களத்திரகாரகன்களத்திர
சுகத்தை
தருகிறானா
பாதிக்கிறானா.
சுக்ரன்
, இந்த பெயரை கேட்டவுடனே ஒவ்வொருவர் மனதிலும் முகத்திலும் ஏழுச்சியும் மலர்ச்சியும்
இருக்கும். ஆமாம் வாழ்க்கையில் ஒவ்வொருவரும்
எதிர்பார்பது பணம் , வசதியான வாழ்க்கை, கார், பங்களா, சொகுசு வாழ்க்கை அழாகான மனைவி. இதற்கெல்லாம் காரண கர்த்தாவான காரகர் அவர்தான்.ஜாதகத்தில்
இவருக்கு பாக்யகாரகர் என்று பெயருண்டு. தன்
கஷ்டங்களுக்கெல்லாம் விடிவு சுக்ர தசை, சுக்ர புத்தியில் கிடைக்குமா என்று தான் எல்லோருமே
எதிர்பார்பார்கள். ஜாதகத்தில் சுகஸ்தானம் என்ற
இடத்திற்கு இவரே உரிமையாளர். அதிபதி யாரக
இருந்தாலும் அங்கு இவர் ஸ்தான பலம் பெற்று விட்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஜாதகத்தின் சுப பாவங்களான 2,4,5,7,9,11 இடங்கள்
இவர் பலமாக இருந்தால், குடும்ப மகிழ்ச்சி, அறுசுவை போஜனம், அடுத்தவரை கவர்ந்திழுக்கும்
முக லட்சணம், இனிக்க இனிக்க பேசும் தன்மை,
வீடு வண்டி, வாகனம் போன்ற சுக வசதிகள்,
நல்ல குழந்தைகள், மனைவியால் வருமானம்,
நல்ல களத்திரம் , பெருஞ் செல்வவளம்,
தன் ஆசைகளையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ளும் திறன் பாகயங்கள் எல்லாம் கிடைக்கும் வாழ்க்கை
ஆகியவை இருக்கும். இவர் கெட்டுப்போனாலோ, நீச்சம் பெற்றாலோ வாழ்க்கையில்
அத்தனை சுகமும் போய்விட்டதே என்று அல்லல் படும் வேதனை . ஒருவரின் வாழ்க்கையை இன்பமாகவும், துன்பமாகவும்
மாற்றுவதில் ஜாதகத்தில் இவருக்கு பெரும் பங்குண்டு.
ஒரு
ஜாதகத்தில் ஏழாமாதியை விட அதற்கு காரகத்துவ
கிரஹமான சுக்ரன் அதிக முக்யத்துவம் பெறுகிறார்.
சில ஜாதகங்களில் ஏழாம் அதிபதி பலவீனமாக இருந்தாலும் காரகரான சுக்ரன் பலமாக இருந்தால்
திருமண வாழ்க்கை நன்றாக இருக்கிறது. சில ஜாதகங்களில்
ஏழாம் அதிபதி பலமாக இருந்தாலும் காரகரான சுக்ரன் பலவீனமாக இருந்து விட்டால் அவரின்
திருமண வாழ்க்கை நன்றாக இருப்பதில்லை. மேலும்,
கால புருஷனுக்கு எட்டாம் வீடான விருச்சிகத்தில் களத்திரகாரகர் சுக்ரன் அமர்ந்தால் அந்த
இடம் சரியான இடமாக அவருக்கு இருப்பதில்லை.
ஏன் என்றால் அவரின் மூலதிரிகோண வீடான துலாத்திற்கு அதாவது கால புருஷனுக்கு எழாவது
இடமான துலாம் சர ராசியாக இருப்பதாலும் அதற்கு விருச்சிகமும் மேஷமும் மாரக ஸ்தானமாக
இருப்பதாலும் விருச்சிகம் அவருக்கு பாதகத்தை ஏற்படுத்தும் இடமாக இருக்கிறது. மேலும் கால புருஷனுக்கு ஏழாம் அதிபதி சுக்ரனுக்கு
எட்டாம் வீடான விருச்சிகம் மறைவு ஸ்தானமாகும் . எனவே களத்திரகாரகனோ, எந்த லக்னத்திற்கும்
களத்திர ஸ்தான அதிபதியோ விருச்சிகத்தில் அமராமல் இருப்பது திருமண வாழ்க்கையில் பிரச்சனை
தராமல் இருக்கும்.
பலமான
சுக்ரன் லக்னத்தில் கேதுவோடு இருந்து அதற்கு ஏழில் இருக்கும் ராகு களத்திரத்திற்கு
நோயை கொடுத்து, அதன் பார்வையால் கேதுவோடு சேர்ந்த சுக்ரனை பாதித்து ஜாதகரை அந்த சுகத்தை
அனுபவிக்காமல் செய்து விடும்.
இரண்டில்
இந்த சுக்ரன் பலமிழந்து நின்றால் தன வருவாயை
கெடுத்து குடும்ப மகிழ்ச்சியை இழக்க வைத்து
விடும். சில சமயம் மனைவி குடும்பத்தை விட்டு
பிரிந்து போய்விடுவாள்.
மூன்றில்
இந்த சுக்ரன் பலமிழந்து நின்றால் வீரியத்தை குறைத்து, தாம்பத்ய சுகத்தை எட்ட விடாமல்
செய்து விடுவதோடு, மனைவியோடு ஒத்து போகாத தன்மையை
கொடுக்கும். பரத்தையர் சகவாசத்தை ஏற்படுத்தும்
நான்கில்
பலமிழந்து நின்றால், வீடு வண்டி ஆகியவற்றால் நஷ்டங்களும், தாயின் ஆசைகளை
நிறைவேற்ற முடியாத நிலையை ஏற்படுத்தும். இங்கு
இவர் செவ்வாய், ராகு அல்லது கேதுவோடு சேர்ந்தால் மண வாழ்க்கையை முறித்துவிடும். மனைவியை இரண்டாவது முறை மணக்க வேண்டும். அதாவது
இரண்டாவது தாலி கட்ட வேண்டும்.
ஐந்தில்
பலமிழந்து நின்றால் பணம் சம்பாதிக்க மனதை குறுக்கு வழியில் செலுத்தி, அதனால் அடுத்தவர்
பணத்தை தனதாக்கி கொள்ளும் குணத்தை தரும். ரேஸ்,
லாட்டரி, சூதாட்டம் போன்ற விஷயங்களில் ஆசையை தூண்டும். பெண் குழந்தைகளுக்கு இள வயதில் நோயை தரும். பெண் ஜாதகத்தில் இங்கு ராகுவோடு சேரும் சுக்ரன்
கர்ப்பப்பை கோளாறுகளை தரும்.
ஆறாம்
பாவத்தில் சுக்ரன் பலவீனமானால் ஜாதகருக்கு அதிக காம இச்சையை தூண்டி அதிக பெண் போகத்தை
கொடுத்து பால் வினை நோயை தரும். இங்கு இவர் நீச்சமானால ஜாதகரின் உடம்பில் அந்த நோயால்
துர்நாற்றம் வரும். ஜாதகரின் துணைக்கு இரண்டாம் திருமணத்தை ஜாதகரே செய்து வைக்ககூடிய
நிலைமை ஏற்படும்.
ஏழாம்பாவம்
பாவம் மற்றும் எட்டாம் பாவத்தில் சுக்ரன் பலமும்
இல்லாமல், பலவீனமும் இல்லாமல் இருந்தால் களத்திரதோஷமாகும். ஆனால் இங்கு பலவீனமானால் அந்த தோஷம் அடிபட்டு போய்விடும். தோஷத்தை தரும் அதாவது காரக பாவ நாஸ்தியை தரும் இடத்தில்
அந்த காரகன் பலவீனப்பட்டு கெட்டால் ராஜ யோகத்தை தந்து விடுவான். சிலருக்கு திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையில் உயர்வான
நிலை ஏற்படும். ஆனால் மனைவியை ஜாதகர் தன் தொழிலில் பங்குதாரராக சேர்த்துக் கொள்ளக்கூடாது.
இருப்பத்தி ஐந்து வயதிற்க்கு முன்பாக திருமணம் செய்து கொள்ளக் கூடாது. தனிக் குடித்தனம் கூடாது.
ஒன்பதாம்
பாவத்தில் சுக்ரன் பலவீனப்பட்டால் மனைவியுடன் சகோதரியோடு ஒரே வீட்டில் வசிக்காமல் இருப்பது
நல்லது. சில சமயம் மனைவியின்சகோதரியை இரண்டாம்
திருமணம் செய்து கொள்ளும் நிலைமை ஏற்படும்.
ஜாதகரின் தந்தைக்கு இரண்டு சம்சாரம் இருக்க வாய்ப்புண்டு.
பத்தாம்
பாவத்தில் சுக்ரன் பலவீனமானால் செய் தொழிலில் நஷ்டம் ஏற்படும். சாதாரணமாகவே பத்தாவது கேந்திரம் சுக்ரனுக்கு நல்ல
கேந்திரம் இல்லை. சொத்தை தொழிலுக்காக அடமானம்
வைத்து நஷ்டப்படுவார்கள். சிலபேர் மனைவியால்
ஏற்படும் அதிக செலவுகளால் குடும்பத்தை சமாளிக்க முடியாமல் கடன் வாங்கி கஷ்டப்படுவார்கள்.
பதினோராம்
பாவத்தில் பலவீனமானால் ஜாதகரின் ஆசைகள் நிறைவேறுவது கடினமாக இருக்கும். தன் குழந்தைகளின் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைக்காக சிலர் கோர்ட் செலவுகளால் அதிக
துன்பத்தை அடைவார்கள்.
பனிரெண்டாம்
பாவத்தில் சுக்ரன் பலவீனமானால் ஜாதகருக்கு தன் வீட்டில் படுக்கை சுகம் கிடைப்பது அரிது.
அதாவது ஜாதகருக்கு நிம்மதியான தூக்கம் இருக்காது.
இங்கு பலவீனப்பட்ட சுக்ரனோடு சனி சேர்ந்தால் சட்ட சிக்கல்கள் ஏற்பட்டு சிறை
வாசம் ஏற்பட வாய்ப்புண்டு.
இப்படி
சுக்ரன் பலவீனப்பட்டால் ஸ்ரீரங்கம் சென்று கொள்ளிடம் ஆற்றில் பசும் பால் ஊற்றி அதில்
குளித்து பரிகாரம் செய்து கொள்வது, வெள்ளிக்கிழமைகளில் லக்ஷமி பூஜை செய்வது, வீட்டில்
விளக்கு பூஜை செய்வது, பசுவிற்கு உணவளிப்பது, லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது, ஏழை
பெண்களுக்கு அன்ன தானம் செய்வது, மகாலக்ஷ்மி கோயிலுக்கு விளக்கிற்கு நெய் வாங்கி தருவது. சோளிங்கர் நரசிம்மர், ஆஞ்சனேயர் வழிபாடு செய்வது,
விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது , வீட்டில்
இந்த்ராக்ஷி, சிவகவசம் பாராயணம் செய்வது, பழனி சென்று அங்குள்ள போகர் சன்னிதி முன்
அமர்ந்து தியானம் செய்வது, ஸ்ரீ சக்ர பூஜை
செய்வது, பெளர்ணமி அன்று சமயபுரம் மாரியம்மன் வழிபாடு செய்வது ஆகியவை பரிகாரமாகும்.
இதை
ஏந்த பாவத்தில் சுக்ரன் பலவீனமாக இருக்கிறாரோ, அதற்கேற்ப மேலே சொன்ன எதாவது ஒரு பரிகாரம்
செய்வது நல்லது. அதை உங்கள் அருகாமையில் இருக்கும் ஜோதிடரிடம் கேட்டு செய்யவும்..
………………………………………………………………அன்புடன்
ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்.
No comments:
Post a Comment