Saturday, 11 June 2016




ஜாதகத்தில் ராகுவின் நிலைமை.


  ராகு கேது இல்லை யென்றால் ஜோதிஷமே இல்லை எனலாம்.  அந்தளவுக்கு ராகு கேது கிரஹங்களோடு பிண்ணி பினைந்து கர்ம வினைகளையும் தோஷங்களையும் அதிகரித்து மனிதர்களை அல்லல் படுத்துகிறது.  ஆனால் மனிதர்களிடத்தில் ஆன்மீக உணர்வுகளை அதிகப்படுத்தி தெய்வங்களை சென்று சரணாகதி அடைய வைத்தவர்கள் அவர்கள் தனே.  அந்த் வகையில் பூமியை தாங்கி நிற்கும்  12 கால சர்ப்பங்களுக்கும்  நமஸ்காரங்கள்.

லக்கினத்தில்  ராகு இருந்தால்: 

லக்கினத்தில் ராகு இருந்தால்  ஜாதகன் சோம்பேறி. அடிக்கடி நோய்வாய்ப் படக்கூடியவன். அது தலைவலியாகவும் இருக்கலாம், காய்ச்சலாகவும் இருக்கலாம். அல்லது வயிற்றுக் கோளாறுகளாகவும் இருக்கலாம். நோயின் தன்மைகளும், வந்து தாக்கும் நேரமும், காலமும் ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து மாறுபடும் ஜாதகனுக்கு தர்மசிந்தனை, மகிழ்ச்சி மற்றும் வயதான காலத்தில் தன் குழந்தை களால் மகிழ்ச்சி போன்றவை இருக்காது. சிலருக்கு சொத்து சுகம் இருக்காது. சிலருக்கு நீண்ட ஆயுள் இருக்காது. ஜாதகத்தில் எட்டாம் வீடும்,ஆயுள்காரகனும் வலுவாக இல்லையென்றால், அவர்களுடன் ராகுவும் சேர்ந்து ஜாதகனின் பிற்காலத்தில் மிகவும் கஷ்டப்படுத்துவான். மேஷம், ரிஷபம், கடகம் ஆகிய ராசிகள் லக்கினமாக இருந்து அதில் ராகு இருந்தால் மேற்கூறியவற்றில் தீய பலன்கள்  ஜாதகனுக்கு குறைவாக இருக்கும். காரணம் ராகுவிற்கு அவைகள் உகந்த லக்கினங்கள்!

இரண்டாம் வீட்டில்  ராகு இருந்தால்: 

 ராகு 2ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகனுக்குக் செல்வ வளம் அதிகம் இருப்பது கடினம். . சிலர் அதிகமாக  கடன்வாங்கி கஷ்டப்படுவார்கள். சாதுரியம் உள்ளவன் சாமர்த்தியம் உள்ளவன். அந்த சாதுரியங்களில் சிலாருக்கு தந்திரமும் ஒளிந்திருக்கும். அதை தனக்கு சாதகமாக உபயோகப்படுதி முன்னேறுவான். இதை அடுத்தவன் கண்ணில் படாது செய்வாம். சட்டென்று கோபம் வரக்கூடியவன். பொதுவாகவே இரண்டில் தீய கிரகங்கள் இருந்தால் சொத்து இருக்காது. அல்லது சேராது. அப்படியே இருந்தாலும் பல காரணங்களால் கரைந்துவிடும். இங்கே இருக்கும் ராகு நிச்சயமாகக் கரைப்பான். அல்லது சொத்தைச் சேர்க்க விடமாட்டான்.

மூன்றாம் வீட்டில்  ராகு இருந்தால்:  

 ராகு 3ஆம் வீட்டில் இருந்தால்: அதிக பாலுணர்வு மிக்கவன். ஜாதகன் மற்றவர்களைக் கவரக்கூடியவன். யாராக இருந்தாலும் சாய்த்து விடுவான். பெண்களாக இருந்தால் எளிதில் சாய்த்து விடுவான். எப்படிச் சாய்ப்பான்.தன்னை ஆடம்பரமாக காட்டிக் கொண்டு அதிகம் செலவு செய்வான். உல்லாசப்பிரியர்கள் தன்னை பற்றி உயர்வாக நினைத்துக் கொண்டிருப்பான் (இருக்காதா பின்னே?) தாராள மனமுடையவன். ஊதாரி. கையில் காசு வைத்துக் கொள்ள மாட்டான் உறவுகள், நண்பர்கள், கேளிக்கைகள் என்று பணத்தை வைத்துத் செலவு செய்வான். பெண்ணாக இருந்தால், நகை நட்டு, புடவை, அலங்காரச்சாதனங்கள் என்று செலவு செய்வர் இந்த அமைப்பினருக்கு நீண்ட ஆயுள் உண்டு. அதோடு குபேரயோகம் போல பணம் வரும். சொத்துக்களும் வந்து சேரும்!3ஆம் வீடு, 6ஆம் வீடு, 10ஆம் வீடு, 11ஆம் வீடு ஆகிய இடங்கள் உப ஜயஸ்தானமாக இருப்பதால் இது தீய கிரகங்களுக்கு உகந்த இடங்கள் ஆகும்.

நான்காம் வீட்டில்  ராகு இருந்தால்:  

 ராகு 4ஆம் வீட்டில் இருந்தால்: மருத்துவ ஜோதிடத்தின்படி, இது இருதயத்திற்கான இடம். இங்கே ராகு இருப்பது நல்லதல்ல. இருதய சம்பந்தப் பட்ட நோய்கள் வரும். சந்திரன் சேர்க்கை பெற்றால் நுரையீரல் புற்று நோய் வர வாய்ப்புண்டு. இந்த இடம் சொத்து, சுகங்களுக்கான இடம். இங்கே அமரும் ராகு அவை இரண்டையும் இல்லாமல் செய்துவிடுவான் எப்படி என்றால் தன் சுகத்திற்காக அதிகம் செலவு செய்து தன் சொத்தை விரயம் செய்வார்கள். . இருந்தாலும் நிலைக்காது. வண்டி வாகனங்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.  பல ஜாதகர்களை  உறவினர்களிடம் ஒட்டுதல் இருக்காது. அவர்களில் பலர் விரோதிகளாகி விடுவார்கள். சிலருக்கு தன் தாயின் மீதே பிடிப்பு இருக்காது! இருக்கும் பன்னிரெண்டு இடங்களில் ராகு இங்கே அமர்வதுதான்ஜாதகரை தனிமைப்படுத்தி விரோதத்தை வளர்த்து விடும்.  வாழ்க்கை முழுவதும் சுகத்தை அதிகமாக்கி ஜாதகரை கெடுத்துவிடும்.


ஐந்தாம் வீட்டில்  ராகு இருந்தால்: 

ராகு 5ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் சுயநலவாதி. தன்னைப் பற்றி மட்டுமே நினைப்பான். வெற்றிக்கு வேண்டிய அதிரடிகள் எல்லாம் இருக்காது. சற்றுக் கோப தாபம் உடையவன். உறவினர்கள் அவனைக் கழற்றிவிட்டு விடுவார்கள். அதாவது உறவினர்கள் இவனைக் கண்டால் ஒதுங்கி விடுவார்கள்  அதிகம் செக்ஸ் உணர்வு உள்ளவர்கள் ஆதலால் சிலருக்கு குழந்தை பிறப்பது தாமதமாகும். சிலருக்கு ஒரு குழந்தை மட்டும் இருக்கும் ஜாதகத்தில் காரகன் குரு நன்றாக இல்லையெனில், இந்த அமைப்பினருக்குக் குழந்தை இருக்காது.

ஆறாம் வீட்டில்  ராகு இருந்தால்: 

ராகு 6ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகனுக்கு வயிற்றுக் கோளாறுகள் இருக்கும். செவ்வாய் சேர்க்கை இருந்தால் அல்சர் வரும். அது அவனைப் படுத்தி எடுக்கும் ஜாதகனுக்கு வளமான வாழ்க்கை அமையும். அதோடு சேர்த்து அல்லது அவனது வளமையைப் பார்த்து, பொறாமைப்படும் எதிரிகளும் இருப்பார்கள்.சுக்ரன் சேர்க்கை இருந்தால் அடுத்தவர் சொத்தை தனதாக்கி கொள்வான். ஜாதகன் தர்ம சிந்தனைகளை உடையவனாக இருப்பான். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் புகழ் உடையவனாக இருப்பான். சாப்பாட்டு ராமனாக இருப்பான்.  எதையும் ரசித்து சாப்பிடக்கூடியவனாக இருப்பான். அவன் சாப்பிடுவதெல்லாம் மருந்து மாத்திரைகள் இன்றி தானியங்கி இயந்திரம்போல ஜீரணமாகிவிடும். வெற்றிகள் பலவற்றை அடையக்கூடியவனாக இருப்பான். அவனுடைய பத்துக்குடைவையவனும் , இந்த அமைப்பும் செவ்வாயும் சேர்ந்தால், சிலர் காவல் துறை ராணுவத்தில் பணிபுரிவார்கள். அதிகாரியாக இருப்பான். ஆற்றல் நிறைந்தவனாக இருப்பான். எதிரிகள் பணிவார்கள். அரசனைப் போல வாழ்வான். நீண்ட ஆயுளைப் பெற்றவனாக இருப்பான்.

ஏழாம் வீட்டில்  ராகு இருந்தால்: 

ராகு 7ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் ஊதாரியாக இருப்பான். பணத்தின் அருமை தெரியாமல் அதிகமாகச் செலவு செய்பவனாக இருப்பான். சிலருக்கு மகிழ்ச்சி இருக்காது. எப்போதும் உழன்று கொண்டிருப்பான். சிலருக்கு தேவையான புத்திசாலித்தனம் இருக்காது. சுதந்திரமாக இருக்க ஆசைப்படுவான் அடிக்கடி நோய்வாய்ப்படுபவனாக இருப்பான், இந்த அமைப்புள்ள சிலருக்கு, மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. சிலர் அவமானத்திற்கு உள்ளாக நேரிடும். பெண்களால் திட்டு வாங்க நேரிடும். அதீத நோயால்,அதாவது பால் வினை நோய்களால்  உடல் சீர்கெடும். சிலருக்குப் அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளும்படியான வாழ்க்கை அமையும். 

எட்டாம் வீட்டில்  ராகு இருந்தால்: 

ராகு 8ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் விவேகம் இல்லாத வேகத்தோடு செயல்பட்டு அடிக்கடி துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். பொய்க் குற்றச்சாட்டுக்களுக்கும் வீண் பழிச்சொல்லிற்கும் ஆளாக நேரிடும். இந்த அமைப்புள்ள சிலருக்கு ஆயுள் குறைவாக இருக்கும்.(எல்லோருக்கும் அல்ல!) சிலருக்கு வம்ச விருத்தி இல்லாமல் இருக்கும். முன் கர்ம வினை தொடர்கிறது என்று பொருள். சிலருக்கு உறவுகளும் அதிகம் இருக்காது; செல்வமும் இருக்காது. துயரங்கள் மட்டும் அதிகமாக இருக்கும். பொதுவாக இந்த அமைப்பினர் வாக்குவாதம், விதண்டாவாதம் செய்யக்கூடியவர்கள் சமயங்களில் சாதாரணப் பேச்சுக்கூட சண்டையில் முடியும் அநேக சூழ்நிலைகளில் தோல்வியையே தழுவ வேண்டியதாக இருக்கும். வெற்றிச் செல்வி விலகிப் போய்விடுவாள். ஆண்களாக இருந்தால், சிலருக்கு மூல நோய் உண்டாகும் (Piles Complaint) பெண்களாக இருந்தால் மாதவிடாய்ப் பிரச்சினைகள் இருக்கும்.


ஒன்பதாம் வீட்டில்  ராகு இருந்தால்:  

ராகு 9ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகத்தில் மற்ற அமைப்புக்கள் வலுவாக இருந்தால் அதாவது இந்த இடத்தில் இருந்து மூன்று கேந்திரங்களில் கிரஹங்கள் இருந்தால் இந்த இடத்தில் அமரும் ராகு ராஜ யோகத்தைக் கொடுப்பான்.  அதுவும் லக்ன கேந்திரம் ராகுவின் உச்ச வீடாக வந்து அதிலிருந்து நான்கு கேந்திரங்களில் கிரஹங்கள் இருந்தால் ஜாதகர் பெயர் சொல்லும் படி இருபார்.இல்லையென்றால் இல்லை! ராஜயோகம் உள்ளவர்களுக்கு, செல்வம், உறவுகள், ஆண் குழந்தைகள் என்று எல்லாம் அசத்தலாக இருக்கும் ஞானம் உள்ளவர்களையும், பெரியோர்களையும் போற்றும் தன்மையுடையவாக ஜாதகன் இருப்பான். குரு சேர்க்கை பெற்றால் அதீதமான ஸ்பிரிச்சுவாலிடி இருக்கும். இந்த இடத்து ராகு ஜாதகனின் தந்தைக்குக் கேடாக இருக்கும். பூர்விகச் சொத்துக்களுக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும்!

பத்தாம் வீட்டில்  ராகு இருந்தால்: 

ராகு 10ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் செய்யும் தொழிலில் அதீத வேகத்தோடு செயல் பட்டு தன் தொழிலிலும் வேலையிலும் புகழ் பெறுவான். இயற்கையாகவே தொழில்நுட்ப அறிவு இருக்கும். கடல் கடந்து சென்று சம்பாதிப்பார்கள். செவ்வாய் சூரியன் பத்தில் இருக்கும் ராகுவை பார்த்தால் சிலர் பாவச் செயல்களைச் செய்வதற்குத் தயங்க மாட்டார்கள். சிலர் வீரதீரச் செயல்களைச் செய்பவர்களாக இருப்பார்கள் மொத்தத்தில் வீரம், தைரியம், பாராக்கிரமம் ஆகியவைகளைக் கொண்டவனாக ஜாதகன் இருப்பான். எல்லா செளகரியங்களையும் பெற்றவனாக இருப்பான் அறிவு, அந்தஸ்து ஆகியவற்றால் மேம்பட்ட வாழ்க்கைச் சூழலில் ஜாதகனின் வாழ்க்கை அமைந்து சிறக்கும்! ஆனால் பெற்றவர்களுக்கு அந்திம காரியங்கள் செய்வதில் தடங்கள் இருக்கும்.


பதினொன்றாம் வீட்டில் ராகு இருந்தால்: 

ராகு 11ஆம் வீட்டில் இருந்தால்: ராகுவிற்கு நல்ல இடம். பதினொன்றாம் இடத்தில் ராகு அமையப் பெற்ற ஜாதகன் அதிகம் படித்தவனாகவும்,அந்நிய மொழிகள் படிப்பான். லாப நோக்கோடு   அதிகம் பொருள் ஈட்டுபவான். நீண்ட ஆயுளை உடையவனாக இருப்பான். நல்ல நண்பர்களையும், நல்ல கூட்டாளிகளையும் கொண்டவனாக இருப்பான். செய்யும் தொழிலில் அல்லது வேலையில், அனைத்து நுட்பங்களையும் தெரிந்தவனாக இருப்பான். அல்லது விரைவில் எதையும் கற்றுக்கொண்டு செயல்படுபவனாக இருப்பான். வலுவானவனாக இருப்பான். வளம் உடைய வாழ்க்கை அவனுக்குக் கிடைக்கும் அல்லது அமையும். அத்தனை சுகங்களையும், செளகரியங்களையும் அனுபவிப்பவனாக ஜாதகன் இருப்பான். செவ்வாயோ சூரியனோ சேர்க்கை பெற்றால் அரசில் அதிகாரம் படைத்தவனாக இருப்பான். இரண்டு குடும்பம் உண்டு.


பன்னிரெண்டாம் வீட்டில் ராகு இருந்தால்: 

ராகு 12ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன்தூக்கம் கெடும். பாவச் செயல்களைச் செய்பவனாக இருப்பான். அதையும் பிறர் அறியாத வண்ணம் செய்வான். உடல் உபாதைகளுக்கு ஆளாவான்.கண்களில் சதை வளரும். சிலருக்கு, செல்வமும் ஆண் வாரிசுகளும் இல்லாமல் இருக்கும். வலுவில்லாதவன். மன, மற்றும் உடல் வலிமை இல்லாதவன். பார்க்கும் வேலை அல்லது தொழில்களில் இருந்து வீழ்ச்சி அடைய நேரிடும்.  இந்த இடத்து ராகு, சனி, அல்லது செவ்வாயின் சேர்க்கை பெற்றால் தனக்கு தானே அழிவை தேடிக் கொள்வான்.சிலர் வெளிநாட்டில் இறக்க கூடும் அல்லது சிறை தண்டனை அனுபவிப்பார்கள்.

..................................................அன்புடன் ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்














……………………………………………………….அன்புடன் ஆஸ்

1 comment: