Saturday, 20 August 2016





லக்னாதிபதி

ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி எப்படி இருக்க வேண்டும், அவர் நின்ற நக்ஷத்திராதிபதி எப்படி இருக்க வேண்டும் என்பதை சென்ற பதிவில் பார்த்தோம்.
ஒரு ஜாதகர் தன் ஜாதக பலன் அதாவது அது யோகமாக இருந்தால் அதன் வளர்ச்சியை அனுபவிக்க லக்னாதிபதி, லக்னத்தின் சாராதிபதி, லக்னாதிபதியின் சாராதிபதி பலம் தேவை., தோஷமாக இருந்தாலும் சரி அதை பிராயசித்தம் மூலமாக  சீர் செய்து கொள்ள அவர்களின் பலம் தேவை.  அவர்களின் பலம் இல்லாமல் மற்ற கிரஹங்களின் பலனை அனுபவிக்க முடியாது.  ஷோடஷ வர்கங்களில் குறைந்து ஐந்து வர்க்கங்களில் லக்னாதிபதியோ, அவர் நிற்கும் நக்ஷத்திராதிபதியோ, லக்னம் நிற்கும் நக்ஷத்திராதிபதியோ பலம் பெற்றுவிட்டால் அந்த ஜாதகர் எந்த நிலையிலும் தன்னை தானே உயர்த்திக் கொள்ளும் மனோபலத்தை பெற்று விடுவார்.
ஒருவர் பிரயாசித்தம் எனும் பரிகாரம் செய்ய நல்ல காலம் என்பது உத்ராயண காலமாகும்.  இல்லையென்றால் அவரின் லக்னத்தின் சாரதிபதியையோ, லக்னாதிபதியையோ, அவர் நிற்கும் சாராதிபதியையோ, அல்லது அப்போது நடக்கும் தசா நாதன் அல்லது புத்தி நாதன் இவர்களில் யாரேனும் ஒருவரை அவரின் ஒன்பதாம் அதிபதியோ, அல்லது  குருவோ, கோச்சாரத்தில் பார்க்கும் காலத்தில்  பரிகாரம் செய்யலாம். இந்த அமைப்பு அவர் ஜாதகத்திலேயே இருந்து விட்டால் அவர் எப்போது வேண்டுமானாலும் பரிகாரம் செய்யலாம். பரிகாரம் செய்ய ஆகம விதிகளின் படி அமைக்கப்பட்ட கோயில்கள் சிற்ந்தவை.    
சரி தற்போது கிரஹ ரீதியாக ஒவ்வொருவரும் லக்னாதிபதியாக வந்தாலும், அவர் நிற்கும் சாரதிபதியாக வந்தாலும் அவர் தன் பலத்தை இழந்தால் அதை எப்படி சீர் செய்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.
சூரியன் லக்னாதிபதியாக வந்து, அல்லது லக்னம் நிற்கும் நக்ஷத்திராதிபதியாக வந்து பலவீனமாக இருந்தால்,   பாவ ரீதியாக,  ஒன்றாம் பாவமாக இருந்தால் மருத்துவ சிகிச்சை நடக்கும் இடங்களில் குடி நீர் வசதி செய்து கொடுப்பது . அந்திம காரியங்கள் நடக்கும் இடங்களில் விளக்கொளி ஏற்பாடு செய்து கொடுப்பது போன்றவற்றை செய்தால் நல்லது.  ஆதி சிவன் கோயில்  அதாவது உயர்ந்த லிங்க திருமேனி உள்ள கோயில், சங்கர நாயனார் கோயில் வழிபாடு நல்லது.
இரண்டாம் பாவமாக இருந்தால் இஷ்ட தெய்வ கோயிலுக்கு வெல்லம் வாங்கி கொடுப்பது, தேங்காய் வாங்கி கொடுப்பது, எதேனும் வசதியில்லாத ஏழைக்கு கண் அறுவை சிகிச்சைக்கு பண உதவி செய்வது,  உபநேத்ரம் வாங்கி கொடுப்பது அதாவது கண் கண்ணாடி வாங்கி கொடுப்பது ஆகியவை பலவீனத்தை போக்கி நல்ல பலனை தரும்.  திருக்கடையூர் வழிபாடு நல்லது.
மூன்றாம் பாவமாக இருந்தால் முதியோரை எக்காரணம் கொண்டும் ஒதுக்க கூடாது.  அவர்களின் சந்தோஷம் குறையாமல் பார்த்துக் கொள்வது நல்லது.  மூத்த சகோதரனுக்கு பெண் குழந்தை இருந்தால் அவளின் திருமணத்திற்கு உதவி செய்வது நல்லது அல்லது ஒரு எழை பெண் திருமணத்திற்கு புடவை வாங்கி தருவது நல்லது. 
நான்காம் பாவமாக இருந்தால் தாய் வழி உறவுகளை மதித்து நடந்து கொள்வது நல்லது.  தாய் வழி தாத்தா பாட்டி ஆகியோரை காசிக்கு அழைத்து சென்று வருவது பலம் தரும்.  திருச்சி தாயுமானவர் கோயில் வழிபாடும், அன்னதானத்திற்கு 27 கிலோ அரிசி வாங்கி கொடுப்பது நல்லது. 
ஐந்தாம் பாவமாக இருந்தால்  வாக்கு தவறாமல் இருப்பது நலம்.  இஷ்ட தெய்வ கோயிலுக்கு சர்க்கரை பொங்கல் தானத்திற்க்கு பொருட்கள் வாங்கி கொடுப்பது நல்லது. 27 பிரதோஷ அர்ச்சனைக்கு கோயிலுக்கு வில்வ தழை வாங்கி கொடுப்பது நலம்.  தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது மனோ பலத்தை கூட்டும்.
ஆறாம் பாவமாக இருந்தால் ஏழு வகையான தான்யங்கள் கோயிலுக்கு தானம் செய்வது நல்லது.  இதய நோய் சம்மந்தமாக கஷ்டப்படுபவர்க்களுக்கு அவர்களுக்கு மருந்து வாங்கி கொடுப்பது நல்லது.  தாயின்ரத்த உறவுகள் கஷ்டப்பட்டால் உதவி செய்வது நல்லது.  கடன் வாங்காமல் இருப்பது நலம்.
ஏழாம் பாவமாக இருந்தால் மனைவியை நல்ல முறையில் கவனித்து கொள்வது நல்லது.  பெளர்ணமி பூஜைக்கு அம்பாள் கோயிலுக்கு சிவப்பு சந்தனம் வாங்கி கொடுப்பது நலம்.  கருப்பு பசு மாட்டிற்கு ஞாயிறு தோறும் உணவளிப்பது நலம். லக்ஷமி கோயிலுக்கு  கஸ்தூரி மஞ்சள் வாங்கி கொடுப்பது நலம்.
எட்டாம் பாவமாக இருந்தால் சகோதரர்கள் கஷ்டப்படாமல் பார்த்துக் கொள்வது நலம். தெற்கு வாயில் உள்ள வீட்டில் குடியிருக்க கூடாது.  எட்டு ஞாயிற்றுக் கிழமை இஷ்ட தெய்வ கோயிலுக்கு வெல்லம் வாங்கி கொடுப்பது நலம்.  உத்தமர் கோயில் வழிபாடு நலம். 
ஒன்பதாம் பாவமாக இருந்தால்  கோதுமை தானம் சிறந்தது.  பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்காமல் இருப்பது நலம். வீட்டில் தாமிர பாத்திரத்தில் நீர் வைத்து அந்த நீரில் குளிப்பது நல்லது.  தந்தையின் உடல் நலத்தில் கவனம் கொண்டு அவர் மனம் வருந்தாமல் பார்த்துக் கொள்வது நலம்.  வயதான காலத்தில் அவர்களை தனியே விடாமல் கவனிப்பது நலம்.  குல தெய்வ வழிபாடு பலம் தரும்.
பத்தாம் பாவமாக இருந்தால் நீலம், கருப்பு ஆடைகளை தவிர்ப்பது நலம்.  ஞாயிற்றுக் கிழமைகளில் ஏழைகளுக்கு தயிர் சாதம் அன்ன தானம் செய்வது நல்லது.  ஜெயிலில் உள்ள கைதிகளுக்கு ஜன்ம தினம் அன்று ஸ்வீட் ( கோதுமைஅல்வா ) கொடுப்பது நலம்.  பித்ரு கர்மாக்களை தவறாமல் செய்வது பலம் சேர்க்கும்.
பதினோராம் பாவமாக இருந்தால் புலால் உண்ணுவதை தவிர்ப்பது நலம்.  குல தெய்வ வழிபாடு அவர்க்கு பால் அபிஷேகமும் பலம் சேர்க்கும்.  மூத்த சகோதரனை தந்தையாக பாவிக்க வேண்டும். அவர் குடும்ப கஷடத்திற்கு  உதவிகள் செய்வது நலம்.  குல தொழிலை உதாசீனப் படுத்தாமல் அதை வளர்ப்பது நலம் சேர்க்கும். தந்தையின் மனம்  வருந்தாமல் கூட்டுக் குடும்பத்தில் இருப்பது நலம்.   
பனிரெண்டாம் பாவமாக இருந்தால் குருடர்களுக்கு உதவி செய்வது நல்லது.  கிழக்கு வாசல் வீடு வளம் சேர்க்கும்.  மிருத்யுஞ்ச ஜபம் செய்வது  நல்லது.  திருவானைக்காவல்,  ஜலகண்டேஷ்வர் வழிபாடு நலம்.


அடுத்த பதிவில் சந்திரனை பார்ப்போம். ………ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்.      

ஏன் ஸ்வாதி ஒரு உயர்ந்த நக்ஷத்திரமாக இருக்கிறது




ஒரு நாள் இறைவன் தனது தர்பாருக்கு நவ கோள்களையும் அழைத்தார்.   நவ கோள்களும்  என்ன ஏது என்று ஒன்றும் புரியாமல் அவசரமாக வந்து நின்றனர்.

இறைவன் கேட்டார்.  உங்களிடம் ஒன்று கேட்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்றார். கிரஹங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். 

இறைவான் கேட்டார்:  27 நக்ஷத்திரங்களில் உயர்ந்த நக்ஷத்திரம் எது ?

உடனே வரிசையாக எல்லா கிரஹங்களும் தாங்கள் உச்சமாகும் நக்ஷத்திரத்தை சொன்னார்கள். ஏன் என்றால் அங்கு தானே அவர்களின் பலமும் சுதந்திரமும் உள்ளது.
சூரியன் அஸ்வினியையும்,   சந்திரன் கார்த்திகையையும், செவ்வாய் அவிட்டத்தையும், புதன் ஹஸ்தத்தையும், சுக்ரன் ரேவதியையும், குரு பூசத்தையும், சனி ஸ்வாதியையும் சொன்னார்கள்.

உடனே இறைவன் ராகுவையும், கேதுவையும் கூப்பிட்டு நீங்களும் உங்களுக்கு பிடித்த நக்ஷத்திரம் எது என்று கூறுங்கள்.

உடனே சூரிய சந்திரர்களுக்கு கோபம் வந்தது.   .  இறைவனே எதற்காக இந்த அரூபிகளை அதுவும், அசுரர்களை தெய்வீகத்தோடு இணைக்கிறீர்கள்.  என்று கேட்டனர்.  உடனே இறைவன் அவர்களை அமரச் சொல்லி , என் அரசாங்கத்தில் எல்லோரும் சமம், ஆகவே அவர்களுக்கும் அதில் உரிமை உள்ளது என்றார்.   உடனே ராகுவும் கேதுவும் சனி தேர்ந்தெடுத்த ஸ்வாதியையே சொன்னார்கள். 

ராகு கேதுவை பார்த்து இறைவன் கேட்டார் .  ஏன் நீங்களும் ஸ்வாதியை தேர்ந்தெடுதீர்கள் .  உங்களின் பதிலை கேட்பதற்கு முன் அதை முதலில் சொன்ன சனி பதில் தரட்டும் என்றார்.

உடனே சனி,  இறைவா,  நான் உச்சமாவதால் ஸ்வாதியை சொல்லவில்லை.  அதேபோல் எனது நண்பரான ராகு கும்பத்தில் என்மூல திரிகோண இணைவில் உள்ள சதயத்தின் அதிபதியான அவரின் நக்ஷத்திரம் என்பதால் சொல்லவில்லை.  பின் ஏன் சொன்னேன் என்றால் இந்த ஸ்வாதி ஒன்று தான் உங்களுடைய உலகில் வந்து சேர்வதற்க்கான அதாவது உங்களுடன்பரம பதத்தில் இணைய உகந்த நக்ஷத்திரமாக உள்ளது என்றார்.

உடனே சூரியன் தன் புதல்வனை பார்த்து, பொய் சொல்லாதே என்றார்.  மேலும் தன் மகனை பார்த்து எப்படி ஒரு கொடிய பாபியான அரூபியான ராகுவால் கடவுளை காட்ட முடியும் என்றார்.

உடனே இறைவன் சூரியா அமைதி என்று கர்ஜித்தார்.   நீங்கள் சனியின் பிதாவாக இருக்கலாம். ஆனால் யாம் எல்லோருக்கும் பிதாகாரகன்.  சனி தன் விளக்கத்தை தொடரட்டும் என்றார். 

பெருமானே, இதை நான் ஒரு பறவையின் மூலமாக தான் உணர்ந்தேன் என்றார்.  உடனே இறைவன் எப்படி என கேட்க, சனி தொடர்ந்தார்.   மழை நீரை மட்டுமே உண்டு வாழும் ஒரு பறவை ஒன்றை கண்டேன்.  அதாவது ஸ்வாதியின் உதயத்தில் தான் மழை பெருகும் . வானிலிருந்து பொழியும் அந்த தூய நீரை உண்டு வாழும் பறவை உணர்த்திய தத்துவத்தால் தான் நாம் ஸ்வாதியை சொன்னேன்.

உடனே சூரியன், தன் மகனை பார்த்து ஆவேசத்துடன் இது மட்டும் தானா, வேறு ஏதாவது உண்டா என அலட்சியமாக கேட்டார்.   உடனே சனி,  தந்தையே,  உங்கள் அரசாங்கத்தின் உயர்வை பற்றியே பேசும் நீங்கள், சின்ன சின்ன விஷயத்தை மறந்து பேசுகிறீர்கள். அதனால் தான் உங்கள் உச்சத்தில் ஒரு மனிதன் கோபத்தில் வைராக்யத்தையும், விவேகத்தையும் மறந்து செயல் படுகிறான் என்றார்.  அந்த பறவை, ஏன் கங்கை, யமுனை போன்ற புண்ய நதிகளில் உள்ள நீரை அருந்தாமல் பெருகும் மழை நீரை மட்டும் அருந்தி உயிர் வாழ்கிறது . அதுதான் அதன் வைராக்யம், விவேகம்.

உடனே சூரியன்,  எண்ணை தாண்டி வெகு தூரத்தில் உள்ள உனக்கு புத்தி மழுங்களாகத்தான் இருக்கும் ஏன் என்றால் என் ஒளி பட்டால் தானே எழுச்சியும் வளர்ச்சியும் இருக்கும். உன் பதிலில் இருந்து நன்றாக தெரிகிறது என்றார்.    உடனே சனி குறிக்கிட்டு, தந்தையே இது மந்தமோ மழுங்கலோ இல்லை.  நிதானமான விவேகமும், வைராக்யமும் உள்ள உயர்வு என்றார்.  எந்த வழியில் என்றார்  சூரியன்.   

உடனே சனி தன் விளக்கத்தினை தொடர்ந்தார்.    நீருக்கெல்லாம்  மூலதாரம் ஸ்வாதிதான். அவன் ஆயிரம் நக்ஷத்திரங்களை உடையவன்.  அதன் மூலம் தான் நீர் பெருகும்.  அங்குதான் உங்களின் சக்தி இழக்கப்படுகிறது.  உங்களின் சக்தி இழக்கப்படும் போதெல்லாம் ஒருவனை இறைவனை நோக்கி முன்னேற வைக்கிறது. முப்பெரும் சக்திகளான, பிரம்மா இருப்பதும் நீர் சம்பந்தத்தில் தான், பரந்தாமன் இருப்பதும் நீர் சம்பந்த்தில்தான், பரமேஸ்வரனான இந்த இறைவன் இருப்பதும் நீர் சம்பந்தத்தில் தான்.  அதனால் தான் ஒருவன் தன் முக்திக்கும் மோக்ஷத்திற்கும் நீர் நாடி வருகிறான்.அதுதான் அவனின் விவேகமும் வைராக்யமும் ஆகும். ஏன் பக்ஷிகளும், விருக்ஷங்களும், விலங்குகளும் நீர் இல்லாமல் வாழாது. தானத்தை பெறுவதற்க்கும் தருவதற்கும் நீர் தான் முக்யமானது.   எது நதிகளின் மூலமோ, எது நதிகள் மற்றும் மனிதனின் வாழ்வாதாரத்தை பெருக்குமோ, எது இறைவனிடம் இருந்து பெறப்படுக்கிறதோ, எது அவனிடம் கொண்டு சேர்க்குமோ அதுவே உயர்ந்தது   என்று சனி தன் வாதத்தினை முடித்தார்.   உடனே சூரியன் இறைவனை பார்க்க, இறைவன் புன் முறுவல் பூத்தபடி இருந்தார்.  

எல்லா கிரஹங்களும் கர கோஷத்துடன் சனியை  பாராட்ட,  இறைவன் தன் சனியை தன் அருகில் அழைத்து, அதி அற்புதம் சனி, இனிமேல் நீ ஸ்வாதி உச்சன் என்று அழைகப்படுவதோடு, உன் தான்யமான எள்ளையும், நீ உச்சமாகும் ஸ்வாதியில் பெருகி வரும் நீரையும் சேர்த்து எனக்கு அர்க்யம் விடும் மானிடன் மோக்ஷ கதியை அடைவான். என்றார். மேலும் கால புருஷனுக்கு ஏழில் இருக்கும் ஸ்வாதியில் உச்சமாவதால் அதுவே உன் ஸ்தானத்தின் பலமாகவும் இருக்கும்.

மேலும் கால புருஷனின் கர்ம ஸ்தானதின் காரகனான நீ கால புருஷனின் களத்திர ஸ்தானத்தில் உச்சமாவதால், ஒருவன் தன் தர்ம பத்தினியுடன் ஒளபாசனத்தோடு ஹோமங்களை  செய்ய தகுதி உள்ளவனாகிறான்.  அவன்தரும் அவிசை சந்தோஷத்தோடு உடனே ஏற்கிறேன். உடனே, புதன்,  ஸ்வாதியே சனி, அவனின் கர்மத்தினை காக்கும் ஸ்வாஹாவே அக்னி என்று கூற, இறைவனும் மற்ற கிரஹங்களும் பெரிதாக புன்னகைத்தனர்.  
   
கற்பனையில் உருவான கதை.
நக்ஷத்திரங்களில் உயர்ந்தவன் ஸ்வாதிதான்.    


அன்புடன் ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்.   

Saturday, 23 July 2016

குல தெய்வம்
குலத்தையும் காக்கும், குடும்பத்தையும் காக்கும் தெய்வம்.





மனிதன் தினந்தோறும் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம்.  சில அதில் சந்தோஷத்தை கொண்டு வரும்.  சில மனக் கவலையை தரும்.  சந்தோஷத்தை கொண்டு வரும் போது அவன் எதை பற்றியும் கவலை படுவதில்லை.  ஆனால் மனக் கவலை வரும் போது என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் நிற்கிறான்.  அதற்கு ஏதாவது பரிகாரம் இருக்குமா என்று குடும்ப பெரியவர்களை கேட்கிறான்.  சிலர் குடும்ப வழக்கப்படி கோடாங்கியை கேட்டு உடுக்கடித்து தெய்வ குறி கேட்பார்கள்.  சிலர் ஜாதகத்தை குடும்ப ஜோசியரிடம் காட்டி என்ன பரிகாரம் செய்யலாம் என்று கேட்பார்கள்.  அதற்கு அவர் உங்கள் பூர்வீகத்தை சேர்ந்த குல தெய்வ வழிபாடு செய்யுங்கள் எல்லாம் சரியாகும் என்பார்கள்.  சில குடும்பத்தில் குடும்ப பெரியவர்கள் இருப்பார்கள் .  அவர்களுக்கு அவர்கள் பரம்பரையில் வரும் குல தெய்வம் எது என்று தெரியும். உடனே சென்று பரிகாரம் செய்வார்கள்.  சிலருக்கு பரம்பரை குல தெய்வம் எது என்று தெரியாது.  அவர்கள் என்ன செய்வார்கள்.  ஜாதகத்தை வைத்து குல தெய்வம் கண்டு பிடிக்க முடியுமா.  நிச்சயமாக முடியும். 

ஒரு ஜாதகத்தில்  தெய்வ ஸ்தானம் என்பது ஐந்தாம் இடமும் ஒன்பதாம் இடமும் ஆகும்.  ஐந்தாம் இடம் பூர்வ புண்யஸ்தானம்.  தந்தை வழி பாட்டனார்களை சொல்லுமிடம். அதன் ஐந்தாம் இடம் ஜாதகத்தின் ஒன்பதாம் பாவமாகும்.  அவர்களின் இஷ்ட தேவதையை சொல்லுமிடம்.  அதேபோல் ஒன்பதாம் இடத்திற்கு ஒன்பதாம் இடம் ஐந்தாம் பாவமாகும்.  அதாவது தந்தை வழிபட்ட  தெய்வத்தை சொல்லுமிடமாகும்.  ஆகவே இந்த இரு இடங்களை கொண்டு குல தெய்வங்களை கண்டு பிடிக்கலாம் .  இந்த இடங்கள் ஆண் ராசியா, பெண் ராசிய எனக் கண்டு அந்த தெய்வங்கள் ஆண் தெய்வங்களா, பெண் தெய்வங்களா என தெரிந்து கொள்ளலாம். மேலும் அது நில ராசியில் உள்ளதா, நீர் ராசியில் உள்ளதா, என்பதை தெரிந்து கொண்டு அதன் இருக்குமிடத்தை கண்டு கொள்ளலாம். அதாவது  ஊரின் எல்லையில் உள்ள நீர் சார்ந்த இடஙகளுக்கு அருகில் இருக்கும். நில ராசியில் நின்றால் வயல் வெளி சார்ந்த இடங்களில் இருக்கும். நெருப்பு ராசியில் நின்றால் மலை மேல் இருக்கும்.  காற்று ராசியில் நின்றால் அது இடம் மாறி நிற்கலாம்.  இது ஜாதகர் மூத்த பிள்ளையாக இருந்தால் அவர் ஜாதகத்தில் இருந்து கண்டு பிடிக்கலாம்.

ஒரு குடும்பத்திற்கு குல தெய்வம் ஒன்றும் அதன் பரிவார தெய்வங்கள் இரண்டு சம்பந்தம் கொள்ளும்.  அதாவது ஒருவரின் பூர்வீகத்தில்  அதாவது உங்களுக்கு முன்பு ஏழு தலைமுறை பங்காளிகள் மூன்று தலைமுறையாக  ஒன்று சேர்ந்து எங்கு வாழ்ந்திருக்கிறார்களா அந்த ஊரில் இருக்கும்.  இதை குடும்பத்தில் உள்ள மூத்த பெரியவர்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

சிலர் கேட்கலாம்  எனக்கு மூத்த பெரியவர்கள் யாரும் இல்லை.  இருப்பவர்களுக்கும் எங்கள் குல தெய்வம் எது என்று தெரியவில்லை.  என்ன செய்வது என்று கேட்டால் அதை பற்றி கவலை கொள்ள வேண்டாம்.   நிறைந்த வெள்ளிக் கிழமை   அன்று ஸ்வாமி சன்னதியில் (பூஜை அறையில்)   விடியற்காலை பிரம்ம முஹூர்த்தத்தில் குளித்துவிட்டு, அவரவர்கள் வழக்கக்ப்படி நெற்றிக்கு இட்டுக் கொண்டு, ஒரு ஐந்து முக குத்து விளக்கு எற்றி, அதன் தண்டு பாகத்தில் ஒரு புதிய வஸ்த்திரம் சாற்றி, பூ சாற்றி  அதற்கு முன்பு தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு , வைத்து, சர்க்கரை பொங்கலிட்டு தீபம், தூபம் காட்டி,  எங்கள் குல தெய்வம் தெரியாமல் நாங்கள் மன வருத்தத்தில் இருக்கிறோம் . ஆகவே எங்கள் குலதெய்வத்தை நினைத்து,  தங்களையே அவராக பாவித்து இந்த படையலை சமர்ப்பிக்கிறோம்.  இதனை தாங்கள் ஏற்றுக்கொண்டு சீக்கிரமாக எங்கள் குல தெய்வத்தை காட்டுவீராக  என்று வேண்டிக் கொண்டால் விரைவில் உங்கள் முன் தென்படுவார்.  அவர் இருக்கும் இடத்தை காட்டுவார். 

இன்னொரு முறை இருக்கிறது.   உங்கள் வீட்டின் தலை வாசலில் நிலையை கழுவி மஞ்சள் பூசி, குங்குமம் , சந்தனம் இட்டு  வஸ்த்திரம் சாற்றி, வெற்றிலை பாக்கு பழம் வைத்து, பொங்கல் இட்டு நிலைப்படி பூஜை செய்து மேற் சொன்னவாறு அதே வேளையில் வேண்டிக் கொண்டால் உங்கள் குல தெய்வம் கண்ணில் படும்.   மொத்தம் மூன்று தெய்வங்கள் ஒரு குடும்பத்துக்கு வரும். அதாவது ஊருக்குள் இருக்கும் மூல தெய்வம்.  அது பெருமாளாக இருக்கலாம்,  சிவனாக இருக்கலாம், அம்மனாக இருக்கலாம்.   பின் காவல் தெய்வங்களாக ஒரு கருப்பு வரும். அது பெண் தெய்வமாக இருக்கலாம் அல்லது ஆண் தெய்வமாக இருக்கலாம்.  மொத்தத்தில் பதினெட்டு ஆண் கருப்பு ( இவை வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும்)  பதினெட்டு பெண் காவல் தெய்வங்கள்.  அவை யாவை என பார்ப்போம்.

ஐய்யனார்,  மதுரை வீரன்,  காத்தவராயன், ஒண்டிக் கருப்பன், கருப்பண்ண சாமி, வீரனார், சங்கிலிக் கருப்பன், ஆகாய கருப்பன், ஆத்தடி கருப்பன், நொண்டிக் கருப்பன், மார்நாட்டு கருப்பன், மண்டக் கருப்பன், முன்னடிக் கருப்பன், சமயக் கருப்பன், பெரிய கருப்பன், சின்ன கருப்பன், சப்பாணி கருப்பன், சோனமுத்து கருப்பன், முனியாண்டி, பெரியாண்டவர், பால்முனி, வண்னிகருப்பு சாமி, மந்தை கருப்புசாமி, ஒத்தைபனை கருப்பு,  சுடலை மாடன், மாசான கருப்புசாமி, வலநாட்டு கருப்பு சாமி, பதினெட்டாம்படிக் கருப்பன், சந்தான கருப்பன், பால்பாரை முத்து கருப்பு சாமி, கரடையன் சாமி, காட்டு கருப்பு சாமி, புளியாடி கருப்பு, காரையாடி சின்ன கருப்பு, வேட்டை கருப்பு சாமி, குள்ள கருப்பு சாமி, பெருங்காடு கருப்புசாமி, பொன்னுவீரையன் கருப்பு சாமி, கோட்டை கருப்பு சாமி,  மூடுபாறை கருப்பு சாமி, கிள்ளிக்கூண்டு கருப்பு சாமி, மலையாள கருப்பு சாமி, கள்ளன் களச்சி கருப்பு சாமி, பாவாடை ராயன், சாஸ்தா.  இவர்கள் ஆண் கருப்பு  தெய்வங்கள். ஊரை காக்கும் எல்லை  தெய்வங்கள்.

வீரமா காளி, குலுமாயி அம்மன், மகமாயி,  எல்லை பிடாரி,  பெரியாச்சி, எல்லை மாரி,  பேச்சியம்மன், பூவாடைகாரி,  செல்லியம்மன், கன்னிமார்,  சீலைகாரி, பச்சையம்மன், துலக்கானத்தம்மன், வனதுர்க்கை, செல்லாயி அம்மன், காட்டேரி அம்மன், அம்முச்சியார், மாசானியம்மன்,  இவர்கள் பெண் கருப்பு எல்லை தெய்வங்கள்.   

குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவசியம்.  வருடம் ஒருமுறையாவது குடும்பத்தோடு சென்று  அவர்களுக்கு செய்யவேண்டியதை செய்து, கொடுக்க வேண்டியதை கொடுத்தால் குலம் தழைத்து, வரும் சந்ததிகள் சந்தோஷமான வாழ்க்கையை அனுபவிக்கும். அவர்கள் உங்களிடம் அதிகம் எதுவும் எதிர்பார்ப்பதில்லை.    உங்கள் கையால் ஒரு சாதரண அபிஷேகம்,  ஒரு வஸ்த்திரம், ஒரு கவளம் அரிசி வெல்லம் கலந்த சோறு.  இதை கொடுத்தாலே பொதும்.  அவர்கள் எப்போதுமே உங்கள் வீட்டின் வாசலில் காவலாக நின்று எந்த கெட்ட விஷயத்தையும் அண்ட விடமாட்டார்கள். 

ஒரு ஜாதகத்தில் ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி , சனி இவர்க்கள் 6,8,12ம் இடங்களில் மறைந்தாலோ,  நீச்சப் பட்டாலோ நீங்கள் உங்கள் குல தெய்வங்களை சரியாக வழிபடவில்லை என்று அர்த்தம்.  குல தெய்வம் சாபமிடாது. அந்த குலத்தை சார்ந்த நீங்கள் சரியாக வழிபடவில்லையே என்று மனது வருத்தப்படும். அதனால் வீட்டில் நடக்க வேண்டிய நல்ல விஷயங்கள் தள்ளி போகும்.  ஆகவே எல்லோரும் தவறாது குல தெய்வ வழிபாட்டை செய்து சந்தோஷமாயிருங்கள்.       

நாள் செய்யாததை கோள் செய்யும்.  கோள் செய்யாதை குல தெய்வம் செய்யும்.

வாழ்க வளமுடன். ……… அன்புடன் ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்.


Wednesday, 6 July 2016


பாரம்பர்யத்தைத்தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கிறோம்
இதெற்கெல்லாம் காரணம் மனதை இயக்கும் மனோகாரகனா?



என்தாத்தாவின் வீடு இது.  என் அப்பா 40 வருடத்திற்க்கு முன் ஆரம்பித்த கம்பெனி இது. இன்னும் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. என் அம்மாவிற்க்கு அவங்க அம்மா கொடுத்த நகை இது .நன்றாக இருக்கிறது அல்லவா. இந்த மாதிரி சொத்து, நகை போன்ற விஷயங்களில் பாரம்பர்யத்தை கெளவரபடுத்திக் கொண்டிருக்கிற நாம், நம்மைச் சேர்ந்த பெரியவர்கள்  நம்மைச் செய்யச் சொல்லுகிற சில நல்ல விஷயங்களை பழைய பஞ்சாங்கம், மூட நம்பிக்கை என்று கிண்டலடிகிற , ஒதுக்கி தள்ளுகிற மனோபாவத்தையும் வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.

அன்றைய கால பெரியவர்கள் தனக்கோ அல்லது தன் குடும்பத்தார்க்கோ ஒரு நல்ல விஷயம் நடக்க வேண்டும் என்றால் தன்மனம் மற்றும் உடலை வருத்திக் கொண்டு சில பரிகாரங்களைச் செய்தார்கள். அதற்க்காக பல நாட்கள் தவமிருந்தார்கள். ஆனால் இன்றைய கால இளைஞர்கள் இன்ஸ்டெண்ட் புட் என்று சொல்வோமே அதைப்போல் இருக்கிறார்கள் . அவசரம், அவசரம் என்று எல்லா விஷயங்களிலும் ஒரு வேகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாமே உடனே நடக்கவேண்டும், உடனே கிடைக்கவேண்டும் என்கிற நோக்கில் நாம் செல்கிற வழி சரிதானா என்று கூட பார்க்காமல் சென்று விடுகிறார்கள்.  அதற்கு அவர்கள் சொல்கிற காரணம் இன்றைய உலகம் வேகமாக செல்கிறது, அதற்கு ஏற்றார்போல் நாமும் செல்லவேண்டும் என்கிற நொண்டிச்சாக்குதான். 

கூட்டுக் குடும்பத்தில் வாழ பிடிக்கவில்லை , ஆனால் தன்னுடைய நண்பர்கள் குடும்பத்தில் ஒன்றிவிடுகிறார்கள்.  தன் குடும்பத்தில் ஒருவருக்கு உடம்பு சரியல்லை என்றால் ஒடி வந்து உதவ முடிய நேரம் இல்லை என்று சொல்லும் நாம் , வெளியில் ஒருவருக்கு உதவ நம் வேலை எத்தனை இருந்தாலும் ஒதுக்கிவிட்டு அதற்க்காக மெனக்கெடுகிறோம்.   நண்பனின் குடும்பத்தில் ஒரு வயதானவருக்கு உடல் நிலை சரியில்லை என்றால் அவருக்காக மருத்துவ மனைக்கு செல்கிற நாம், நம் வீட்டில் இருக்கிற பெரியவர்களை எப்படி நடத்துகிறோம்.  அவர்களை முதியவர்கள் காப்பகத்தில் கொண்டு ஒப்படைக்கிறோம்.  ஏன் ஏல்லா விஷயத்திலும் நம் மனம் மாறுபட்டு நிற்கிறது. 

இந்த மனமாற்றத்தை செய்கிறது யார்.    தினசரி ஒரு நக்ஷத்திரம் வீதம் தன் பாதையை மாற்றிகொண்டு அதிவேகமாக 27 நாட்களில் ஒரு ராசி மண்டலத்தை கடக்கும் சந்திரன் ஆவார்.

சந்த்ரமா மனஸோ ஜாதக என்று வேதத்தில் சொல்வதுண்டு. இந்த சந்திரன் தன் வேகத்தில் தான் கடக்கும் பாதையில் அதே வேகத்தில் மாற்றத்தை உண்டு பண்ணுகிறார்.   காலையில் கோபப்படும் நாம் மாலையில் சாந்தமாகிவிடுகிறோம்.   எப்படி இது சாத்யமாகிவிடுகிறது.    ஒருவரின் மனோ நிலையை ஜாதக ரீதியாக மாற்றுவதில் அவருக்கு பெரும் பங்கு உண்டு.   ஜாதகத்தில் 27 நக்ஷத்திரங்களில் உள்ள 108 பாதங்களுக்கு ஏற்ப அவர்  தன் நிலையை மாற்றிக் கொள்கிறார்.    ஏன் சார்,  மொத்தமே 27 நக்ஷத்திரங்கள் தானே அதற்கு 108 பாதங்கள்.  ஒவ்வொரு மாதமும் அதே பாதத்தில் பிறக்கும் குழந்தைக்கும் இது பொருந்துமே   என்று கேட்கலாம்.ஆனால், மற்ற கிரஹ நிலைகளின்  பாத சஞ்சாரத்திற்கு ஏற்ப , இவர் இருக்கும் நக்ஷத்திர பாத தொடர்பு,  பார்வை சேர்க்கை இவைகளுக்கு ஏற்ப மாறுபடும். 

சூரியனின் தொடர்பு இவருக்கு நக்ஷத்திர ரீதியாக ஏற்பட்டால் பேச்சே அதிகாரமாக இருக்கும். எப்போதுமே முதலில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.  உயர வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும்.  ஒரு சபையில் ஒரு விழாவில் தனக்கு யாரேனும் மரியாதை தரவில்லை என்றால் கோபப்படுவார்கள்.  அதை சொல்லி காட்டுவார்கள்.  

சுய தொடர்பு ஏற்பட்டால் மன சஞ்சலம் அதிகமாக இருக்கும்.  தான் என்ன பேசினோம் என்பதை கவனத்தில் கொள்ளாமல் சில சமயம்  மாற்றி பேசுவார். பேச்சில் ஒரு வித சலனம் இருக்கும். மனதில் பாச உணர்வு அதிகமாக இருக்கும்.   தன் தாயை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.  

செவ்வாயின் தொடர்பில் இருந்தால் வார்த்தைகளில் உஷ்ணம் இருக்கும்.  எதிலும் ஒரு அவசர புத்தி இருக்கும்.  சில சமயம் ரத்தக் கொதிப்பு நோய் வர வாய்ப்புண்டு.  ஒரு வேலையை உடனே முடித்துவிட வேண்டும் என்கிற வேகம் இருக்கும். அதற்காக மிகவும் மன அழுத்தம் அடைவார்கள். எதெற்கெடுத்தாலும் கோபப் படும் குணம் உண்டு.   அடுத்தவர் பேச்சை நிதானமாக கேட்கும் குணம் இருக்காது.

புதனின் தொடர்பில் இருக்குமானால் மனதில் எப்போதும் ஒரு வித பதட்டத்துடன் கணக்கு போட்டுக் கொண்டு இருப்பார். பேச்சும் ஒருவித ஆதாயத்துடன் இருக்கும்.  தாய் மாமன் உறவை மதிப்பார்கள்.  எப்போதுமே மனதிற்குள் நோயின் தாக்கம் இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.   அடுத்தவர் மனைவியின் மேல் ஆசை படும் குணம் வரும்.  தோட்டத்தில் உலாவுவது பிடிக்கும். பசுமையை அதிகம் விரும்புவார்கள்.    

குருவின் தொடர்பில் இருந்தால் மனதில் எப்பதும் ஆன்மீக சிந்தனையும், அது தொடர்பான பேச்சும் இருக்கும்.  பேச்சில் ஒரு வித பணிவு பக்தி இருக்கும்.  எப்போதும் மனதில் ஒரு ஸ்லோகத்தை சொல்லும் வழக்கம் உடையவர்களாய் இருப்பார்கள்.  தினமும் கோயிலுக்கு செல்லும் வழக்கமும், நெற்றியில் சந்தனமோ, குங்குமமோ வைக்கும் வழக்கம் இருக்கும்.   குழந்தைகளை அதிகம் நேசிப்பார்கள்.  பேச்சில் ஒரு கண்டிப்பு இருக்கும்.  குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைப்பார்கள்.  அதிகமாக சண்டை போடும் குணம் இருக்காது.  மன அமைதி இருக்கும்.  

சுக்ரனின் தொடர்பில் இருந்தால் பேச்சில் ஒருவித இனிமை, அதேசம்யம் ஒருவித செக்ஸ் உணர்வு , மயக்கம்  இருக்கும்.  இவர் பேச்சை கேட்பதற்கு என்றே பெண் நண்பர்கள் இருப்பார்கள். எல்லோரிடமும் வலிய சென்று பேசுவார்கள்.  பணம் சம்பாதிபபதில் குறியாக இருப்பார்கள்.  தன் சுற்றத்தார் வசதியை பார்த்து பொறாமைபடும் குணம் வரும்.  தன் மனைவியை அதிகம் நேசிப்பார்கள்.  

சனியில் தொடர்பு  பேச்சில் ஒரு விரக்தி இருக்கும்.   தன் கஷடங்களையே பேசிக் கொண்டு இருப்பார்கள். கூட்டத்தில் பேசுவதற்கு சங்கடப்படுவார்கள்.  தான்எந்த வேலை செய்தாலும் அதில் ஒரு திருப்தி இல்லாத நிலைமை இருக்கும்.  அடிக்கடி வேலை மாறுவார்கள். 

ராகுவின் தொடர்பில் இருந்தால் பேச்சில் ஒரு வேகம் இருக்கும். அலங்காரம், வாய்பந்தல் என்று சொல்வார்களே அப்படி இருக்கும். ஒரு விஷயத்தை அதிகமாக பேசுவார்கள்.  மனதில் அதிகம் பேராசை இருக்கும்.  வெளிநாடு சென்று சம்பாதிக்கும் திறன் வரும்.   ஆடம்பரமான பொருட்களின் மீது அதிக ஆசை வரும். 

கேதுவின் தொடர்பில் இருந்தால் தன் முடியாமையை  அதாவது இயலாமையை பற்றி பேசுவார். உடம்பில் இருக்கும் நோயை பற்றி அதிகம் பேசுவார்கள்.  போதை பொருட்களின் மீது ஆசை வரும்.  சில சமயங்களில்  தன் வரம்புக்கு மீறிய செயல்களை செய்து  சிறைக்கு செல்லவும் வாய்ப்புண்டு.  இந்த அமைப்பில் சிலர் எல்லாவற்றையும் துறந்து சித்தர் போல் வாழ்வார்கள்.

மனோகாரகன் எந்த பாவத்தில் பலவீனப்படுகிறாரோ  அந்த பாவத்தின் காரகத்துவத்திற்கேற்ப அவர் சங்கடங்களையும், தடைகளையும் சந்திக்க நேரிடும்.
பலவீன படும் இடங்கள் லக்னமாக இருந்தால் சுய பலம் இல்லாதவராகவும்,   இரண்டில் இருந்தால் குடும்ப வறுமையும், தன வருவாயில் தடைகளும்,   மூன்றில் தைரியம் இல்லாதவராகவும், வீரியம் குறைந்தவராகவும்,  நான்கில் தாயின் பாசம் கிடைக்காதவராகவும், சொத்து இருந்தும் அதை அனுபவிக்க முடியாதவராகவும், இருப்பார்.
ஐந்தில் இருந்தால் குழந்தைகளால் ஆதாயம் இல்லாதவராகவும், சில சமயம் குழந்தை பிறப்பு தாமதமாகவும் இருக்கும்.  மந்த புத்தி இருக்கும்.   ஆறில் இருந்தால் அடிக்கடி நோய் தாக்கும்.  ஜலதோஷம், சளி, இருமல் போன்ற நோயின் தாக்கம் அடிக்கடி இருக்கும்.  அடிக்கடி கடன் வாங்குவார்கள்.    ஏழில் இருந்தால் வரும் மனைவியியால் சுகம் கிடைப்பது அரிது.   வரும் மனைவி மனோபலம் இல்லாதவராகவும், எதையும் தாங்கும் சக்தி இல்லாதவராகவும் இருப்பார்.

எட்டில் நின்றால் நீடித்த நோய் இருக்கும்.   எல்லா விஷயங்களிலும் தடை தாமதங்கள்  ஏற்பட்டு ஜாதகரை அதிக துன்பத்தில் தள்ளும்.  தாய்க்கு அடிக்கடி உடல் நலத்தில் சங்கடங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதில் சிக்கல் வரும்.   ஒன்பதில் இருந்தால் தந்தையின் பாசம் கிடைப்பது அரிதாகும். தந்தைக்கும் ஜாதகருக்கும் அடிக்கடி மனதளவில் வேறுபாடு இருக்கும்.  சந்தோஷங்கள் வாழ்க்கையில் கிடைப்பது அரிதாகும்.   
பத்தில் பலவீனமானால்  அடிக்கடி வேலை மாறுவார்கள்.  செய்யும் வேலையில் மனத்திருப்தி இல்லாதவராக இருப்பார்.  தொழில் சிறக்காது.   பதினொன்றில்  ஆசைகள் நிறைவேறாது.  மூத்த சகோதர உறவு பாதிக்கும்.  பனிரெண்டில் இருந்தால் வாழ்க்கையில் துரதிருஷ்டம், தடை தாமதங்கள், தூக்கமின்மை ஆகியவை இருக்கும்.

இங்கு பலவீனம் என்பது,  அஸ்தங்கம், கிரஹயுத்தம், கொடிய பாபர்களோடு சேர்வது, நீச்சம் ஆவது, நீச்சகிரஹ சேர்க்கை பெறுவது, இவருக்கு வீடு கொடுத்தவன், இவர் நின்ற நக்ஷத்திராதிபதி நீச்சமாவது ஆகியவை ஆகும்.   சில சமயங்களில் பலவீனமான இவரோடு, கேது, புதன், ராகு, மாந்தி சேர்ந்தால் கேட்கவே வேண்டாம் புத்தியே பேதலித்துவிடும்.  மன நோய் உண்டாகக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

ஆகவே ஜாதகத்தில் இவர் பலம் பெறுவது நல்லது.   அல்லது இவரோடு பலம் பெற்ற சுப கிரஹங்கள் சேர்வது நல்லது.  நான்கில் சுப பலம் பெற்றால் சந்தோஷங்கள் கிடைக்கும்.  ஆறு, எட்டு, பனிரெண்டு ஆகிய இடங்களில் மறையாமல் இருப்பது நல்லது .  குறைந்தது ஐந்து வர்க்கங்களில் பலம் பெறுவது வாழ்க்கையில் அதிக சந்தோஷத்தை கொண்டு வரும்.  இவர் மனோகாரகர்.   மனதிற்க்கு காரகமாவதால் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும்  தினம் தினம் நடக்கும் அத்துனை விஷயங்களிலும் இவரின் பங்களிப்பு இல்லாமல் இருக்காது.   உடைபட்ட நக்ஷத்திரங்களில் இவர் சஞ்சரிக்கும் போதெல்லாம் ஜாதகருக்கு காலையில் இருக்கும் மனோ நிலை மாலையில் இருக்காது.  அதனால் தான் காலையில் கோபபட்டு செல்லும் நபர் மாலையில் பாசத்தோடு வருவார்கள்.  ஜாதகத்தில் பாரம்பர்யம் அதாவது நம் முன்னோர்கள் சம்பந்தபட்ட விஷயங்களில் நம் மனதை ஆத்மார்த்தமாக ஈடுபடவைப்பதும், அப்படி இல்லாமல் ஒதுங்கி போக வைப்பதும் அவர்கள் காட்டும் விஷயங்களில் நம்மை ஆர்வ பட வைப்பதும், அதை இல்லாமல் செய்வதும் இவர் வேலை தான். கூட்டுக்குடும்பத்தில் வாழவைப்பதும், அதை விடுத்து தனிக்குடித்தனம் செய்ய வைப்பதும் இவரே. அதாவது நம் மனம் எந்த கோணத்தில் எந்த விஷயத்தில் வசியமாகிறதோ அதை தொட்டே நம் இயக்கம் இருக்கும்.

ஆகவே ஜாதகத்தில்   ஆத்ம பலத்தை தரும் சூரியனும், மனோபலத்தை தரும் சந்திரனும் பலமாக இருப்பது நல்லது.   இவர்கள் இருவருமே நீச்சமான ஜாதகர் வாழ்க்கையில் முன்னேறுவது என்பது கடினமாக தான் இருக்கும்.

…………………………………………………..அன்புடன் ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்.
       

   

  

Friday, 1 July 2016




வீடுகள்



ஜாதகத்தில் வீடுகளும் கிரஹங்களும் உறவுகளோடு உறவாடி கூட்டாக வாழ சொல்கிறார்களா, அல்லது உறவுகளை வெறுத்து தனியாக தனிக் குடித்தனமாக வாழ சொல்கிறார்களா.


ஜாதகத்தின்பனிரெண்டு வீடுகளுமே ஒரு ஜாதகனுக்கு முக்கியம்.  ஒரு வீட்டின் தொடர்பு  இல்லாமல் அவன் சுகப்படுவது என்பதே இயலாத காரியம்.  அவன் ஒரு காரியத்தை செய்து சுகப்படவேண்டும் என்றால்  உறவு சார்ந்த பாவங்கள் துணை புரிய வேண்டும்.  

ஒருவன் ஒரு காரியத்தை செய்ய அவனுக்கு முதலில் ஆதம பலம் தேவை.  சுயநலமற்றவனாக, எதையும் எதிர்பார்க்காதவனாக, விட்டு கொடுத்து தியாக உள்ளம் உள்ளவனாக இருக்க லக்னம் எனும் முதல் வீடு சுய பலம் பெறவேண்டும்.

ஒருவன் தன் மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் செய்து பார்க்கவேண்டும் என்றால் இரண்டாம் பாவமான அவனுக்கு வந்து சேர்ந்த குடும்ப உறவு முறைகளின் ஒத்துழைப்பு வேண்டும். எல்லோரையும் அனுசரித்து பேசும் குணம் வேண்டும்.  

அடுத்து தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்ற பழமொழிக்கு ஏற்ப அவன் தம்பி கூட நிற்க வேண்டும்.  அதுவே அவனுக்கு ஒரு பெரிய தைரியத்தை கொடுத்து அந்த செயலை செய்யவைக்கும். அதற்கு மூன்றாம் பாவம் துணை புரிதல் வேண்டும்.

அடுத்து அம்மாவின் ஒத்துழைப்பு . அவளின் மனம் கோணாமால் அந்த விஷயத்திற்கு ஒத்துழைப்பு வேண்டும்.  அவளிடம் இருக்கும் அவளுக்கு அம்மா  போட்ட நகைகளை பிள்ளைகளுக்கு கொடுத்து உதவ நான்காம் பாவத்தின் ஒத்துழைப்பு வேண்டும். அவளை முன்னிருத்தி செய்யும் காரியத்தை பார்த்து சந்தோஷம் கொண்டாலே நமக்கு எல்லா சுகமும் கிடைத்த சந்தோஷம் வரும்.

அடுத்து புத்திசாலிதனமாக ஏற்பாடுகள் செய்து,  பிள்ளைகளின் ஒத்துழைப்போடு அந்த காரியத்தை அவன் செய்யவேண்டும்.  ஒவ்வொரு பிள்ளையும் ஒரு வேலையை எடுத்துக் கொண்டு செய்யவேண்டும். ஊராரெல்லாம், பிள்ளைகள் அப்பாவை கஷ்டப்படுத்தாமல் எப்படி செய்கிறார்கள் என்று போற்றி புகழவேண்டும். அதற்கு நல்ல பூர்வ புண்யம் அமைந்து இருக்க வேண்டும். அதற்கு ஐந்தாம் பாவம் துணை புரிய வேண்டும்.

அடுத்து ஆறாம் பாவமான அம்மான் ஸ்தானம்.   தாய் மாமன் இல்லையென்றால் ஏது ஒரு விசேஷம். அவன் தானே முதல் சீரும், கடை சீரும் தருபவன்.  எந்த விசேஷத்திலும் அம்மான் மொய் தானே முதலில்.  அவனுக்கு தானே முதல் பத்திரிகா.     அவன் தானே மெட்டி வாங்கி தாய் மாமன் சீரோடு தருபவன்.  எனவே அவனின் ஒத்துழைப்பும் தேவை. மேலும் அந்த சமயத்தில் நோய் நொடி தாக்காமல்  சுகமாக நடத்த இந்த பாவம் துணை செய்ய வேண்டும்.

அடுத்து ஏழாம் பாவம்   ஜாதகனுக்கு அந்த நேரத்தில் தோள் கொடுக்க நண்பர்கள் முக்கியம். அவர்கள் துணை இன்றியமையாதது.  கூட இருந்து வேலைகளை பிரித்து கொண்டு செய்வார்கள்.எனவே அதுவும் துணை புரிய வேண்டும்.அந்த விழாவிற்கு அழைத்த வெளி நபர்கள் எல்லாம் மன நிறைவோடு  வந்து வாழ்த்த வேண்டும்.

அடுத்து எட்டாம் பாவம்.   அந்த விழாவினை சிறப்பாக நடத்த,   ஏற்கனவே போட்டு வைத்த முதலீடுகளின் வட்டிகள்,  தன் அலுவலகத்தில் போட்டு வைத்த இபிஎப், கிராஜிவிடி முதலியவற்றின் முன் பணம்,   பாரம்பரிய சொத்துக்களை விற்று நடத்த அந்த பாவத்தின் துணையும் வேண்டும்.  தன் மனைவியின் சகோதரன் அந்த குழந்தையின் தாய் மாமனாக வந்து நிற்க வேண்டும். அதற்கு இந்த பாவம் துணை செய்ய வேண்டும்.  அதேபோல் விழாவிற்கு வந்தவர்கள் எல்லாம் எந்த குறையும் சொல்லாமல் மனம் மகிழ நல்ல போஜனம் அமைய இந்த பாவம் துணை செய்ய வேண்டும்.

அடுத்து ஒன்பதாம் பாவம் .   தந்தையின் ஆசியும், அவர்களை சார்ந்த உறவு முறைகளும் எந்த சுணக்கமும் காட்டாமால் வந்து இருந்து நடத்தி கொடுக்க இந்த பாவம் துணை புரிய வேண்டும். மேலும் ஜாதகனின் தகப்பன் முன் நிற்க வேண்டும். தன்பிள்ளை கஷட்ப்படக்கூடாது என்று தன்னிடம் உள்ள பொருளை கொடுத்து உதவ இந்த பாவம் முக்கியம்.

அடுத்து தன் அலுவலகத்தில் இருக்கும் ஒத்துழைப்பு.  பணம் பத்தவில்லை என்றால் கூட இருக்கும் அலுவலக நண்பர்கள் கொடுத்து உதவ அவர்களின் ஒத்துழைப்பு,.  வேலை பார்க்கும் அலுவலகத்தில் கேட்டு வாங்கும் முன் பணம் இவைகளுக்கு இந்த பாவம் ஒத்துழைப்பு அவசியம்.

அடுத்து தான் மகிழ்ச்சியாக அந்த விழாவினை நடத்தி முடிக்க வேண்டும் என்கிற ஆசை நிறைவேற,  தான் சேர்த்து வைத்த பணம், பொருளையெல்லாம் தன் பிள்ளைக்கு கொடுத்து சந்தோஷப் பட இந்த பாவம் துணை செய்ய வேண்டும்.   அடுத்து தன் சம்மந்தி வீட்டில் ஏந்த குறையும் சொல்லாமல் நிறைவாக செய்ய இந்த பாவம் உதவி புரிய வேண்டும்.

அடுத்து விரய பாவம் எனும் பணிரெண்டாம் பாவம் .  மேற்சொன்ன பாவங்கள் எல்லாம் நல்ல முறையில் துணை புரிந்து உதவிகள் செய்து அந்த விழாவினை சீரும் சிறப்பாக செலவு செய்து கொண்டாட இந்த பாவம் துணை புரிந்தால் தான் ஜாதகனுக்கு நிம்மதியான அயன சயன சுகம் இருக்கும்.    

ஆகவே, ஒரு ஜாதகன், தன் வீட்டில் ஒரு விழாவினை நல்ல முறையில் செய்யவே, இந்த பனிரெண்டு பாவங்களும் துணை புரிய வேண்டும் என்றால், அவன் வாழ்க்கை முழுவதற்க்கும் இந்த பாவங்கள் அணைத்துமே அவனுக்கு ஒத்துழைக்க வேண்டுமல்லவா.  இவைகளெல்லாம் கூட்டாக இருந்து ஒருவனின் வாழ்க்கையை தீர்மானிக்கும் போது,  கூட்டுக் குடும்பத்தை விட்டு தனிமையில் வாழ்வது நியாயமா சகோதர சகோதரிகளே………………………சிந்தியுங்கள்.

நல்லதை எடுத்துச் சொல்ல குடும்பத்தின் தலைவர் என்ற முறையில் சூரியன் தேவை.

பாசத்தை கொடுத்து அரவணைக்க தலைவி என்ற முறையில் சந்திரன் தேவை.

தைரியத்தை கொடுத்து வாழ்வில் முன்னேற தம்பி என்ற முறையில் செவ்வாய் தேவை.

நல்ல புத்தியை கொடுத்து எல்லோரையும் அனுசரித்து செல்ல சமயத்தில் துணைபுரிய மாமன் என்ற முறையில் புதன் தேவை.

கோபம் தாபங்களை குறைக்கும் நிலையை கொடுத்து.  குடும்ப பெரியவர்களின் பேச்சுக்கு ஏற்ப் வாழ நல்ல தெய்வ சிந்தனையும்,  ஆழ்ந்த அறிவும்  தரும் குரு தேவை.

வாழ்க்கையின் சந்தோஷங்களை  தன் மனைவி மக்களோடு கொண்டாட நல்ல வசதியை கொடுத்து அடுத்தவர்களையும் சந்தோஷப்படுத்த களத்திரம் என்ற முறையில் சுக்ரன் தேவை.

வாழ்க்கையில் சகல வசதிகளையும் அனுபவிக்க, சலியாத உழைப்பை கொடுத்து, உடம்பில் வலுவை சேர்த்து மற்றவர்கள் உயர தன்னை தாழ்த்திக்கொள்ளும் குணத்தை தருபவன் என்ற முறையில் சனி தேவை.

மேல் சொன்னவைகள் எல்லாம் நல்ல யோகமாக மாற ராகு தேவை.

இவையெல்லாம் நன்கு நிறைவேறி,  வயதான காலத்தில் அமைதியும், தெய்வ சிந்தனையும் ஏற்பட்டு, நிம்மதியான வாழ்க்கைக்கு கேது தேவை. 

ஜாதகத்தில் இவர்கள் எல்லோருமே சுபர்கள் தான்.  எப்போது இவர்கள் பாபர்களாக மாறுகிறார்களோ அவர்கள் எதையோ குறிப்பால் உணர்த்துகிறார்கள் என்று அர்த்தம். அதற்கேற்ப ஜாக்கிரதையாக அவர்கள் பாபர்களாக வந்து, அதை தடை செய்யும் போது, அதற்கேற்ப பரிகாரகள் செய்து வாழ்வை செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்
.  

 ……………………………………………………………அன்புடன் ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்    



  


Thursday, 30 June 2016


கால சர்ப்ப தோஷம் ………………………………… தொடர்ச்சி




கால சர்ப்ப தோஷம் பற்றி ஏற்கனவே பார்த்தோம்.   ராகு கேதுவின் அச்சிற்க்குள் அனைத்து கிரஹங்களும் லக்னம் உட்பட அமர்ந்து விட்டால் எப்படி பட்ட நிலைமை இருக்கும். அதன் வகை எவ்வளவு, ஒவ்வொரு வகை கால சர்ப்ப தோஷங்களும் எந்த காலத்தில் யோகத்தை தரும் என்பதையும் பார்த்தோம்.  இப்போது, அந்த அச்சிலிருந்து லக்னம், ஒவ்வொரு பாவதிபதியும் விலகி நின்றால் என்ன பலன் என்பதை பார்ப்போம்.

ராகு கேது பிடியில் இருந்து லக்னம் மட்டும் விலகி வெளியே நின்றால் தன் சொந்த உழைப்பாலேயே முன்னுக்கு வரமுடியும். சரியான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்காமல் கஷ்டப்படுவார்கள்.  தந்தையின் குணத்தில் இருந்து மாறுபட்டவர்களாக இருப்பார்கள்.   சில சமயங்களில் குடும்ப உறுப்பினர்களால் அவமானப்படுத்த படுவார்கள்.  சுய சார்பு அற்றவர்களாக இருக்க வேண்டி வரும்.  லக்னாதிபதி மட்டும் விலகி நின்றால் அந்த கிரஹ காரகத்துவம் சார்ந்த விஷயங்களில் தன்னிறைவு அற்றவர்களாக இருப்பார்கள்.  மெடிடேஷன், யோகா போன்ற மன அமைதி தரும் விஷயங்களால் பாதிப்பை குறைக்கலாம்.

இரண்டாவது பாவாதிபதி மட்டும் விலகினால் குடும்ப உறவுகளால் பண பிரச்சனை எப்போதும் இருக்கும். அதற்க்காக அடிக்கடி வேலை மாறுவார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத சூழ் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.ஆகவே யாருக்கும் உத்திரவாதம் கொடுக்காமல் இருப்பது நல்லது. முக்கியமாக ஜாமீன் தராமல் இருப்பது நல்லது. கண்ணில் சதை வளர்ந்து அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிலை ஏற்படும். எந்த விஷயத்திலும் தலையிடாமல் இருப்பது பாதிப்பை குறைக்கும்.

மூன்றாம் பாவாதிபதி மட்டும் விலகி நின்றால் இளைய சகோதரர்களால் அதிக பிரச்சனைகள் ஏற்படும். அவருக்காக கடன் பட வேண்டிய சூழல் ஏற்படும்.    வேலை விஷயமாக அடிக்கடி பயணம் ஏற்பட்டு உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும்.  வதந்திகளால் அதிக பிரச்சனைகளுக்கு ஆளாவார்கள்.  இவர்கள் மற்றவரிடம் பேசும் சாதாரண பேச்சு கூட பெரிய பிரச்சனையாகி இவர்களை தாக்கும். அந்த சமயத்தில்,  கூட வேலை செய்பவர்கள் கூட உதவி செய்யாமல் விலகுவார்கள்.  தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தால் பிரச்சனை வராது.

நான்காம் பாவாதிபதி மட்டும் விலகினால் இதயம் நுறையீரல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு.   சரியான சாப்பாடு, உறக்கம் இல்லாமல் சுகம் கெடும்.   வண்டி வாகனங்களால் அதிக செலவுகள் ஏற்படும்.  அதேபோல், வீட்டின் மராமத்து செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழல் எற்பட்டு சொத்து விரயமாகும்.  தாய் வழி பூர்வீக சொத்துக்களில் வில்லங்கம் ஏற்பட இவரே காரணமாக இருப்பார்.  வரவுக்கு ஏற்றபடி செலவு செய்ய பழகிக் கொள்வது நல்லது.

ஐந்தாம் பாவாதிபதி மட்டும் விலகினால் (ஷேர் மார்க்கெட்), பங்கு வர்த்தகத்தில் , ரேஸ், லாட்டரி போன்றவைகளில் பணம் விரயமாகும்.  பாட்டனார் சொத்துக்கள் நிலைப்பது  கஷ்டம்.  தன் புகுந்த வீட்டு உறவுகள் விரோதியாவார்கள்.  குழந்தைகளின் தவறான போக்கால் சமூகத்தில் தலை குனிவு ஏற்பட வாய்ப்புண்டு.  பிள்ளைகளை கவனமாக வளர்ப்பது பெரிய பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.

ஆறாம்பாவதிபதி மட்டும் விலகி நின்றால் உடலி நோயின் தாக்கம் அதிகம் இருக்கும்.  அதிகமான கோர்ட் வழக்கு என்று அலைச்சலை கொடுக்கும்.   அதிக கடன்களால் காவல் துறை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் சிக்க நேரிடும்.   சொத்து விஷயங்களில் சொந்தங்களே கோர்ட்டுக்கு இழுப்பார்கள்.  விட்டு கொடுத்து வாழ்வது நல்லது.   
  
ஏழாம் அதிபதி மட்டும் விலகி நின்றால்  தொழில் கூட்டாளிகளால் அதிக பிரச்சனை ஏற்பட்டு தொழில் முடங்கும். அந்நிய தேசத்தில் பாதிப்புகள் ஏற்படும்.  கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் ஏற்பட்டு குடும்ப வாழ்வு சந்தோஷம் இல்லாமல் இருக்கும்.  கூட்டுத்தொழில் செய்யாமல் இருப்பது நல்லது.  குடும்ப உறவு சார்ந்த உறவுகளை வியாபாரத்தில் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

எட்டாம் பாவாதிபதி மட்டும் விலகி நின்றால் குடும்ப தொழிலில் அதிக நஷடம் எற்படும்.  வரவை விட செலவு அதிகமாகி அதனால் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் ஏற்படும். மனைவியின்  வார்த்தைகள்  மனதை ரணமாகும்.  நிம்மதி குறையும்.  திடீரென்று விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த பாவாதிபதியின் திசை புத்தியில் மரணத்திற்கு ஒப்பான கண்டம் ஏற்பட வாய்ப்புண்டு.

ஒன்பதாம் அதிபதி மட்டும் விலகி நின்றால் தந்தையின் உடல் நிலை பாதிப்பு ஏற்படும்.  குல தெய்வம் வீட்டில் தங்காத சூழ்நிலை ஏற்படும்.  ஆகவே குல தெய்வ வழிபாடு  அவசியம் செய்ய வேண்டும்.   தன்னை சார்ந்த சமூகத்தில் கெளரவ பங்கம் ஏற்பட வாய்ப்புண்டு.  தெய்வ திருப்பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டால் பாதிப்பு குறையும்.  அதில் தடை தாமதங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. 

பத்தாம் அதிபதி மட்டும் விலகினால் தன் களத்திரத்தின் மாமியார் வகையில் மனக் கவலை ஏற்பட வாய்ப்புண்டு.  செய்தொழில் சரியாக நடக்காமல் லாபங்கள் குறையும்.  பெயர் புகழ் குறையும்.  குடும்ப உறவுகளை மதித்தி நடந்தால் பாதிப்பு குறையும்.

பதினோராம் அதிபதி மட்டும் விலகினால் மனதில் ஏற்படும் ஆசைகள் நிறைவேறாது.  வேலையில் வரும் வருமானத்தினால் குடும்பத்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு கடன் பட நேரிடும். குடும்ப சொத்து விஷயமாக மூத்த உடன் பிறப்போடு வம்பு வழக்குகள் ஏற்படும்.  சில சமயம் அவருக்காக சொத்து விரயமாகும். தாயின் உடல் நிலை கெடும்.  தனக்கு கிடைத்ததை மட்டும் ஏற்று வாழ பழகிக் கொள்வது நல்லது.

பனிரெண்டாம் பாவதிபதி மட்டும் விலகினால் தூக்கம் கெடும்.   எதிலும் தடை தாமதங்கள் ஏற்படும்.  தேவையற்ற பழக்க வழக்கங்கள் ஏற்படும்.   அதிக பெண் போகம் ஏற்படும்.  வீண் செலவுகளால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு குடும்பத்தை பிரிய நேரிடும். நண்பர்கள் சேர்கையில் கவனமாய் இருந்தால் பாதிப்பு குறையும்.
அதாவது அந்த பாவ ரீதியான பாதிப்புகளும் ஏற்பட்டு அந்த கிரஹத்தின் காரகத்துவம் கெட்டுவிடும்.   

 ............................................................................அன்புடன்ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்         


Sunday, 26 June 2016



களத்திரகாரகன்களத்திர சுகத்தை
தருகிறானா பாதிக்கிறானா.

Image result for Love rose

சுக்ரன் , இந்த பெயரை கேட்டவுடனே ஒவ்வொருவர் மனதிலும் முகத்திலும் ஏழுச்சியும் மலர்ச்சியும் இருக்கும்.   ஆமாம் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் எதிர்பார்பது பணம் , வசதியான வாழ்க்கை, கார், பங்களா, சொகுசு வாழ்க்கை அழாகான மனைவி.  இதற்கெல்லாம் காரண கர்த்தாவான காரகர் அவர்தான்.ஜாதகத்தில் இவருக்கு பாக்யகாரகர் என்று பெயருண்டு.   தன் கஷ்டங்களுக்கெல்லாம் விடிவு சுக்ர தசை, சுக்ர புத்தியில் கிடைக்குமா என்று தான் எல்லோருமே எதிர்பார்பார்கள்.  ஜாதகத்தில் சுகஸ்தானம் என்ற இடத்திற்கு இவரே உரிமையாளர்.   அதிபதி யாரக இருந்தாலும் அங்கு இவர் ஸ்தான பலம் பெற்று விட்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.  ஜாதகத்தின் சுப பாவங்களான 2,4,5,7,9,11 இடங்கள் இவர் பலமாக இருந்தால், குடும்ப மகிழ்ச்சி, அறுசுவை போஜனம், அடுத்தவரை கவர்ந்திழுக்கும் முக லட்சணம், இனிக்க இனிக்க பேசும் தன்மை,  வீடு வண்டி, வாகனம் போன்ற சுக வசதிகள்,  நல்ல குழந்தைகள், மனைவியால் வருமானம்,  நல்ல களத்திரம் ,  பெருஞ் செல்வவளம், தன் ஆசைகளையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ளும் திறன் பாகயங்கள் எல்லாம் கிடைக்கும் வாழ்க்கை ஆகியவை  இருக்கும்.  இவர் கெட்டுப்போனாலோ, நீச்சம் பெற்றாலோ வாழ்க்கையில் அத்தனை சுகமும் போய்விட்டதே என்று அல்லல் படும் வேதனை .  ஒருவரின் வாழ்க்கையை இன்பமாகவும், துன்பமாகவும் மாற்றுவதில்  ஜாதகத்தில் இவருக்கு பெரும் பங்குண்டு.  
ஒரு ஜாதகத்தில்  ஏழாமாதியை விட அதற்கு காரகத்துவ கிரஹமான சுக்ரன் அதிக முக்யத்துவம் பெறுகிறார்.   சில ஜாதகங்களில் ஏழாம் அதிபதி பலவீனமாக இருந்தாலும் காரகரான சுக்ரன் பலமாக இருந்தால் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கிறது.  சில ஜாதகங்களில் ஏழாம் அதிபதி பலமாக இருந்தாலும் காரகரான சுக்ரன் பலவீனமாக இருந்து விட்டால் அவரின் திருமண வாழ்க்கை நன்றாக இருப்பதில்லை.   மேலும், கால புருஷனுக்கு எட்டாம் வீடான விருச்சிகத்தில் களத்திரகாரகர் சுக்ரன் அமர்ந்தால் அந்த இடம் சரியான இடமாக அவருக்கு இருப்பதில்லை.  ஏன் என்றால் அவரின் மூலதிரிகோண வீடான துலாத்திற்கு அதாவது கால புருஷனுக்கு எழாவது இடமான துலாம் சர ராசியாக இருப்பதாலும் அதற்கு விருச்சிகமும் மேஷமும் மாரக ஸ்தானமாக இருப்பதாலும் விருச்சிகம் அவருக்கு பாதகத்தை ஏற்படுத்தும் இடமாக இருக்கிறது.   மேலும் கால புருஷனுக்கு ஏழாம் அதிபதி சுக்ரனுக்கு எட்டாம் வீடான விருச்சிகம் மறைவு ஸ்தானமாகும் . எனவே களத்திரகாரகனோ, எந்த லக்னத்திற்கும் களத்திர ஸ்தான அதிபதியோ விருச்சிகத்தில் அமராமல் இருப்பது திருமண வாழ்க்கையில் பிரச்சனை தராமல் இருக்கும்.

பலமான சுக்ரன் லக்னத்தில் கேதுவோடு இருந்து அதற்கு ஏழில் இருக்கும் ராகு களத்திரத்திற்கு நோயை கொடுத்து, அதன் பார்வையால் கேதுவோடு சேர்ந்த சுக்ரனை பாதித்து ஜாதகரை அந்த சுகத்தை அனுபவிக்காமல் செய்து விடும்.
இரண்டில் இந்த சுக்ரன் பலமிழந்து நின்றால்   தன வருவாயை கெடுத்து  குடும்ப மகிழ்ச்சியை இழக்க வைத்து விடும்.  சில சமயம் மனைவி குடும்பத்தை விட்டு பிரிந்து போய்விடுவாள்.
மூன்றில் இந்த சுக்ரன் பலமிழந்து நின்றால் வீரியத்தை குறைத்து, தாம்பத்ய சுகத்தை எட்ட விடாமல் செய்து விடுவதோடு,  மனைவியோடு ஒத்து போகாத தன்மையை கொடுக்கும். பரத்தையர் சகவாசத்தை ஏற்படுத்தும்

நான்கில்  பலமிழந்து நின்றால்,  வீடு வண்டி ஆகியவற்றால் நஷ்டங்களும், தாயின் ஆசைகளை நிறைவேற்ற முடியாத நிலையை ஏற்படுத்தும்.  இங்கு இவர் செவ்வாய், ராகு அல்லது கேதுவோடு சேர்ந்தால் மண வாழ்க்கையை முறித்துவிடும்.  மனைவியை இரண்டாவது முறை மணக்க வேண்டும். அதாவது இரண்டாவது தாலி கட்ட வேண்டும்.

ஐந்தில் பலமிழந்து நின்றால் பணம் சம்பாதிக்க மனதை குறுக்கு வழியில் செலுத்தி, அதனால் அடுத்தவர் பணத்தை தனதாக்கி கொள்ளும் குணத்தை தரும்.  ரேஸ், லாட்டரி, சூதாட்டம் போன்ற விஷயங்களில் ஆசையை தூண்டும்.  பெண் குழந்தைகளுக்கு இள வயதில் நோயை தரும்.  பெண் ஜாதகத்தில் இங்கு ராகுவோடு சேரும் சுக்ரன் கர்ப்பப்பை கோளாறுகளை தரும்.

ஆறாம் பாவத்தில்  சுக்ரன் பலவீனமானால்  ஜாதகருக்கு அதிக காம இச்சையை தூண்டி அதிக பெண் போகத்தை கொடுத்து பால் வினை நோயை தரும். இங்கு இவர் நீச்சமானால ஜாதகரின் உடம்பில் அந்த நோயால் துர்நாற்றம் வரும். ஜாதகரின் துணைக்கு இரண்டாம் திருமணத்தை ஜாதகரே செய்து வைக்ககூடிய நிலைமை ஏற்படும். 

ஏழாம்பாவம் பாவம் மற்றும் எட்டாம் பாவத்தில்  சுக்ரன் பலமும் இல்லாமல், பலவீனமும் இல்லாமல் இருந்தால் களத்திரதோஷமாகும்.  ஆனால் இங்கு பலவீனமானால் அந்த தோஷம் அடிபட்டு போய்விடும்.  தோஷத்தை தரும் அதாவது காரக பாவ நாஸ்தியை தரும் இடத்தில் அந்த காரகன் பலவீனப்பட்டு கெட்டால் ராஜ யோகத்தை தந்து விடுவான்.  சிலருக்கு திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையில் உயர்வான நிலை ஏற்படும். ஆனால் மனைவியை ஜாதகர் தன் தொழிலில் பங்குதாரராக சேர்த்துக் கொள்ளக்கூடாது. இருப்பத்தி ஐந்து வயதிற்க்கு முன்பாக திருமணம் செய்து கொள்ளக் கூடாது.   தனிக் குடித்தனம் கூடாது.

ஒன்பதாம் பாவத்தில் சுக்ரன் பலவீனப்பட்டால் மனைவியுடன் சகோதரியோடு ஒரே வீட்டில் வசிக்காமல் இருப்பது நல்லது.   சில சமயம் மனைவியின்சகோதரியை இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும் நிலைமை ஏற்படும்.  ஜாதகரின் தந்தைக்கு இரண்டு சம்சாரம் இருக்க வாய்ப்புண்டு. 

பத்தாம் பாவத்தில் சுக்ரன் பலவீனமானால் செய் தொழிலில் நஷ்டம் ஏற்படும்.  சாதாரணமாகவே பத்தாவது கேந்திரம் சுக்ரனுக்கு நல்ல கேந்திரம் இல்லை.   சொத்தை தொழிலுக்காக அடமானம் வைத்து நஷ்டப்படுவார்கள்.   சிலபேர் மனைவியால் ஏற்படும் அதிக செலவுகளால் குடும்பத்தை சமாளிக்க முடியாமல் கடன் வாங்கி கஷ்டப்படுவார்கள்.

பதினோராம் பாவத்தில் பலவீனமானால் ஜாதகரின் ஆசைகள் நிறைவேறுவது கடினமாக இருக்கும்.  தன் குழந்தைகளின் திருமண வாழ்க்கையில்  ஏற்பட்ட பிரச்னைக்காக சிலர் கோர்ட் செலவுகளால் அதிக துன்பத்தை அடைவார்கள். 

பனிரெண்டாம் பாவத்தில் சுக்ரன் பலவீனமானால் ஜாதகருக்கு தன் வீட்டில் படுக்கை சுகம் கிடைப்பது அரிது. அதாவது ஜாதகருக்கு நிம்மதியான தூக்கம் இருக்காது.  இங்கு பலவீனப்பட்ட சுக்ரனோடு சனி சேர்ந்தால் சட்ட சிக்கல்கள் ஏற்பட்டு சிறை வாசம் ஏற்பட வாய்ப்புண்டு.   

இப்படி சுக்ரன் பலவீனப்பட்டால் ஸ்ரீரங்கம் சென்று கொள்ளிடம் ஆற்றில் பசும் பால் ஊற்றி அதில் குளித்து பரிகாரம் செய்து கொள்வது, வெள்ளிக்கிழமைகளில் லக்ஷமி பூஜை செய்வது, வீட்டில் விளக்கு பூஜை செய்வது, பசுவிற்கு உணவளிப்பது, லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது, ஏழை பெண்களுக்கு அன்ன தானம் செய்வது, மகாலக்ஷ்மி கோயிலுக்கு விளக்கிற்கு நெய் வாங்கி தருவது.   சோளிங்கர் நரசிம்மர், ஆஞ்சனேயர் வழிபாடு செய்வது, விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது ,  வீட்டில் இந்த்ராக்ஷி, சிவகவசம் பாராயணம் செய்வது, பழனி சென்று அங்குள்ள போகர் சன்னிதி முன் அமர்ந்து தியானம் செய்வது,  ஸ்ரீ சக்ர பூஜை செய்வது, பெளர்ணமி அன்று சமயபுரம் மாரியம்மன் வழிபாடு செய்வது  ஆகியவை பரிகாரமாகும்.
இதை ஏந்த பாவத்தில் சுக்ரன் பலவீனமாக இருக்கிறாரோ, அதற்கேற்ப மேலே சொன்ன எதாவது ஒரு பரிகாரம் செய்வது நல்லது. அதை உங்கள் அருகாமையில் இருக்கும் ஜோதிடரிடம் கேட்டு செய்யவும்..  
………………………………………………………………அன்புடன் ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்.     


Tuesday, 21 June 2016


Why do predictions go wrong?




They have to, when self-styled astrologers with superficial ideas shoot predictions from the hip or when those with incomplete knowledge and the intention to extort money, predict with nefarious and commercial motives. Astrology is growing in popularity; the media reflects, magnifies this trend. Big money is to be had from telecast of hyped up programs of predictions. People are waylaid and made to believe what, in a true sense, is not astrology. Wrong predictions are being unleashed on the gullible.
Predictions also go wrong when even the serious astrologer, at best, reaches a sketchy picture of things in store. We can perhaps with sincere study, arrive at a range of eighty percent knowledge of the subject. The balance twenty percent needs to be achieved by an astrologers' intuition and insights acquired through spiritual practices. The dasha of the astrologers at the time he is predicting is also important. Wrong predictions could also result from incorrect birth data provided by the client. And even a well-meaning astrologer could go wrong through an inadvertent manipulation of facts or principles.
In view of this, before announcing predictions, it is the moral duty of the astrologer to make his client aware of these limitations. This advice may appear unviable for the commercially inclined astrologers, but it makes for sustainable and credible astrology, and is an essential statutory warning for our trade for, like nuclear buttons and surgical instruments, some astrological predictions too leave deep scars. Astrology should therefore be allowed to be practiced by only those who are conscientious and have the stamp of qualification from a recognized training school.
Evidence of existence of Astrology

The evidence of it can be inferred from the great epic Ramayana where astrology is a continuing theme. Lord Rama some claim lived 900,000 years ago.  We have historical evidence of mundane astrology learning dabbled in during the times of Varahamihira, sixteen hundred years ago and in the court of Mughal Emperors Akbar and Jehangir 450 years ago.   


Good Fortune is ensured by good Karmas

The Gyan (Knowledge)- truth can be had from religious literature spread all over the world and accessible on the net too. Additionally astrology with its capacity to predict correctly brings conviction that it is the karmas alone that make or mar a destiny. A person with both spiritual advancement and astrological insight can decipher the design of destiny better than a person with one of them.  

Choice of Paths 

The course of destiny does not alter much. One can at best minimize or maximize the preordained by exercising free will. The agami (current) good karmas can minimize suffering and the bad ones maximize even the predestined. The jolts of sufferings of worldly life prompt many to switch paths. Some choose spiritual life when unable to cope with torments of the worldly life.

Astrology can make you responsible

By demonstrating correct horoscope readings astrology can make people realize that there is a destiny at work. When convinced  that every act gets registered with the power that make the  destiny, corrective steps can easily come  and make people  more responsible towards the society  Wisdom is born from objectively assessed mistakes. History too makes a person ise.  Astrology not only helps one to reflect on the past, present and future but also explains the cause of bliss and suffering.


********************************************

Monday, 20 June 2016


ABHIJIT MUHURTHAM




The auspicious time for every good thing 

Whenever People to do any thing for their welfare they will go to a Astrologer to fix a good muhurtha  in a  auspicious day for the same so that they can have all the fruitful and positive  results from that function.  Astrology says that good muhurtha enhances the chances of success of the work. But sometimes people do not find auspicious muhurtha for their work,  should be done immediately  for which they don’t have time to fix it.  . In this circumstance people face problems as proper muhurtha is not available for performing the work. 


Present days  people are very busy. They have limited time to spend with their relatives and missing a good muhurtha for some important occasion can really cause problems. It is because all the relatives may not gather on same days. In this scenario the abhijiit muhurtha acts as a rescuer with all its auspiciousness. 

The aim of vedic astrology is to simplify the principles of the society and life by showing the auspicious path. That’s why people consider astrological principles to avoid the negative influences in their life. Abhijit muhurtha is a flexible astrological principle which relieves people if they perform an auspicious work in it. 

According to Vedic astrology there is a special muhurta called abhijit. This muhurat is auspicious for any work. Abhijit muhurtha is not special to any particular condition but it is present every day. Astrologers say that a day’s 8th muhurtha is called abhijit muhurtha. 

The total time of the abhijit muhurtha is  48 minutes.(Exactly one gati-Nazhigai) 24 minutes before and after the mid day Sun  is called the abhijit muhurat. Basically it stays up to 48 minutes but the duration may reduce if the day is shorter according to the Sun rise time and set time based on the tamil month rasi mana As the abhijit muhurtha is auspicious people opt for this muhuratha  to perform their work. Abhijit muhurtha safe guards a work even if the day is inauspicious. You can see nowdays the ploticians taking oath at this time. 


This abhijit Muhurtha is best for everything except for Upanayanam and Marriage.  At this 48 Minutes they Sun rays will fall the natives Rasi, Lagnam, and in the 10th house in which the Sun will give full energy to the native to have all the vitality strength  to get all the prospects in their ventures.


Peoples are confusing themselves between Abijit Muhurtha and Abijit Nakshathra.  Both are entirely difference.  Abhijit Nakshathra in vedic astrology is mixing of two nakshathra  i.e. Uthradam 3 and fourth patha and Thiruvonam 1st and 2nd patham. This combination is also a good day for doing good things.  This is the 28th Nakshathra in Vedic astrology and today it is vanished 

.............................................Astro Krushnan