப்பான். எல்லா செளகரியங்களையும் பெற்றவனாக இருப்பான் அறிவு, அந்தஸ்து ஆகியவற்றால் மேம்பட்ட வாழ்க்கைச் சூழலில் ஜாதகனின் வாழ்க்கை அமைந்து சிறக்கும்! ஆனால் பெற்றவர்களுக்கு அந்திம காரியங்கள் செய்வதில் தடங்கள் இருக்கும்.


பதினொன்றாம் வீட்டில் ராகு இருந்தால்: 

ராகு 11ஆம் வீட்டில் இருந்தால்: ராகுவிற்கு நல்ல இடம். பதினொன்றாம் இடத்தில் ராகு அமையப் பெற்ற ஜாதகன் அதிகம் படித்தவனாகவும்,அந்நிய மொழிகள் படிப்பான். லாப நோக்கோடு   அதிகம் பொருள் ஈட்டுபவான். நீண்ட ஆயுளை உடையவனாக இருப்பான். நல்ல நண்பர்களையும், நல்ல கூட்டாளிகளையும் கொண்டவனாக இருப்பான். செய்யும் தொழிலில் அல்லது வேலையில், அனைத்து நுட்பங்களையும் தெரிந்தவனாக இருப்பான். அல்லது விரைவில் எதையும் கற்றுக்கொண்டு செயல்படுபவனாக இருப்பான். வலுவானவனாக இருப்பான். வளம் உடைய வாழ்க்கை அவனுக்குக் கிடைக்கும் அல்லது அமையும். அத்தனை சுகங்களையும், செளகரியங்களையும் அனுபவிப்பவனாக ஜாதகன் இருப்பான். செவ்வாயோ சூரியனோ சேர்க்கை பெற்றால் அரசில் அதிகாரம் படைத்தவனாக இருப்பான். இரண்டு குடும்பம் உண்டு.


பன்னிரெண்டாம் வீட்டில் ராகு இருந்தால்: 

ராகு 12ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன்தூக்கம் கெடும். பாவச் செயல்களைச் செய்பவனாக இருப்பான். அதையும் பிறர் அறியாத வண்ணம் செய்வான். உடல் உபாதைகளுக்கு ஆளாவான்.கண்களில் சதை வளரும். சிலருக்கு, செல்வமும் ஆண் வாரிசுகளும் இல்லாமல் இருக்கும். வலுவில்லாதவன். மன, மற்றும் உடல் வலிமை இல்லாதவன். பார்க்கும் வேலை அல்லது தொழில்களில் இருந்து வீழ்ச்சி அடைய நேரிடும்.  இந்த இடத்து ராகு, சனி, அல்லது செவ்வாயின் சேர்க்கை பெற்றால் தனக்கு தானே அழிவை தேடிக் கொள்வான்.சிலர் வெளிநாட்டில் இறக்க கூடும் அல்லது சிறை தண்டனை அனுபவிப்பார்கள்.

..................................................அன்புடன் ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்














……………………………………………………….அன்புடன் ஆஸ்