Wednesday 21 March 2018


சகுனங்களும் நிமித்தங்களும்
மனிதனின் அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒன்றாய் இருப்பது சகுனமும் நிமித்தமும் ஆகும்.   மூட நம்பிக்கயில்லாதவர்கள் கூட இதில் அதிக நம்பிக்கை உள்ளவர்கள். ஆனால் அதற்கு அவர்கள் சொல்லும் வார்த்தை என்பது இல்லை சார் இது ஒரு சென்டிமென்டாக வைத்துக் கொண்டுள்ளேன் என்பார்கள்.
சகுனம்  நிமித்தம் என்பது நமக்கு எதிர்பாரமல் சுற்றுப்புரத்தில் நடப்பது, நம்மை எதிர் நோக்கி இருப்பது, கேட்கக் கூடிய சப்தங்கள் என்பவை ஆகும். நாம் ஒரு விஷயம் பேசிக்கொண்டிருக்கும் போதோ, ஒரு காரியம் நடத்திக் கொண்டிருக்கும் போதோ, பக்ஷிகள், விலங்குகள், பல்லி போன்ற ஜந்துக்களால் ஏற்படுதப்படும் சப்தங்கள், மனிதர்கள் உதிர்க்கும் வார்த்தைகள் ஆகியவைகளால் நமக்கு மனதில் ஏற்படக் கூடிய உணர்வுகள் சம்பந்தப்பட்டது.
நிமித்தம் என்பது தானே ஏற்படுவது.அதை நம்மால் மாற்ற முடியாது.  சகுனமும் என்பது அப்படி இருந்தாலும், சில சமயம் நம்மால் ஏற்படுத்திக் கொள்வது  ஆகும். தானே ஏற்படும் நிமித்தங்களை நம்மால் மாற்ற முடியாது. ஆனால் நல்ல சகுனங்களை நாமே ஏற்படுத்திக் கொள்வோம்.  உதாரணமாக நாம் ஒரு நல்ல காரியத்திற்காக வெளியே செல்கிறோம் என்றால் நம் வீட்டை சேர்ந்த பெண்களை எதிரில் வரச் செய்து அதன்பிறகு வெளியே கிளம்பிச் செல்வோம்.  எனவே இது போன்ற விஷயங்கள் ஒரு மனிதனின் அன்றாட வாழ்க்கையில் அவனோடு சம்பந்தப்பட்டு அவன் மனம் சார்ந்த விஷயங்களில் ஒரு தாக்கத்தை அதிகமாகவே ஏற்படுத்திவிடுகிறது.  வெளியே கிளம்பிச் செல்கையில் எதிரில்  ஒரு கணவனை இழந்த பெண் வந்தால் அபசகுனமாக பார்ப்பதும், அது தன்னுடைய  நெருங்கிய உறவாக இருந்தால் அதை அபசகுனமாக பார்க்காத தன்மையும்  என இருவித மனப்பாங்கில் உள்ளவர்களாக இருக்கிறோம்.  இதில் நமக்கு நாமே ஒரு ஸ்திரத்தன்மை இல்லாமல் இருக்கிறோம்.  அதேபோல் நாம் ஒரு நல்ல விஷயமாக பேசிக் கொண்டிருக்கையில், ஒருவர் தும்மினால் அபசகுனமாகவும் அவரே இன்னொரு முறை தும்மினால் சுப சகுனமாகவும் பார்க்கப் படுகிறது.  அதேபோல் சுற்றுப்புரத்தில் ஒருவர் அமங்கல வார்த்தை பேசினாலே அதுவும் அபசகுனமாக இருக்கிறது.  அதனால் தான் இன்றும் சுபகாரியங்கள் நடக்கும் இடங்களில் மங்கல

வாத்தியங்கள் முழங்கப் படுகின்றன.   அதாவது அந்த நல்ல காரியங்கள் நடக்கும் நேரத்தில் அபசகுன வார்த்தைகள் காதில் விழாமல் இருக்க மந்திர உச்சாடனங்களும், மங்கல வாதியங்களின் சத்தங்களின் அதிர்வலைகளும் அதை நல்லதாக மாற்றிவிடும்.  சங்கின் ஓலி சுப சகுனமாகும்.  பண்டய காலங்களில் போர் காலங்களில் இழைக்கப்படும் சங்கின் ஒலி வெற்றி சப்தமாகவும் நல்ல சகுனமாகவும்  கருதப்பட்டது. 
வீட்டில் உள்ள  விருக்ஷம் பூத்தால் சுப சகுனமாகும்.  அதுவே முறிந்தாலோ, அதில் காய்த்த காய் வாடினாலோ அசுப சகுனமாகும். வீட்டில் முருங்கை மரம் வளர்க்க கூடாது .  ஏனென்றால் அதை பிசாச மரம் என்பார்கள்.  அது முறிந்து விழுந்தால் சுற்றுப்புரத்தில் ஒர்  இறப்பு ஏற்படும்.  பேசிக் கொண்டிருக்கும் போது கெளலி எனப்படும் பல்லி இடும் சப்தம் அது எந்த திக்கிலிருந்து வந்தது என்பதை பார்த்து அதை சுப, அசுப சகுனமாக பார்க்கப்படுகிறது.  பஞ்சாங்கத்தில் பல்லி சொல்லுக்கு பலன், பல்லி விழுதலின் பலன் என்று கொடுக்கப்பட்டுள்ளது.  
சுப சகுனமாக, வீணை, புல்லாங்குழல், மேளம், சங்கு, இவைகளை பார்ப்பதும், இவைகளின் சப்தமும் ஆகும்.  அழகிய பெண்கள், நாட்டிய பெண்கள், தயிர், மஞ்சள் கலந்த அரிசி(அக்ஷதை) கரும்பு, அருகம்புல், நீர் நிரம்பிய குடம், பூக்கள், மாலைகள், கன்னி பெண்கள், கருடன்,ஆலய மணி ஓசை, விளக்கு, தாமரை பூ, நாய் தன் உடலை சிலிர்ப்பது, பிணம் எதிரே வருவது, இரட்டை பரதேசி, பசு மாடுகள்   இவைகளை கண்டால் சுபசகுனமாகும்.

அணையும் விளக்கு, தண்ணீர் பாத்திரம் சாய்ந்து நீர் வெளியேறுவது, உடுத்திய ஆடை கிழிவது, செருப்பு அறுந்து போதல், அமங்கல வார்த்தை, வீட்டுக்கு விலக்கான பெண்களை காணுதல், ஒற்றை தும்மல், சத்தமான வார்த்தைகள், வீட்டில் மரம் முறிதல், பல்லி இடப்புறம் கத்துவது, பன்றி, பாம்பு, குதிரையை காண்பது, சத்தமிடல், எண்ணெய் குடம், விளக்குமாற்றை கையில் வைத்திருப்பது,


தன் நக்ஷத்திரத்திற்குறிய பக்ஷி இடமிருந்து வலமாக செல்வது , விருக்ஷம் சாய்வது, மிருகம் இறந்து விட்டதாக கேட்பது  சாப்பிட்டு விட்டு போ , வந்து சாப்பிடு என்ற
வார்த்தைகளும்,  எதிரில் அலங்கரிங்கப்பட்ட தேரில் ஸ்வாமி வருபது, ஒற்றை பரதேசி,  எண்ணெய் தலையுடன் எதிரில் வரும் பெண், விதவை, எருமை மாடு ஆகியவை அசுப சகுனமாகும்.
பொதுவாக, ஜாதகத்தின் கால புருஷனனின் லக்னம் மேஷமாகும். அதன் ஏழாம் வீடு துலாம் ஆகும். அதன்அதிபதி சுக்ரன் ஆகும்.  ஒன்றொக்கொன்று ஏழாம் வீடாக வருவதால் சுபத்தன்மை நிறைந்தவையாக பார்க்கப்படுகிறது.  ஆகவே சுக்ரன் சம்பந்தப்பட்ட பொருட்களெல்லாம் சுபத்தன்மை நிறைந்தவை.  அதேபோல் கால புருஷனின் பாதகாதிபதி சனி  ஆகவே அவர் சம்பந்தப்பட்ட பொருட்களெல்லாம் அசுபத்தன்மை நிறைந்தவையாக பார்க்கப்படுகிறது. அதேபோல் சூரியன் சந்திரருக்கு  ராகு கேது பகையாவதால் அவை அசுபமாக பார்க்கப்படுகிறது.  பறவைகள் கூட்டமாக பறந்தால் சுப சகுனமாகவும், அவை கத்திக் கொண்டே பறந்தால் அபசகுனமாகவும் ஆகிறது. ஒரு நல்ல விஷயமாக வெளியே செல்லும் போது வீட்டில் வளர்க்கும் மீன்களில் ஒன்று இறந்தால் அபசகுனமாகும். 
சரி இதில் சுப சகுனம் என்பது நல்லதாக பார்க்கப்பட்டாலும் சிலருக்கு அது வெற்றியை தராவிட்டால் மனது சங்கடப்பட்டுவிடுவார்கள்.  ஏன் நாம் நல்ல சகுனம் பார்த்துதானே வந்தோம் ஏன் தடங்கல் ஏற்பட்டது என்று குழம்புவார்கள். அது வேறொன்றுமில்லை.  அவர் கிளம்புகிற நேரத்தில் அவரின்ஜாதகத்தில்  லக்னாதிபதியும்  அவரின் ஏழாம் அதிபதியும் நட்பாக இருந்தால்லும் அவர் ஜாதகத்தின் யோகாதிபதியோடு சேக்கையோ, பார்வையோ கொண்டால் நல்ல சகுனத்திற்கு ஏற்ப நல்ல பலனாகும் , பகையாக இருந்தாலும் அவர் ஜாதகத்தின் பாதகாதிபதியோடு சேர்க்கையோ பார்வையோ கொண்டால்  நல்ல சகுனம் பார்த்து கிளம்பினாலும் அது கெட்ட பலனாகவும் மாறும்.   அதேபோல் சிலர் அசுப சகுனத்தை பார்த்தாலும் அதை சட்டை செய்யாமல் வெளியே சென்று வெற்றியோடு

வருவார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் அதெல்லாம் மூட நம்பிக்கை . அதையெல்லாம் நம்பாமல் சென்றதால் தான் எனக்கு வெற்றி என்பார்கள். ஆனால் அந்த நேரத்தில் அவர் ஜாதாத்தின் ஏழாம் அதிபதி நல்ல நிலையில் அவர் லக்னாதிபதியோடு சேர்க்கை பார்வை கொண்டிருப்பார்.  அல்லது அவர் பாதகாதிபதி அவரின் யோகாதிபதியோடு நல்ல சேர்க்கையோ, பார்வையோடு கொண்டிருப்பார். இதை அந்த நேரத்திற்குண்டான ப்ரஸன்ன ஜாதகத்தின் மூலம் கண்டு உறுதிபடுத்திக் கொள்ளலாம்.  இதில் நிறைய விஷயங்கள் இருப்பதால் அடுத்த பகுதியில் தொடர்ந்து பார்க்கலாம்.

நன்றியுடன் ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்.  போன்: 9094176198.
  
     


No comments:

Post a Comment