கால
சர்ப்ப தோஷம் ………………………………… தொடர்ச்சி
கால சர்ப்ப தோஷம்
பற்றி ஏற்கனவே பார்த்தோம்.   ராகு கேதுவின்
அச்சிற்க்குள் அனைத்து கிரஹங்களும் லக்னம் உட்பட அமர்ந்து விட்டால் எப்படி பட்ட நிலைமை
இருக்கும். அதன் வகை எவ்வளவு, ஒவ்வொரு வகை கால சர்ப்ப தோஷங்களும் எந்த காலத்தில் யோகத்தை
தரும் என்பதையும் பார்த்தோம்.  இப்போது, அந்த
அச்சிலிருந்து லக்னம், ஒவ்வொரு பாவதிபதியும் விலகி நின்றால் என்ன பலன் என்பதை பார்ப்போம்.
ராகு கேது பிடியில்
இருந்து லக்னம் மட்டும் விலகி வெளியே நின்றால் தன் சொந்த உழைப்பாலேயே முன்னுக்கு வரமுடியும்.
சரியான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்காமல் கஷ்டப்படுவார்கள்.  தந்தையின் குணத்தில் இருந்து மாறுபட்டவர்களாக இருப்பார்கள்.   சில சமயங்களில் குடும்ப உறுப்பினர்களால் அவமானப்படுத்த
படுவார்கள்.  சுய சார்பு அற்றவர்களாக இருக்க
வேண்டி வரும்.  லக்னாதிபதி மட்டும் விலகி நின்றால்
அந்த கிரஹ காரகத்துவம் சார்ந்த விஷயங்களில் தன்னிறைவு அற்றவர்களாக இருப்பார்கள்.  மெடிடேஷன், யோகா போன்ற மன அமைதி தரும் விஷயங்களால்
பாதிப்பை குறைக்கலாம்.
இரண்டாவது பாவாதிபதி
மட்டும் விலகினால் குடும்ப உறவுகளால் பண பிரச்சனை எப்போதும் இருக்கும். அதற்க்காக அடிக்கடி
வேலை மாறுவார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத சூழ் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.ஆகவே
யாருக்கும் உத்திரவாதம் கொடுக்காமல் இருப்பது நல்லது. முக்கியமாக ஜாமீன் தராமல் இருப்பது
நல்லது. கண்ணில் சதை வளர்ந்து அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிலை ஏற்படும். எந்த விஷயத்திலும்
தலையிடாமல் இருப்பது பாதிப்பை குறைக்கும். 
மூன்றாம் பாவாதிபதி
மட்டும் விலகி நின்றால் இளைய சகோதரர்களால் அதிக பிரச்சனைகள் ஏற்படும். அவருக்காக கடன்
பட வேண்டிய சூழல் ஏற்படும்.    வேலை விஷயமாக
அடிக்கடி பயணம் ஏற்பட்டு உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும்.  வதந்திகளால் அதிக பிரச்சனைகளுக்கு ஆளாவார்கள்.  இவர்கள் மற்றவரிடம் பேசும் சாதாரண பேச்சு கூட பெரிய
பிரச்சனையாகி இவர்களை தாக்கும். அந்த சமயத்தில், 
கூட வேலை செய்பவர்கள் கூட உதவி செய்யாமல் விலகுவார்கள்.  தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தால் பிரச்சனை
வராது. 
நான்காம் பாவாதிபதி
மட்டும் விலகினால் இதயம் நுறையீரல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு.   சரியான சாப்பாடு, உறக்கம் இல்லாமல் சுகம் கெடும்.   வண்டி வாகனங்களால் அதிக செலவுகள் ஏற்படும்.  அதேபோல், வீட்டின் மராமத்து செலவுகளால் கடன் வாங்க
வேண்டிய சூழல் எற்பட்டு சொத்து விரயமாகும். 
தாய் வழி பூர்வீக சொத்துக்களில் வில்லங்கம் ஏற்பட இவரே காரணமாக இருப்பார்.  வரவுக்கு ஏற்றபடி செலவு செய்ய பழகிக் கொள்வது நல்லது.
ஐந்தாம் பாவாதிபதி
மட்டும் விலகினால் (ஷேர் மார்க்கெட்), பங்கு வர்த்தகத்தில் , ரேஸ், லாட்டரி போன்றவைகளில்
பணம் விரயமாகும்.  பாட்டனார் சொத்துக்கள் நிலைப்பது  கஷ்டம். 
தன் புகுந்த வீட்டு உறவுகள் விரோதியாவார்கள்.  குழந்தைகளின் தவறான போக்கால் சமூகத்தில் தலை குனிவு
ஏற்பட வாய்ப்புண்டு.  பிள்ளைகளை கவனமாக வளர்ப்பது
பெரிய பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.
ஆறாம்பாவதிபதி
மட்டும் விலகி நின்றால் உடலி நோயின் தாக்கம் அதிகம் இருக்கும்.  அதிகமான கோர்ட் வழக்கு என்று அலைச்சலை கொடுக்கும்.   அதிக கடன்களால் காவல் துறை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில்
சிக்க நேரிடும்.   சொத்து விஷயங்களில் சொந்தங்களே
கோர்ட்டுக்கு இழுப்பார்கள்.  விட்டு கொடுத்து
வாழ்வது நல்லது.   
ஏழாம் அதிபதி
மட்டும் விலகி நின்றால்  தொழில் கூட்டாளிகளால்
அதிக பிரச்சனை ஏற்பட்டு தொழில் முடங்கும். அந்நிய தேசத்தில் பாதிப்புகள் ஏற்படும்.  கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் ஏற்பட்டு குடும்ப
வாழ்வு சந்தோஷம் இல்லாமல் இருக்கும்.  கூட்டுத்தொழில்
செய்யாமல் இருப்பது நல்லது.  குடும்ப உறவு சார்ந்த
உறவுகளை வியாபாரத்தில் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
எட்டாம் பாவாதிபதி
மட்டும் விலகி நின்றால் குடும்ப தொழிலில் அதிக நஷடம் எற்படும்.  வரவை விட செலவு அதிகமாகி அதனால் கணவன் மனைவிக்குள்
சண்டை சச்சரவுகள் ஏற்படும். மனைவியின்  வார்த்தைகள்  மனதை ரணமாகும்.  நிம்மதி குறையும்.  திடீரென்று விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த
பாவாதிபதியின் திசை புத்தியில் மரணத்திற்கு ஒப்பான கண்டம் ஏற்பட வாய்ப்புண்டு. 
ஒன்பதாம் அதிபதி
மட்டும் விலகி நின்றால் தந்தையின் உடல் நிலை பாதிப்பு ஏற்படும்.  குல தெய்வம் வீட்டில் தங்காத சூழ்நிலை ஏற்படும்.  ஆகவே குல தெய்வ வழிபாடு  அவசியம் செய்ய வேண்டும்.   தன்னை சார்ந்த சமூகத்தில் கெளரவ பங்கம் ஏற்பட வாய்ப்புண்டு.  தெய்வ திருப்பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டால்
பாதிப்பு குறையும்.  அதில் தடை தாமதங்கள் ஏற்பட
வாய்ப்புண்டு.  
பத்தாம் அதிபதி
மட்டும் விலகினால் தன் களத்திரத்தின் மாமியார் வகையில் மனக் கவலை ஏற்பட வாய்ப்புண்டு.  செய்தொழில் சரியாக நடக்காமல் லாபங்கள் குறையும்.  பெயர் புகழ் குறையும்.  குடும்ப உறவுகளை மதித்தி நடந்தால் பாதிப்பு குறையும்.
பதினோராம் அதிபதி
மட்டும் விலகினால் மனதில் ஏற்படும் ஆசைகள் நிறைவேறாது.  வேலையில் வரும் வருமானத்தினால் குடும்பத்தை நடத்த
முடியாத சூழ்நிலை ஏற்பட்டு கடன் பட நேரிடும். குடும்ப சொத்து விஷயமாக மூத்த உடன் பிறப்போடு
வம்பு வழக்குகள் ஏற்படும்.  சில சமயம் அவருக்காக
சொத்து விரயமாகும். தாயின் உடல் நிலை கெடும். 
தனக்கு கிடைத்ததை மட்டும் ஏற்று வாழ பழகிக் கொள்வது நல்லது.
பனிரெண்டாம்
பாவதிபதி மட்டும் விலகினால் தூக்கம் கெடும்.  
எதிலும் தடை தாமதங்கள் ஏற்படும்.  தேவையற்ற
பழக்க வழக்கங்கள் ஏற்படும்.   அதிக பெண் போகம்
ஏற்படும்.  வீண் செலவுகளால் குடும்பத்தில் குழப்பம்
ஏற்பட்டு குடும்பத்தை பிரிய நேரிடும். நண்பர்கள் சேர்கையில் கவனமாய் இருந்தால் பாதிப்பு
குறையும்.
அதாவது அந்த
பாவ ரீதியான பாதிப்புகளும் ஏற்பட்டு அந்த கிரஹத்தின் காரகத்துவம் கெட்டுவிடும்.   
 ............................................................................அன்புடன்ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்