அதிக மாதம் எனப்படும் மலமாதம்.
பஞ்சாங்கத்தில்
சங்க்ரமணம் என்பது சூரியன் ஒரு ராசிமானத்தில் இருந்து அடுத்து ராசிமானத்திற்குள் நுழையும்
காலம் சங்க்ரமண காலம் எனப்படும். கணிதப்படி
சந்திரனை வைத்து கணக்கிடும் 27 நாட்கள் ஒரு
சந்தரமான வருஷம் 354 நாட்களை கொண்டது. சூரியனை
வைத்து கணக்கிடுவது நாள் ஒரு
செளரமான வருஷமாகும். அது 365 நாட்களை கொண்டது.
இந்த இரண்டுக்கும் இடையே உள்ள வித்யாசம் 11 நாட்களாகும்.
சந்த்ராமனப்படி,
2 ஆண்டுகள் 8 மாதத்திற்கு இடையே உள்ள வித்யாசம் 29.5 நாட்களாகும். அதாவது ஒரு மாதத்திற்கு சமமானதாக வருகிறது. எனவே 33வது மாதம் அதிக மாதம் என கணக்கிடப்பட்டு
இரண்டு முறைகளையும் (சந்த்ரமான வருஷம், செளரமான வருஷம்) சமநிலைக்கு கொண்டு வருவது இந்த
இந்த அதிக மாதமான மலமாதமாகும். சூரியன் சந்த்ரன்
சுழர்ச்சியில் உள்ள வேக கணக்கின்படி இந்த மல மாதம் 28 முதல் 36 மாதங்களுக்குள் எந்த
மாதத்தில் ஏற்படும். அதாவது அந்த மாதத்தின்
ராசி மானத்திற்குள் சூரியன் நுழையாமல் இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பெளர்ணமி ஏற்படும்.
சித்திரையில்
துவங்கி பங்குனி வரை பானு, தாபன, இந்திர,
ரவி, கபஸ்தி , ஆர்யமா, ஹிரண்ய ரேதஸ, திவாகர, மித்ரா, விஷ்ணு, அருணா, சூர்யா என்ற ஆதித்யர்கள்
உதிக்கிறார்கள். இதில் எந்த அதித்யனும் உதிக்காத
மாதம் அதிக மாதம் என்ப்படும் மலமாதமாகும்.
அதற்கு பெயர் மலிம்லுசா அதாவது நபும்ஸகா என்பபடும் பால் அற்ற மாதமாகும்.
எந்த ஆதித்யரும்
உதிக்காத இந்த மாதத்தில் பதினோரு(ஏகாதச) ருத்திரர்கள், பனிரெண்டு (துவாதச) ஆதித்யர்கள்
அஷ்ட வஸுக்கள் , பிரஜாபதி, வஷட்கார எனும் 33 பேர் இந்த மாதத்தின் அதி தேவதைகள் ஆவார்கள். இவர்கள் எல்லோருமே ஆதிமூலமான பரம்பொருளின் வர்க்கமாவார்கள்.
ஏகாதச ருத்ரர்கள்
என்பவர்கள் பீமா, ரைவதா, ஓஜ, அஜைகாபத, மஹன்,
பஹூரூபா, பாவ, வாமதைவ, உக்ர, வ்ருஷாகபி மற்றும் அஹிர்புத்னி ஆகியோர்.
துவாதச ருத்ரர்கள்
என்பவர்கள் விவஸ்வான், ஆர்யமா, பூஷா, த்வாஸ்த்ரு,
ஸவித்ரு, பக, தாத்ரு, பர்ஜன்ய, வருண, மித்ர, ஷக்ர, உருக்ரம ஆகியோர்.
அஷ்ட வஸுக்கள்
என்பவர்கள் த்ரோண, துருவ, தோஷ, அர்க, அக்னி, த்யெள, பிராண,விபவக ஆகியோர் . இந்த எட்டு பேர்தான் நம் பித்ரு உலகத்தின் காவலர்கள். இவர்கள் தான் அவர்களின் திதிகளை ஞாபகப்படுத்தி அந்த
திதியில் பூமிக்கு அனுப்பி அவர்கள் சந்ததிகள் தரும் அவிசு எனப்படும் பிண்டத்தை எற்க
அனுமதி தருவார்கள். அந்த நேரத்தில் அவர்கள் எந்த தடையும் இல்லாமல் வருவதற்கு எள்ளும்
(தடைகளை அகற்றும் தானியம் – உரியவர் சனி) அந்த பிரயாணத்தில் தாகம் தீர்க்க நீரையும்
கொடுத்து வரவேற்று உணவளிப்பது.
ஆகவே இந்த மலமாதத்தில்
புண்யங்களை அதிகம் திரட்ட வேண்டும் என்பதற்காக சுபங்களை நீக்கி, விரதங்களை ஏற்று தனக்கு
ஏற்ப்பட்ட எல்லா பாவங்களையும் போக்கி கொள்ள அந்த பரம்பொருளே ஏகாதச, துவாதச ருத்திரர்களாகவும்,
பித்ரு லோகத்தின் அஷ்ட வஸுக்களும் பூமிக்கு வந்து நம்மை பாபங்களில் இருந்து காப்பாற்றி
புண்ய ஸ்வரூபமாக மாற்றுவதால் இதற்கு மலமாதம் என்று பெயர். இந்த மாதத்தில் ஸ்தீரிகள் விரதம் இருப்பது நல்லது.
1. அருணோதய காலத்தில் ( சூரிய உதயத்திர்கு முன்பிரம்ம
முஹூர்த்தத்தில்) இந்த மாதத்தின் எல்லா நாட்களிலும் குளிப்பது.
2. அயசித விரதம்:
உள்ளதை கொண்டு திருப்தி அடைவது. அதாவது
இந்த மாதத்தில் எதையும் கடனாகவோ, இலவசமாகவோ பெற கூடாது.
3. அகண்ட தீபம்: வீட்டில் இந்த மாதம் முழுவதும் தொடர்ந்து அகண்ட தீபம் ஏற்றுவது.
4. முப்பதாவது நாள் உங்களின் இஷ்ட தேவாதா கோயிலுக்கு
சென்று 33 விளக்கு ஏற்றி வழிபடுவது. இது மிகச்சிறந்த
பரிகாரம் எல்லா வகையான பித்ரு தோஷத்தையும்
அகற்றும்.
5. ஒன்று விட்டு ஒரு நாள் உபவாசம் இருப்பது.
6. அப்படி இருக்க முடியாதவர்கள் திருவோண நக்ஷத்திரம், வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி, பெளர்ணமி, அமாவாசை
ஆகிய நாட்களில் முழு விரதம் இருப்பது.
7. அல்லது பகல் முழுவதும் விரதம் இருந்து அன்று இரவில்
ஒருவேளை உணவு உண்பது.
8. மாதத்தின் எல்லா நாட்களிலும் வீட்டிற்கு ஒரு தம்பதியை
அழைத்து தாம்பூலம் அளிப்பது.
இந்த மலமாதத்தில்
சுப காரியங்களை விலக்கி , விரதங்களுக்கு மதிப்பளித்து அதை செயல் படுத்தி தெய்வ பிரார்த்தனைகளை
செய்து பாபங்களை போக்கி பித்ருக்களை சந்தோஷப்படுத்தி
வாழ்க்கையில் தடைகளை அகற்றி முன்னேற்றம் அடைய
முயற்ச்சி செய்வது நல்லது.
அன்புடன் ஆஸ்ட்ரோ
கிருஷ்ணன்.
No comments:
Post a Comment