Tuesday, 25 July 2017



லக்ஷ்மி கல்யாண வைபோகமே

ஜாதக ஆய்வில் திருமணப் பொருத்தம்.

முகவுரை:  ஆடி முடிந்து ஆவணி தொடங்கியவுடன் சுப காரியங்கள் தொடக்கமாக
திருமணம் , மனிதர்களின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு மங்கள நிகழ்ச்சி.  தனித்தனியாக வாழ்ந்த இருவர் மனதாலும், உடலாலும் இணையும் ஒரு உன்னத நிகழ்ச்சி.  ஒரு பெண் சிட்டுக் குருவியாய்  ஆடிப் பாடி விளையாடிய தன் தாய் வீட்டை விட்டு மற்றொரு வீட்டில் சகல வித பொறுப்புகளோடு மஹாலக்ஷ்மியாய் வாழ ஆரம்பிக்கும் ஒரு சுபமான தருணம். திருநிறைச் செல்வியாய் இருந்தவள் திருமகளாகி ஒரு இல்லக் கிழத்தியாய், தாயாய்,  சகல செளபாக்யங்களோடு ஒரு கோயிலில் கொலு வீற்று இருக்கப் போகிற தருணம் ஆரம்பிக்கப் போகிற நேரம்.
ஆயிரம் காலத்து பயிறாய் வளரப்போகிற இந்த உறவை நிர்ணயிக்க  நமது பாரம்பரிய சித்தாந்தங்கள் மூலமாக ரிஷிகளும், அதன் வழி வந்த சாஸ்திரங்களும் சில கட்டுப்பாடான கோட்பாடுகளை ஏற்க்க சொல்கின்றன.  அதன் ஒரு பகுதி,  இந்த பந்தத்தை ஏற்க்கப்போகும் ஒரு ஆணும், பெண்ணும் மனோ ரீதியாகவும், சரீர ரீதியாகவும் பொருத்தப்பட வேண்டும் என்கிற விதி.  உறவுகளுக்குள் ஏற்படும் திருமண பந்தம் மனோ ரீதியாக எடுக்கப்பட்டன.  உறவுகளுக்கப்பால் ஏற்படும் திருமண பந்தம் ஜனன ஜாதகத்தின் மூலமாக பொருத்தப்பட்டன. திருமணத்திற்குப் பின் தம்பதிகள் சீரும் சிறப்புடன்வாழ திருமணப் பொருத்தம் பார்கக வேண்டியது மிக அவசியமாகும். இதை அவர்களின் ஜனன ஜாதகத்தின் மூலமாக அவர்கள் இருவருக்கும்  மனம், குணம், தேக சம்பந்தமான பொருத்தம் உள்ளதா என்வும், அவர்களின் சந்தோஷம், ஆயுள் பாக்யம் , குழந்தை பாக்யங்கள்,  நோயற்ற வாழ்க்கை ஆகியவையும் எப்படி இருக்கின்றன் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.    இதை எல்லோடும் எளிதாக புரிந்து கொள்ளவேண்டும் என்கிற நல்ல நோக்கத்தோடு  வேத சாராம்ஸத்தின்படி என்னால் முடிந்த அளவுக்கு மிக எளிமையான முறையில் ஒரு சிறிய கை ஏடாக தொகுத்து அளித்துள்ளேன்.  திருமண பொருத்தம் பார்க்கும் அனைவருக்கும் இந்த கைஏடு ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி
ஜோதிஷ் பாரதி, ப்ரஸ்ன்ன ஜோதிஷ் பாரதி
சிரோண்மனி ஸ்ரீரங்கம் சு. கிருஷ்ணன் ஐய்யங்கார் ,
இயக்குனர்,ஆசிரியர், ஸ்ரீ இராமனுஜர் ஜோதிட பயிற்சி &கல்வி மையம், சென்னை.

விவாஹத்திற்கு ஸ்திரீ புருஷ நக்ஷத்ராதி பொருத்தங்கள்

தினப் பொருத்தம் : (செளக்யமாக இருத்தல்) ஸ்த்ரீ ஜன்ம நக்ஷத்திரம் முதல் புருஷ நக்ஷத்திரம் வரை எண்ணிக் கண்டது 2,4,6,8,11,13,15,17,18,20,24,26 ஆக வந்தால் உத்தமம்.  12வது நக்ஷத்திரத்தின் 1ம் பாதமும், 14ம் நக்ஷத்திரத்தின் 4ம் பாதமும், 16வது நக்ஷத்திரத்தின் 3ம் பாதமும் நீக்கி மற்ற பாதங்கள் மத்யமம்.  இதில் சொல்லாததும், அஷ்டம ராசி நக்ஷத்திரங்களும் பொருந்தாது. 
ஏகதினப் பொருத்தம்:  ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், விசாகம், உத்திரட்டாதி  திருவோணம், ரேவதி இவை 9ம்  ஸ்திரீ புருஷர்களுக்கு ஒரே நக்ஷத்திரமானால் உத்தமம்.  அஸ்வினி, கார்த்திகை, மிருகஷீர்ஷம், புனர்பூசம், பூசம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திராடம் இவை 10ம் மத்யமம்.  மற்றது பொருந்தாது.  ஸ்தீரி புருஷர்களுக்கு ஒரே ராசியானால் புருஷ நக்ஷத்திரம் முந்தியதும், மேற்படி ஒரே நக்ஷத்திரமானால் நக்ஷத்திர பாதம் முந்தியது சுபம்.  மற்றவை பொருந்தாது.

கணப்பொருத்தம்: (செல்வ வளம், அன்யோன்யம்) அஸ்வினி, மிருகஷீர்ஷம், புனர்பூசம், பூசம், ஹஸ்தம், ஸ்வாதி, அனுஷம், திருவோணம், ரேவதி இவை 9ம் தேவகணம் .
பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி இவை 9ம் மனுஷ்யகணம்.
கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம் இவை 9ம் ராக்ஷஸ கணம்.
ஸ்திரீ புருஷர்களுக்கு ஓரே கணமானால் உத்தமம்.  தேவ கணமும், மனுஷ்ய கணமும்  மத்யமம், ராக்ஷஸ கணமும் தேவ கணமும் அதமம்.  மனுஷ்ய கணமும் ராக்ஷஸ கணமும் மிருத்ய பயம், பொருந்தாது.  ஸ்திரீ ராக்ஷஸம் கூடாது.  புருஷ ராக்ஷஸம் உத்தமம்.  ஸ்திரீ நக்ஷத்திரத்திற்கு புருஷ நக்ஷத்திரம் 13 க்கு மேற்பட்டால் ஸ்திரீ ராக்ஷஸம் தோஷமில்லை. 

மஹேந்திர பொருத்தம்:  (ஆயுள் விருத்தி, மற்றும் ஸந்தான பாக்யம்) ஸ்திரீ ஜன்ம நக்ஷத்திரம்  முதல்  புருஷ ஜன்ம நக்ஷத்திரம் வரை எண்ணி வருவது 4,7,10,13, 16,19,22,25 ஆனால் பொருந்தும்.  இல்லாவிடில் பொருந்தாது.
இங்கே அன்பர்கள் ஒன்றை கவனிக்க வேண்டும்.  தினப் பொருத்தத்தில் பொருந்தாத 7ம் நக்ஷத்திரம் வத தாரை என்று சொல்லும் போது எப்படி மஹேந்திரத்தில் பொருந்தும் என்ற சந்தேகம் வரும்.   மஹா கேந்திரம் என்பதே மஹேந்திரம் ஆகும்.  அதாவது ஸ்திரீ ஜன்ம நக்ஷத்திரம் இருக்கும் ராசியில் இருந்து எண்ணும் போது புருஷ ஜன்ம நக்ஷத்திரம் நான்காவது ராசியில் வரும் ஏழாவது நக்ஷத்திரமாக வந்தால் பொருந்தும். இது மஹா கேந்திரப் பொருத்தமாகும்.

ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்: (தீர்கக சுமங்கலிப் பாக்யம்) ஸ்திரீ ஜன்ம நக்ஷத்திரம் முதல் புருஷ ஜன்ம நக்ஷத்திரம் வரை எண்ணி வருவது 13க்கு மேற்பட்டால் உத்தமம்.  7க்கு மேல் மத்யமம்.  அதற்குள் வந்தால் பொருந்தாது.   
யோனி பொருத்தம்: ( தாம்பத்ய சுகம்) அஸ்வினி, சதயம் : குதிரை,     பரணி,  ரேவதி: யானை, 
                               பூசம், கார்த்திகை: ஆடு,         ரோகிணி, மிருகசீர்ஷம்: பாம்பு,
                               திருவாதிரை, மூலம் : நாய்,      ஆயில்யம், புனர்பூசம்: பூனை,
                               மகம், பூரம்  :  எலி,    உத்திரம், உத்திராடம்,  உத்திரட்டாதி: எருது
                               ஸ்வாதி, ஹஸ்தம்: எருமை கிடா,  சித்திரை, விசாகம்:  புலி
                               கேட்டை,  அனுஷம்: மான்,  பூராடம், திருவோணம் :  குரங்கு. 
                               பூரட்டாதி, அவிட்டம்:  சிங்கம். 
இந்த நக்ஷத்திரங்களில் முன் உள்ளது ஆண் நக்ஷத்திரம், பின்உள்ளது பெண் நக்ஷத்திரம் ஆகும். பசுவுக்கு புலியும்,  குதிரைக்கு எருமையும், குரங்குக்கு ஆடும், ஆடுக்கு புலியும், மான்,பூனைக்கு நாயும், எலிக்கு பாம்பு பூனையும், யானைக்கு சிங்கமும், பாம்புக்கு பூனையும்,  கீரியும்  வைரியாகும். 
மானுக்கு பசுவும், ஆடுக்கு குதிரையும், நாய்க்கு மனுஷனும் நட்பாகும்.  மற்றது சமம். குரங்கு எல்லா யோனிக்கும் நட்பு.   ஸ்திரீ, புருஷர்களுக்கு நக்ஷத்திரங்களுக்குண்டான மித்ர (நட்பு), சம யோனிகளாயிருந்தால் உத்தமம்.  சத்ரு யோனி அதமம்.  சேர்க்கக் கூடாது. புருஷனுக்கு ஸ்திரீ யோனியும், ஸ்திரீக்கு புருஷ் யோனியும். கூடவே கூடாது.

ஜன்ம ராசி பொருத்தம்  (மன ஒற்றுமை)  ஸ்திரீ ஜன்ம ராசி முதல் புருஷ ஜன்ம ராசி வரை எண்ணிக் கண்டது ஸ்திரீ ராசிக்கு புருஷ ராசி 2-12 ஆனால் மிருத்யு, கூடாது.  12-2 ஆக வந்தால் ஆயுள் விருத்தியாகும்.  நல்லது, உத்தமம்.  11-3 ஆக வந்தால் சுகம் கூடும்.  10-4 ஆக வந்தால் செல்வம் சேரும்.  ஷஷ்டாஷ்டகமான 6-8 கூடாது.  7க்கு 7ஆக வந்தால் (சம சப்தமாக) மிகவும் உத்தமம்.  வாழ்க்கையில் அனைத்து சந்தோஷமும் கூடும். 
ராசி அதிபதி பொருத்தம்:  (சம்பந்திகளின் இணக்கம்) சூரியன்: சிம்மத்திற்கும்,  சந்திரன்: கடகத்திற்கும் , செவ்வாய் : மேஷம், விருச்சிகத்திற்கும், புதன்: மிதுனம், கன்னிக்கும்,  குரு : தனுசு , மீனத்திற்கும், 
சுக்ரன்: ரிஷபம், துலாத்திற்கும்  சனி: மகரம், கும்பத்திற்கும் அதிபதிளாவார்கள்.   ராகு, கேதுவுக்கு வீடுகள் கிடையாது.
 ஸ்திரீ ஜன்ம ராசி அதிபதி புருஷன் ஜன்ம ராசி அதிபதிக்கு மித்திரர்களாக இருப்பது உத்தமம்.  சம மித்திரர்களானாலும் உத்தமம்.  

வஸ்யப் பொருத்தம்:  (குடும்ப ஓற்றுமை) மேஷத்திற்கு சிம்மம்,விருச்சிகமும்,  ரிஷபத்திற்கு கடகமும், துலாமும்,  மிதுனத்திற்கு கன்னியும், கடகத்திற்கு விருச்சிகமும், தனுசும், சிம்மத்திற்கு துலாமும் , மீனமும், கன்னிக்கு ரிஷபமும், மீனமும்,  துலாத்திற்கு மகரமும்,  விருச்சிகத்திற்கு கடகமும், கன்னியும், தனுசுக்கு மீனமும், மகரத்திற்கு மேஷமும், கும்பமும்,  கும்பத்திற்கு மீனமும் , மீனத்திற்கு மகரமும் வஸிய ராசிகளாகும்.  ஸ்திரீ ஜன்ம ராசிக்கு  புருஷ ஜன்ம ராசி வஸியமானால் உத்தமம்.   புருஷ ஜன்ம  ராசிக்கு ஸ்திரீ ஜன்ம ராசி வஸியமானால் மத்யமம்.  மற்றவை கூடாது.

ரஜ்ஜு பொருத்தம்:  (திருமாங்கல்ய பலம்) ஸ்திரீ புருஷ நக்ஷத்திரங்கள் ஓரே ரஜ்ஜுவாகில் பொருந்தாது.  பின்ன ரஜ்ஜுவாக இருத்தல் வேண்டும்.  அதிலும் இரண்டும் ஏர்முகமாக(ஆரோகணம்) இருக்க வேண்டும்.  இரண்டும் இறங்கு(அவரோகணம்) முகத்திலிருந்தால் நாசம் கூடாது.  ஒன்று ஆரோகணத்திலும் மற்றொன்று அவரோகணத்திலும் இருந்தால் விவாஹம் செய்யலாம். ஒரே வரிசையில் இருந்தால் சிரோ ரஜ்ஜுவானால் புருஷனுக்கு ஆகாது.  கண்ட ரஜ்ஜுவானால் ஸ்திரீக்கு ஆகாது.  நாபி ரஜ்ஜுவானால் புத்ரஹானி , ஊரு ரஜ்ஜுவானால் தரித்திரம்.  பாத ரஜ்ஜுவானால் தேச ஸஞ்ஞாரம். 
மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆரோ சிரோ ரஜ்ஜு,  ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ஆரோ கண்ட ரஜ்ஜு, திருவாதிரை, ஸ்வாதி, சதயம் அவரோ கண்ட ரஜ்ஜு,  கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆரோ நாபி ரஜ்ஜு,  புனர்பூசம், விசாகம், பூரட்டாதி அவரோ நாபி ரஜஜு,  பரணி, பூரம், பூராடம் ஆரோ ஊரு ரஜ்ஜு,  பூசம், அனுஷம், உத்ரட்டாதி அவரோ ஊரு ரஜ்ஜு, அஸ்வினி மகம், மூலம், ஆரோ பாத ரஜ்ஜு,  ஆயில்யம், கேட்டை, ரேவதி அவரோ பாத ரஜ்ஜு.  இந்த அட்டவணயை பார்த்து ரஜ்ஜு பொருத்தம் செய்யவும்.  ரஜ்ஜு பொருத்தம் எல்லா வர்க்கத்தை சேர்ந்தவர்க்கும் முக்கியமானது. ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் திருமணம் செய்யக்கூடாது.
வேதை பொருத்தம்:  (குடும்ப அமைதி) அஸ்வினிக்கு கேட்டையும், பரணிக்கு அனுஷமும், கார்த்திகைக்கு விசாககமும், ரோஹிணிக்கு ஸ்வாதியும், மூலத்திற்கு ஆயில்யமும், பூராடத்திற்கு பூசமும், உத்திராடத்திற்கு புனர்பூசமும், திருவோணத்திற்கு திருவாதிரையும், மகத்திற்கு ரேவதியும், பூரத்திற்கு உத்திரட்டாதியும், உத்திரத்திற்கு பூரடாதியும், ஹஸ்தத்திற்கு சதயமும், வேதையாகும். மேலும் மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஒன்றொக்கு ஒன்று வேதையாகும். ஸ்திரீ புருஷர்களுக்கு ஜன்ம நக்ஷத்திரங்கள் ஒன்றொருக்கு ஒன்று வேதையாக வரக்கூடாது.

நாடி பொருத்தம்:  (உடல்)  அஸ்வினி, திருவாதிரை, புனர்பூசம், உத்திரம், ஹஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி ஆகிய ஒன்பதும் தக்ஷண பார்ச்சுவ நாடி,  பரணி, மிருகசீர்ஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பதும் மத்திம நாடி, கார்த்திகை,  ரோகிணி, ஆயில்யம், மகம், ஸ்வாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி ஆகிய ஒன்பதும்  வாம பார்ச்சுவ நாடி.  
ஸ்திரீ புருஷர்களுக்கு இருவரின் நக்ஷத்திரங்கள் மத்திய நாடியாக இருந்தால், பெண்ணுக்கும், தக்ஷிண வாம பார்ச்சுவ நாடியாகில் ஆணுக்கும் தோஷம்.  வேறு வேறு நாடியாக இருந்தால் தோஷமில்லை, பொருத்தம் உண்டு.  நாடி பொருத்தம் மிகவும் அவசியம்.
மேலே குறிப்பிட்டுள்ள பொருத்தங்களில் தினப் பொருத்தம் பிராமணர்களுக்கும், கணப் பொருத்தம் க்ஷத்திரியர்களுக்கும்,  ராசி பொருத்தம் வைசியர்களுக்கும், யோனி மற்றவர்களுக்கும்,  ரஜ்ஜு எல்லா ஜாதியினருக்கும் மிகவும் அவசியம்.   சாஸ்திரங்களில் சொல்லியபடி மிருகசீர்ஷம், மகம், ஸ்வாதி, அனுஷம், இந்த நான்கிற்கும் மனப் பொருத்தம் இருந்தாலே போதுமானது.  மேலும், ஆயில்யம், கேட்டை, மூலம், விசாகம் இந்த நான்கு நக்ஷத்திரங்களும் தோஷம் உள்ளவை என பாரம்பரிய ஜோதிஷ சாஸ்திரங்களில் சொல்லப்படவில்லை.  மனிதர்களின் மனோ பயம் தான் இதற்கு காரணம்.   
நக்ஷத்திர பொருத்தம் பார்த்த பிறகு பார்க்க வேண்டிய முக்ய பொருத்தங்கள்.
விவாஹ பொருத்தம் பார்க்கும் போது முதலில் மேலே சொன்ன தசப் பொருத்தம் முக்கியம்.  பிறகு ஜாதக ரீதியாக பொருத்தம் பார்ப்பது முக்கியம்.  நக்ஷத்திர பொருத்தம் முக்யமானதாக இருந்தாலும் ஜாதக பொருத்தமும் அதைவிட முக்கியம்.  
2.  ஏழாவது தாரை ஆண் நக்ஷத்திரமும், இருபத்தி இரண்டாவது பெண் நக்ஷத்திரமும் கூடாது. அதாவது பெண்ணின் நக்ஷத்திரம் முதல் எண்ணும் போது ஆணின் நக்ஷத்திரம் ஏழாவதாக வரக்கூடாது.  அதேபோல் பெண்ணின் இருபத்தி இரண்டாவது நக்ஷத்திரமாகவும் வரக்கூடாது.
3.  ஆண் ஜாதகத்தின் 10 வது அதிபதி (லக்னத்தில் இருந்து எண்ண வேண்டும்) பெண் ஜாதகத்தில் அவரின் லக்னத்தில் இருந்து 6,8,12ம் இடங்களில் மறையக்கூடாது.  நீச்சம் ஆகக்கூடாது. அதுவே ஆட்சியாகவோ, உச்சமாகவோ இருந்தால் உத்தம பொருத்த்ம்.
4.  பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் கேது சேக்கை இருந்தால் ஆண் ஜாதகத்தில் சுக்ரனும் கேதுவும் சேரக்கூடாது.  அதே போல் செவ்வாய் ராகு சேர்க்கை பெண் ஜாதகத்தில் இருந்தால் குரு ராகு சேர்க்கை ஆண் ஜாதகத்தில் இருக்கக்கூடாது.   திருமண வாழ்க்கை போர்க்களமாக  இருக்கும்.  சில சமயங்களில் பிரிவு கூட நேரலாம்.
5.  பெண்ணின் ஜாதகத்தின் ஜன்ம ராசியோ, லக்னமோ ஆண் ஜாதகத்தின் ராசிக்கு அல்லது லக்னத்திற்கு ஷஷ்டாஷ்டகமாக அதாவது 6க்கு 8ஆக வரக்கூடாது.
6.  திருமண காலத்தில் ஒருவரின் தசா முடியும் காலம் எதிர் பாலரின் ஜாதகத்தில் அதே தசா காலம் 11 மாதங்களுக்குள் ஆரம்பிக்கூடாது. 
7.   ஒருவரின் ஜாதகத்தில் சுக்ரன் இருக்கும் ராசியில் எதிர் பாலரின் ஜாதகத்தில் செவ்வாய் இருந்தால் நல்ல பொருத்தம். 
8.   அதே போல் ஒருவரின் ஜாதகத்தில் தோஷம் தரும் கிரஹங்கள் அந்த அந்த வீட்டில் இருக்குமேயானால், அது எதிர் பாலரின் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 6, 8, 12 ல் மறைவது அல்லது நீச்சமாவது நல்லது. 
9.  ஒரு வரின் ஜாதகத்தில் இரண்டாம் அதிபதி இன்னொருவரின் ஜாதகத்தில் நீச்சம் ஆக கூடாது.  நீச்ச கிரஹ சேர்க்கை கூடாது.  (அதாவது ஒரு சொல் வழக்கு உண்டு.  இரண்டாமாதி நீச்சமானவன் வீட்டில் பெண் எடுக்கவும் கூடாது இரண்டாமாதி நீச்சமானவனுக்கு பெண் கொடுக்கவும் கூடாது)
10.  பெண்ணின் லக்னமும் ஆணின் லக்னமும் ஒன்றொக்கொன்று திரிகோணத்தில் இருந்தால் நல்லது.
11.  அதேபோல் ஒரு பெண்ணின்  லக்னாதிபதி அவளுக்கு சேர்க்கும் ஆணின் ஜாதகத்தின் ஒன்பதாம் அதிபதியாக  இருந்தால் அவளே பாக்யவதி.
12.  ஒருவரின் ஜாதகத்தில் பனிரெண்டாம் பாவத்தில் உஷ்ணகிரஹம் இருந்தால் இன்னொருவரின் ஜாதகதில் தட்ப கிரஹம் இருக்கவேண்டும்.  அதாவது அந்த உஷ்ணத்தை தணிக்க கூடிய சாத்வீக கிரஹம் இருக்க வேண்டும்.
13.   ஒருவரின் ஜாதகத்தில் ஏழாம் பாவம், (களத்திர பாவ.ம்) , எட்டாம் பாவம்,(மாங்கல்ய ஸ்தானம்),   இரண்டாம் பாவம்,(குடும்ப ஸ்தானம்),  நான்காம் பாவம்(சுகஸ்தானம்)  ஆகியவை பாபர்களின் பிடியில் இல்லாம இருப்பது நல்லது.  இதில் எந்த பாவம் பாபர்களின் பிடியில் இருக்கிறதோ அந்த பாவம் பாதிக்கும்.    நான்காம் பாவமானால் சுகமான வாழ்க்கை இருக்காது. இரண்டாம் பாவமானால் குடும்பம் வாழ்க்கை வறுமையின் பிடியில் சிக்கும்.  ஏழாம் பாவம், எட்டாம் பாவம் திருமண பிரிவை தரும். 
14.  அடுத்து கிரஹ இணைவுகள்  .   ஆணின் ஜாதகத்தில் சூரியன் சுக்ரன் இணைவு கூடாது. பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் சுக்ரன் இணைவு கூடாது.  இவை உடலில் உள்ள அணுக்களின் குறைபாட்டை சொல்லும் .
15.  ஆணின் ஜாதகத்தில் சூரியனும் சுக்ரனும் பலமாய் ஒற்றை ராசிகளின் நின்றால் நல்லது. அதேபோல் பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாயும் சந்திரனும் பலமாய் இரட்டை படை ராசிகளில் நின்றால் நல்லது   
16.  அதே போல் இரண்டு பேர் ஜாதகத்தின் மூன்றாம் அதிபதிகள் பகை பெறக் கூடாது.
17.  நபும்சக அலி யோகங்கள் எனப்படும் விதிப்படி ஆணின் ஜாதகத்தின் லக்னாதிபதி பெண்ணின் ஜாதகத்தில் அலி கிரஹ சேர்க்கை பெறக் கூடாது.
18.  ஒருவரின் ஜாதகத்தில் ராகு தனியாக நின்றால் இன்னொருவர் ஜாதகத்தில் தனியாக ராகு நின்றால் அந்த ஜாதகத்தினை சேர்க்ககூடாது.
19.  ஒருவரின் ஜாதகத்தின் ஒன்பதாம் அதிபதி இன்னொருவர் ஜாதகத்தில் பாப ஹர்த்தாரி யோகம் பெறக் கூடாது.  முக்யமாக பெண்ணின் ஜாதகத்தில் இது இருக்க கூடாது.
20.  பெண்ணின் ஜாதகத்தில்   அவளின் ஆறாம் அதிபதி ஆணின் ஜாதகத்தில் உச்சம் பெறக்கூடாது.
21.  பாப சாம்யங்கள் பொருத்தம் எனப்படும் பாபர்கள் சம்பந்தம் இருவர் ஜாதகத்திலும் அதிக வித்யாசம் இருக்க  கூடாது.  பெண்கள் தோஷ சாம்யம் ஆண்களை விட குறைவாக இருக்க வேண்டும். 
22.  இரண்டு பேர் ஜாதகத்திலும் சுப ஸ்தானமான நான்காம் வீட்டில் அதிக உஷ்ண பாபர்கள் இருக்க கூடாது.  இரண்டு குடும்பத்திலும் பெண்கள் ஒற்றுமை குறைவு ஏற்படும்.
23.  ஒருவர் ஜாதகத்தின் ஏழாம் அதிபதி இன்னொருவர் ஜாதகத்தில் விருச்சிகத்தில் அமராமல் இருப்பது.
24.  ஆத்ம காரகனோ, மனோகாரகனோ ஜாதகத்தில் நீச்சமோ, 6,8,12ல் மறையாமல் இருப்பது இருவரின்தாம்பத்ய வாழ்க்கையில் ஆத்ம, மனோ பலத்தை கூட்டி அன்யோன்யத்தை வளர்க்கும்.
25.  ஆண் ஜாதகத்திலோ, பெண் ஜாதகத்திலோ  அவர்களின் மூன்று மற்றும் ஏழாம் அதிபதி பரிவர்த்தனை பெறுவதோ, பாதாகாதிபதி சேர்க்கையோ பெறக்கூடாது.

இவைகளும் பார்த்து ஜாதகத்தினை பொருத்துவது நல்லது.  இன்றைக்கு இருப்பது வேகமான உலகம்.  ஆனாலும் இன்றய கால கட்டத்தில்தான் அதிக விவாஹரத்துக்கள் ஏற்படுகிறது. ஆகவே ஆயிரம் காலத்து பயிரான இந்த திருமண வாழ்க்கையை நன்கு பொறுமையாக பரிசீலித்து ஜாதகங்களை இணைப்பது நல்ல ஆரோக்யமான குடும்ப வளர்ச்சியை தந்து சந்ததிகள் பெருகி சந்தோஷமமும் பெருகும்.

வாழ்க வளமுடன்.   ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்.
 
  
   

 


Thursday, 16 March 2017

சர்க்கரை நோய்

இனிப்பு:  இந்த வார்த்தையே  வயது வித்யாசம் இல்லாமல் எல்லோருக்கும் நாக்கில் நீர் வரவழைக்கும்.  விளம்பரங்கள் கூட ஸ்வீட் எடு கொண்டாடு என்பதாக இருக்கிறது.  சிறு குழந்தைகளுக்கு சாக்லட்ஸ் கொடுக்கும் போது தனக்கும் ஒன்று எடுதுத்துக் கொள்ளும் தன்மை. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கூட கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல்அந்த இனிப்பை   ஒருவருக்கும் தெரியாமல்  சாப்பிடும் தன்மை.   இப்படி எல்லோர் வாழ்விலும் அன்றாடம் கோலோச்சி கொண்டிருக்கும் சர்க்கரை ஒருவருக்கு உடலில் அதிகமானால் வரும் நோய் சர்க்கரை நோய். இன்சுலின் குறைபாட்டால் வரக்கூடியது  இது ஒருவருக்கு சர்க்கரையால் மட்டுமே வரக் கூடிய நோயா.  அல்லது தற்காலத்தில் இன்சுலின் குறைபாட்டை ஏற்படுத்தி எல்லோருக்கும் வரவழைக்கும் ஒரு உணவு சார்ந்த விஷயமா  அல்லது பரம்பரை பரம்பரை வழியாக வரக்கூடியதா.  உடலில் சர்க்கைரையின் அளவு கூடியிருப்பதை கணிக்கும் ஒரு மருத்துவர் கூட கேட்கும் கேள்வியே உங்கள் குடும்பத்தில் அம்மா அப்பா அல்லது தாத்தாவிற்கு இருக்கிறதா என்று கேட்கிறார்.   இப்படி இருக்கும் இந்த நோய் இருப்பதை ஜாதக ரீதியாக கணிக்க முடியுமா என்ற கேள்விக்கு விடையே என்னுடைய இந்த கட்டுரையாகும்.

வெறும் சர்க்கரை மட்டும் அல்லாமல், நேரம் தவறி உணவருந்துதல்,  அதாவது சாப்பிடும் வேளைக்குண்டான இடைவெளி அதிகமாக இருத்தல்,  பட்டை தீட்டப்பட்ட அதாவது பாலீஷ் செய்த பச்சரிசி அதிகமாக உண்பது ,  ஸ்வீட் பொட்டெடோ எனப்படும் அதிக வெள்ளை உருளைக்கிழக்கை உணவில் சேர்த்துக் கொள்வது,  அதிக வெள்ளை சர்க்கரை சேர்த்த இனிப்புகள் சாப்பிடுவது .  இவையெல்லாம் உடலில் இன்சுலின் சுரப்பியை பாதித்து அதில் குறைபாட்டை ஏற்படுத்தி சர்க்கரை நோயை கொடுக்கும்.  இதில் அதிக இடைவெளி கொடுத்து உண்பது அதாவது நேரம் தவறி உண்பது  உடலில் வாயுவை ஏற்படுத்தும். இது ஜாதகத்தில் குருவின் காரகத்துவம்.  அதேபோல் சாதரண வெல்லம், நாட்டு சர்க்கரை, வெல்லப்பாகு இவைக்கும் குரு காரணமாக இருந்தாலும் அதை நவீனமயமாக்கி வெள்ளை சர்க்கரை ஆக்கும் போது அது ஜாதகத்தில் சுக்ரனின் காரகமாக மாறும்.  இதில் இதை நீடித்து பரம்பரை வழியாக கொண்டுவருவது சனியின் வேலையாகும்.  இந்த நோயை அதிகப்படுத்துவது ராகுவின் வேலையாகும்.  இந்த நோயை கடுமையாக்கி அதாவது ஒரு இடத்தில் தங்கவைத்து சுரப்பிகளின் செயல்பாட்டை குறைத்து உடலில் கிட்னியின் செயல் பாட்டை வலுவிழக்க செய்வது கேதுவின் வேலையாகும். 


நமது உடலில்,  ஜெனடிக் கோட் எனப்படும் விகிதாசாரம் ஒரு ஜாதகனின் தந்தையின் அளவு 24%,  தாத்தாவினுடையது 32%, அவருடைய தந்தையினுடையது 16%  அதற்கு முன் 8%,6%,4%,2% ஆக மொத்தம் ஏழு தலை முறை ஜெனடிக் சார்ந்த அணுக்கள் சார்ந்த விஷயங்களும்  ஜாதகனுடையது 8% ஆக மொத்தம் 100 சதவீகமாக இருக்கும்.  இதில் எந்த தலை முறையில் என்ன வியாதி இருந்ததோ, அது அந்த விகிதாசாரத்தில் ஜாதகனின் உடலில் இருக்கும்.  அதை அதிகப்படுத்திக் கொள்ளாமல் இருப்பது ஜாதகனின் கடமையாகும்.

 ஜாதகத்தில் நோயை குறிக்கும் பாவம் ஆறாம் பாவம்,  அதை தீவிரப்படுத்தி தீர்க்க முடியாமல் சிறு நீரக பாதிப்பை ஏற்படுத்துவது எட்டாம் பாவமாகும். அதற்கு தீவர சிகிச்சை எடுத்து கொள்வதையும் அல்லது மருத்துவமனையில் தங்கி டயாலிசிஸ் செய்து கொள்வதையும், அந்த நோயால் கண்கள் பாதிக்கப்படுவதையும் பனிரெண்டாம் பாவமும் சொல்லும்.  இந்த ஆறாம் பாவமும்  பனிரெண்டாம் பாவமும் மிக முக்யமாக ஒருவரின் நோயின் தன்மையை துல்லியமாக குறி காட்டும்.  ஒரு ஜாதகத்தில் அயன சயன சுகஸ்தானமான பனிரெண்டாம் பாவம் ஒருவரின் தூக்கத்தை சொல்லும். ஒருவருக்கு இந்த பாவம் கெட்டு தூக்கம் சரிவர இல்லையென்றால் உடலில் முதலில்   பாதிப்பது  கல்லீரல் மற்றும் கணையமும் பாதிக்கும் . இவை கண்களை சோர்வாக்கி பார்வையில் குறைபாட்டை ஏற்படுத்தி விடும். 
இதை ஒரு மருத்துவர் இப்படி விளக்குகிறார்.:
Your body converts the food you eat into glucose that your cells use for energy. But your cells need insulin to bring the glucose in. (Reproductive system by Venus)
If your body doesn't make enough or anyinsulin, or if your cells resist the insulin your body makes, the glucose can't get into them and you have no energy. This can make you more hungry and tired than usual.
The average person usually has to pee between four and seven times in 24 hours, but people with diabetes may go a lot more.
Why? Normally your body reabsorbs glucose as it passes through your kidneys. But when diabetes pushes your blood sugar up, your body may not be able to bring it all back in. It will try to get rid of the extra by making more urine, and that takes fluids.
You'll have to go more often. You might pee out more, too. Because you're peeing so much, you can get very thirsty. When you drink more, you'll also pee more.
Because your body is using fluids to make pee, there's less moisture for other things. You could get dehydrated, and your mouth may feel dry. Dry skin can make you itchy.
Changing fluid levels in your body could make the lenses in your eyes swell up. They change shape and lose their ability to focus.
These tend to show up after your glucose has been high for a long time.

 கிரஹங்களில் சுக்ரன் சர்க்கரை நோயை முதலில் உடலில் ஆரம்பித்து வைக்கும். அதன் பிறகு குரு அதை தீவிரப்படுத்தும்.  பிறகு அதை நிரந்தரமாக்கி விடுவது சனியின் வேலையாகும்.   ஆகவே இந்த கிரஹங்கள் ஜாதகத்தில் 6,8,12 ம் பாவங்களோடு தொடர்ப்பு கொண்டாலோ, இந்த பாவங்களில் சேர்க்கை பெற்றாலோ ஒருவருக்கு சர்க்கரை வியாதி கண்டிப்பாக வரும்.  மேலும்  இந்த பாவங்கள் நீர் ராசியாக வந்தால் அதாவது கடகம், விருச்சிகம், மீனம் ஆக வந்து குரு, சுக்ரன், சனி தொடர்பு கொண்டால் நோயின் தாக்கம் அதிகமாகி அவர்கள் சிறுநீரை கட்டுப்படுத்தமுடியாமல் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள்.  இதோடு ராகு தொடர்பு கொண்டால் அதுவும் பனிரெண்டாம் பாவத்தோடு சேர்ந்தால் உடலில் அவயத்தை வெட்ட வேண்டிய நிலைக்கு செல்ல வேண்டி இருக்கும். அதேபோல் கேது தொடர்பு கொண்டால் அதுவும் எட்டாம் பாவத்த்தில் சேர்க்கை பெற்றால்  சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு  செயல் இழந்து அதை மாற்றக்கூடிய நிலைக்கு கூட செல்ல நேரிடும். ஆகவே ஒருவரின் ஜாதகத்தில் சர்க்கரை நோயை கொடுக்க கூடிய கிரஹங்களாக குரு, சுக்ரன் ஆகியவைஆகும். அதை பாரம்பர்யத்தில் சம்பந்தப்படுதுவது சனி ஆகும். அதை தீவிரமாக மாற்றி அவயத்தை வெட்டுவது  ராகுவும் , உறுப்புகளை செயலிழக்கச் செய்வது கேதுவாகும்.  ஓவ்வொரு ராசியிலும் மிருத்யு பாகை அதாவது கண்டத்தை ஏற்படுத்தும் பாகை என்று ஒன்று இருக்கும். அந்த மிருத்யு பாகையில் உள்ள கிரஹங்கள் உடலில் உள்ள நோயை குறிகாட்டும்.  அந்த பாகையில் 6,8,12ம் பாவாதிபதிகள் , ராகு, கேது ஆகியவை நின்றால் நோயை சற்று அதிகமாகவே தரும்.



இதை சமீபத்தில் மறைந்த நமது முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் ஜாதகத்தை பார்த்தால் தெரியும்.  அவர் ஜாதகத்தில் நீர் ராசியான குருவின் வீடான மீனத்தில் சுக்ரன் நின்று, கடகத்தில் சனி நின்று ராகு மேஷத்தில் சுக்ரன் நக்ஷத்திரல் நின்று சர்க்கரை வியாதியை அதிகப்படுத்தியது.

இதற்கு பரிகாரமாக முதலில் நல்ல தூக்கம் வேண்டும்.  நேரம் தவறாமல் உணவு எடுத்துக் கொள்வது நல்லது.அதிலும் மேலே சொன்ன உணவு வகைகளில் கட்டுப்பாடு அவசியம். சர்க்கரை வியாதி உள்ளவர்கள்  பச்சரிசி உணவை விட புழுங்கள் அரிசி உணவு எடுத்துக் கொள்வது நல்லது. அதிக நெய் சேர்த்த இனிப்புகள் சாப்பிட கூடாது. ஐஸ்கீரீம், வாழைபழம், மாம்பழம், உலர்ந்த பழங்கள், திராட்சை, கல்கண்டு ஆகியவை சாப்பிடகூடாது.  பீடி, சிகரட், மது இவை கூடாது.    சிறிய பாகற்காய் சூப் வைத்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். நார் சத்து உள்ள பொருட்கள் எடுத்துக் கொள்ளலாம். வெள்ளரி, கொய்யா, சாத்துக்குடி, ஆரஞ்சு பழம் சாப்பிடலாம்.அரிசி உணவிற்கு பதிலாக கோதுமை, கேழ்வரகு கலந்த உணவு எடுத்துக் கொள்ளலாம்.  இந்த நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி பசி ஏற்படும். ஆகவே சிறிய அளவு உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.       சர்க்கரை கொல்லி என்ற  பொடி ஆயுர்வேதத்தில் உள்ளது அதை வாங்கி மருந்தாக எடுத்துக் கொள்ளலாம்.  முதன் முதலில் மருந்து எடுத்துக் கொள்பவர்கள் ஞாயிற்றுக் கிழமை அன்று வரும் குரு ஓரையில் எடுத்துக் கொண்டால் நோய் சீக்கிரம் குணமாகும்.  சித்த மருத்துவம் நன்கு பயனளிக்க கூடியது.  இதில் பஞ்ச கர்ம முறையில் மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டால் சந்ததிகளுக்கு இதன் தாக்கம் இருக்காது.   மேலும் தகுந்த மருத்துவர் ஆலோசனையின் பேரிலேயே மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
நோயற்றே வாழ்வே குறைவற்ற செல்வம்.   வாழ்க வளமுடன்


அன்புடன் ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்………………………..ph: 9094176198 
பனிரெண்டாம் பாவம் சம்பந்தப்பட்ட முக்யமான விதிகள்

1. லக்னாதிபதி பனிரெண்டில் இருந்தால் கெளவரத்திற்கு பங்கம் ஏற்படும்.

2. பத்தாமாதி பனிரெண்டில் இருந்தால் ஸ்திரமான தொழில் இருக்காது. வியாபாரம் நல்லது. உத்யோகத்தில் தொல்லைகள் இருக்கும்.  கூட்டாளிகளே எதிரிகள் ஆவார்கள்.

3. பனிரெண்டாமாதி அங்கேயே இருந்தால் கடைசிகால அமைதியான வாழிக்கை. முக்கியமாக இங்கு சாத்வீகமான கிரஹங்கள் இருந்தால் நல்லது.  உஷ்ண கிரஹங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். உஷ்ண கிரஹங்கள் இருந்தால் அமைதியான தூக்கம் இருக்காது.

4. ஏழாமாதி பனிரெண்டில் இருந்தால் அதிக செலவாளி, கூட்டு வியாபரத்தில் நஷ்டம். நோயாளியான மனைவி, பிரிவு, அதிக பணத்தாசை,  நண்பர்களால் அதிக நஷடத்தை ஏற்பார்கள். சிலர் வெளி நாட்டில் அதிக பிரச்சனையை சந்திப்பார்கள்.

5. எட்டாமாதி பனிரெண்டில் இருந்தால் தீர்க்காயுள், கடன் வசூலாகும், உயில், சொத்து, இன்சூரன்ஸ் மூலம் திடீர் தன வரவு. பலவிதமான நோய்கள், விஷ ஜந்துக்களால் தொல்லை முதலியவை ஏற்படும். இந்த பாவாதிபதியின் தசையில் ஒரு ஜாதகர் தன் கடனை அடைப்பதற்கு முயற்ச்சி எடுத்தால் அது சாத்யமாகும்.

6.  ஒன்பதாமதிபதி, பதினோராமதிபதி, பனிரெண்டில் இருந்தால் சரியான வருமானம் இருக்காது. தகப்பனாரின் சகோதரர்களால் நஷ்டங்கள் ஏற்படலாம். 

7.  இரண்டாமதி பனிரெண்டாமாதி பரிவர்த்தனை தரித்தர யோகம், வீண் செலவுகள். கண் நோய்கள் ஏற்படலாம்.

8.  மூன்றாமாதி பனிரெண்டாமாதி பரிவர்த்தனை வாக்கில் நாணயம் இருக்காது. பயணத்தால் வீண் செலவு,  இளைய சகோதரனால் வீண் விரயம், குழந்தைகளால் நிம்மதி இல்லாமை, பெண்ணால் வாழ்க்கையில் உயர்வு, ஆனால் கஷ்டங்களும் ஏற்படும்.

 9.  மூன்றாமாதி  பத்தாமாதி பனிரெண்டில் இருந்தால் எதையும் தப்பாக நினைக்கும் எண்ணம்,  உடன் பிறப்புகளால் வம்பு வழக்கு, கோர்ட் பிரச்சனை, எற்படும். முக்யமாக தம்பியின் திருமணத்திற்கு பிறகு குடும்பத்தில் பிரச்சனை ஏற்படலாம்.   வெளிநாடு செல்லும் யோகம் வரும்.

10.  ஐந்தாமாதி, பனிரெண்டாமாதி பரிவர்த்தனை குடும்ப தகராறு, குழந்தைகளால் பிரச்சனை அவர்களால் வழக்கு பிரச்சனை ஏற்படும். போட்டி, பந்தயங்களில் தோல்வி ஏற்படும்.  சிலருக்கு பிரசவத்தில் பிரச்சனை ஏற்படும்.

11. ஒன்பதாமாதி பனிரெண்டாமாதி பரிவர்த்தனை வாழ்க்கையில் அதிக எற்ற தாழ்வுகள், சரிவுகள், கஷடங்கள் இருக்கும். இங்கே சுக்ரன் அமர்ந்த சில ஜாதகரின் தந்தைக்கு இரண்டு குடும்ப்பங்கள் இருக்கலாம். அல்லது இரண்டு மனைவிகள் அமைந்திருக்க வாய்ப்புண்டு.

12.  நான்காமாதி, பனிரெண்டாமாதி தொடர்பு பரிவர்த்தனை, வண்டி வாகனங்களால் தொல்லை, வீட்டை பராமரிப்பதில் அதிக செலவு,  தாயுடன் சண்டை, ஏற்படும். சிலருக்கு மனைவி வழி உறவுகளால் ஆதாயம் அடையவும் வாய்ப்புண்டு.

13. ஆறாமாதி பனிரெண்டாமாதி தொடர்பு, அதிக நோய், பிற பெண்களின் மீது ஆசை எறபடும்.

இது விரய பாவமாக இருந்தாலும்,   இங்கு இருக்கும் கிரஹங்களால் ஒரு ஜாதகரின் இறப்பிற்கு பின் அவரின் புகழை பார்க்கலாம்.  இங்கு பலம் பெறாத உஷ்ண கிரஹங்கள் இருந்தால் அதாவது சூரியன், செவ்வாய்,புதன், ராகு, ராகுவுடன் சேர்ந்த கிரஹங்கள் இருந்தால் (குருவை தவிர) அவரின் இறப்பிற்கு பின் அவரை பற்றி அவ்வளவு நல்ல பெயர் இருப்பது கடினம்.  ஆனால், சந்திரன்,  குரு, சுக்ரன் போன்ற கிரஹங்கள் இருந்தால் அவரின் புகழ் நிலைக்கும்.   குரு சனி, குரு ராகு இவர்கள் சேர்ந்து இருந்தால் அதுவும் அது நீர் ராசியாக இருந்தால் அவரின் பூத உடலுக்கு பின் ஆயிரம் பேர் வருவார்கள்.   குரு கேது, கேது, சனி கேது  சேர்க்கை இருப்பின் அவர் இந்த ஜன்மத்தின் கர்ம வினைகளை தீர்த்தவராக இருப்பார்.  அதாவது அவரின் கர்ம வினை தொடர்ச்சி இருக்காது.  அதாவது மறு பிறப்பை அவர் எடுக்க வேண்டிய நிலை வராது. 

      
பதினோராம் பாவம் சம்பந்தப்பட்ட முக்யமான விதிகள்

 1. பதினோராமதிபன் அந்த பாவத்திலேயே இருப்பது நல்ல அறிவும், நல்ல பேச்சு திறமையும் இருக்கும்.  இவரோடு குருவும் புதனும் பலமாக இங்கு நின்றால் Phd. போன்ற உயர் படிப்புகள் சித்தியாகும்.  பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றமும்  பேரும் புகழும் உண்டாகும். ஆனால் குரு, புதன் லக்ன பாதகாதிபதியாகவோ, மாரகாதிபதியாகவோ  வந்து இங்கு பலம் பெற்றால் தசா புத்திகளில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.  மாரகத்துக்கு ஒப்பான கணடங்களும் ஏற்படும்.  
 
 2. லக்னாதிபதி பதினோராமாதி தொடர்பு வேதாந்தியாகவும், அதில் நிம்மதியும்  அடுத்தவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் குணமும் இருக்கும்.  கும்ப லக்னக்காரர்களுக்கு இந்த அமைப்பு சரியாக இருக்கும்.   இந்த அமைப்பில் சனியானவர் விரயாதிபதியாகவும் வருவதால் அவரின் மூல திரிகோண ஆதிபத்யம் பலம் பெற்று இந்த அமைப்பை கொண்டு வரும்.  சிலர் குடும்பத்தை விட்டு தனியான வாழ்க்கை வாழ ஆசை படுவார்கள்.  மூத்த சகோதரர்களால் சிலர் ஆதாயம் பெறுவார்கள்.

 3. இரண்டாமாதி பதினோராமாதி தொடர்பு நல்ல தனபிராப்தியும், நல்ல வருமானமும் இருக்கும். பரிவர்த்தனை சிறப்பு.  நல்ல செல்வ செழிப்பை கொடுக்கும்.  மீன லக்னத்திற்க்கு இந்த பலனை எதிர்பார்க்க முடியாது. 

4. ஏழாமாதியும், பதினோராமாதியும் தொடர்பு கொண்டால் நிறைய வெகுமதிகள் கிடைக்கும். பரிவர்த்தனை ஆனால் கூட்டு தொழிலில் பெரும் லாபம் கிடைக்கும். மனைவி வழியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.   சிலருக்கு திருமணத்திற்கு நல்ல முன்னேர்றம் இருக்கும்.

 5. ஆறாமாதியும் பதினோராமாதியும் தொடர்பு , நண்பர் பகை, எதிலும் தடை, பொருளாதாரத்தில் சரிவு, நோயும் இருக்கும். இந்த அமைப்பில் ஆறாமாதி இங்கு உச்சம் பெறக் கூடாது.  வசதிக்காக அதிக கடன் எற்பட்டு அதிக கஷ்டத்தை கொடுக்கும்.  வரும் வருமானம் வியாதிக்காக விரயமாகும்.

 6. ஒன்பதாம் அதிபதியும் பதினோராமாதியும் பரிவர்த்தனை ஆனால் அரசங்கத்தால் லாபமும், பொருளாதாரத்தில் வெற்றியும், சந்தோஷமான குடும்பமும் அமையும். சிலர் அரசில் உயர் பதவியில் அமரும் பாக்யம் கிடைக்கும். அரசாங்கத்தில் கெளவரமும் மதிப்பும் மரியாதையும் உண்டாகும்.

7. பத்தாமாதியும் பதினோராமாதியும் தொடர்பு கொண்டால் நல்ல நண்பர்கள், அதிக சம்பாத்தியம், அரசியிலில் வெற்றி, பணக்காரர்களின் தொடர்பு ஏற்படும். செய் தொழிலில் நல்ல வெற்றி உண்டாகும். மேஷ லக்னத்திற்க்கு இந்த பலன் பொருந்தாது.

 8. ஒன்பதமாதி, பத்தாமாதி பதினோராமாதியும் தொடர்பு கொண்டால் தொழிலில் நல்ல லாபமும், வேலையில் முன்னேற்றமும், நல்லவர்களின் நட்பும், பெரிய பணக்காரர்களின் நட்பும் கிடைக்கும். சமூகத்தில் நல்ல மரியாதையும், மதிப்பும் கிடைக்கும். 

 9. ஐந்தாமாதி, பத்தாமாதி , பதினோராமாதியும் தொடர்பு கொண்டால் நல்ல உயர்ந்த படிப்பும், நல்ல குழந்தைகளும் உண்டாகும், உயர்ந்தவர்களின் நட்பும் கிடைக்கும். குழந்தைகளால் குடும்பம் வளர்ச்சி அடையும்.  குழந்தைகளில் ஒருவர் வெளிநாட்டில் இருப்பதற்கு வாய்ப்புண்டு.

10.  பனிரெண்டாமாதியும் பதினோராமாதியும் தொடர்பு கொண்டால் தன் லாபத்தை தானே விரயம் செய்வான்.  சிற்றின்பத்தில் அதிக நாட்டம் இருக்கும்.  உல்லாச பயணங்களுக்காக அதிகம் செலவு செய்வார்கள். 


…………………..அன்புடன் ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்.
பத்தாம் பாவம் சம்பந்தப்பட்ட முக்யமான கிரஹ சேர்க்கைகளும் அதன் பலன்களும்.

எபோதுமே  ஒரு விதியை பின்பற்றுகிறபோது அந்த விதி அந்த பாவம், அதன் அதிபதி அதனை பார்க்கும் கிரஹம் ஆகியோருக்கு பொருந்துகிறதா என பார்க்கவேண்டும்.  ஒரு பாவத்தின் வலுவை நிர்ணயம் செய்யும் போது, அந்த பாவத்தில் ஒரு நீச்ச கிரஹம் இருக்க கூடாது. அந்த பாவம் வலு இழக்கும். அதேபோல் அந்த பாவதிபதி ஒரு நீச்ச கிரஹத்தோடு சேரக்கூடாது. அந்த கிரஹம் வலு இழக்கும்.  ஒரு நீச்ச கிரஹம் பார்க்ககூடாது. பலனை தருவதில் சிக்கல் இருக்கும். பத்தாம் பாவத்தில் ராகு இருந்து அது நீர் ராசியாக இருந்தால் அந்நிய தேசத்தில் வேலை வாய்ப்புகளும்,  தொழில் வாய்ப்புகளும் வரும். 
 1.  இரண்டாமதிபன் ஐந்தாமதிபன் சேர்ந்து பத்தில் இருந்தால் பொருளாதார உயர்வும், எல்லா காரியங்களிலும் வெற்றியும் இருக்கும். பிள்ளைகளால் தன வரவு இருக்கும். ரேஸ், லாட்டரி, பங்கு வர்த்தகம் , அதாவது யூக வருமானங்கள் அதிகம் இருக்கும்.  

 2.  இரண்டாமதிபன் ஒன்பதாமதிபன் சேர்ந்து பத்தில் இருந்தால் செய் தொழிலில் அதிர்ஷ்டமும், கூட்டு வியாபாரத்தில் நல்ல லாபமும் இருக்கும்.  ஒன்பதாம் இடம் இரண்டுக்கு எட்டாமிடம் ஆக வருவதால் குடும்ப உறுப்பினர்களின் வற்புற்த்தலுக்கு ஏற்ப ஜாதகர் தன் தந்தையில் சொத்தை பிரித்து வாங்கிச் செல்வார்.  தந்தை மகன் பிரிவு வரவும் வாய்ப்பு உண்டு.

 3.  பனிரெண்டாமதிபனும், பத்தாமதிபனும் பரிவர்த்தனையானால் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகளும் தோல்விகளும், தடை, தடங்கல்களும், கஷ்டங்களும் ஏற்படும்.  அடிக்கடி வேலை மாறுதல் உண்டாகும்.  அடிக்கடி தொழிலை மாற்ற வேண்டிய சூழல் வரும்.  

 4.  பத்தாமதிபனும் பதினோராமதிபனும் பரிவர்த்தனையானால் நல்ல நண்பர்கள் தொடர்பும், தொழிலில் லாபமும், நல்ல உயர்வும், முன்னேற்றமும் ஏற்படும்.  அதேசமயம் மூத்த சகோதரரால் சில நஷ்டங்களும் ஏற்படும். சில பேருக்கு லக்னாதிபதி பலமில்லாமல் இருந்தால் , கூட்டுத் தொழ்லில்  நண்பனே லாபத்தை எடுத்துச் செல்வான்.  இந்த பலன் கடக லக்னத்தாருக்கு கண்டிப்பாக இருக்கும்.  சில ஜாதகர் தன் சுகத்திற்காக தன் தாயை பிரிவார்கள்.

5.  லக்னாதிபதியும், பத்தாமதிபதியும் பரிவர்த்தனை யானால் உத்யோகத்தில் வெற்றியும், நல்ல தொழிலும் அதில் வெற்றியும் இருக்கும்.  மேஷ லக்னத்திற்கு இந்த பலன் சரியாக வராது.

6.  பத்தாமதிபதி ஏழாமாதி பரிவர்த்தனை ஆனால் கூட்டு தொழிலில் வெற்றியும், நல்ல உதவிகளும் கிடைக்கும். குடும்பத்தில் அன்யோன்யம் இருக்கும்.  சில பேருக்கு மாமனார் தொழிலை ஏற்று நடத்தக் கூடிய வாய்ப்பு வரும். வீட்டோடு மாப்பிள்ளையாக போகும் யோகம் வரும். மிதுன லக்னம்,  தனுசு லக்னத்திற்கு இந்த பலன் வராது.

7.  எட்டாமாதி பத்தாமாதி பத்தில் இருந்தால் செய் தொழில் சரியாக வராது.  சில சமயம் தன் தொழில் விருத்திக்காக, முறை தவறிய வழிகளில் கடன் பெற்று சிறை ஜீவனம் ஏற்படும்.  இந்த அமைப்பில் ராகு சம்பந்தப்பட்டால், தொழில் போட்டியால், சில சமயம்  பங்கு தாரரின் இறப்பிற்க்கு ஜாதகரே காரணமாக இருப்பார்.

8.  இரண்டாமாதி, ஏழாமாதி பத்தாமாதி சேர்க்கை பத்தில் இருந்தால் தொழிலில் நல்ல லாபம் இருக்கும்.  துணையால் நல்ல வருமானம் ஏற்படும்.  ஆனால் இது சில லக்னங்களுக்கு மாரக ஸ்தானமாக இருப்பதால் (2,7)  அதன் தசா புத்திகளில்  பத்தில் ஏதேனும் கிரஹம் கெட்டு இருந்து கோசாரத்தில் தொடர்பு ஏற்படும் போது தொழில் நஷ்டம் காரணமாக தற்கொலை செய்யும் மன நிலை வரும். இந்த அமைப்பில் சந்திரன் கெட்டு கேதுவோடோ, மாந்தியோடோ சேரக்கூடாது.

9.  பத்தாமாதியும் ஆறாமாதியும் பரிவர்த்தனையானால் தந்தைக்கு இரண்டு குடும்பங்கள் இருக்கும்.  சொத்து பிரச்சனைகள் அதிகம் வரும். 

10. லக்னாதிபதி, நான்காமாதி, பத்தாமாதி தொடர்பு இருந்தால் ஜாதகனுக்கு பிற பெண்கள் சேர்க்கை இருக்கும். சந்தோஷம் இருக்கும். 

11.   பத்தாமாதி, லக்னாதிபதி, ஐந்தாமாதி, ஏழாமாதி பரிவர்த்தனை வாழ்க்கையில் அதிக முன்னேற்றம் , ஆதிக்கம், புகழ் ஆகியவை கிடைக்கும்.  மனைவி வழியில் சொத்துக்கள் ஜாதகரின் பிள்ளைகளுக்கு வந்து  சேரும் . 

12.  ஐந்தாமாதி, ஒன்பதாமாதி பத்தாமதியோடு தொடர்பு கொண்டால் அரசனுக்கு சமமான வாழ்வும், நல்ல புகழும் ஏற்படும்.  அடிக்கடி யாத்திரைகள் செய்வான்.  புண்ணிய சேத்திரங்களை தரிசனம் பண்ணும் பாக்கியம், புண்ணிய நதிகளில் நீராடும் பாக்கியம் ஆகியவை ஏற்படும்.

13.  பத்தாமாதி, பதினோராமாதி மற்றும் ஒன்பதாமதியோடு தொடர்பு கொண்டால் அரசு மரியாதைகளும், எல்லா காரியங்களிலும் ஒழுக்கமும் நேர்மையும் இருக்கும்.  நல்ல புகழ் கிடைக்கும்.   



ஒன்பதாம பாவம் சம்பந்தப்பட்ட முக்யமான விதிகள்

1. இரண்டாமதிபன், ஐந்தாமதிபன் சேர்ந்து ஒன்பதில் இருந்தால் நல்ல தனப்ராப்தி இருக்கும். புத்திசாலிதனத்தால் வருமானத்தை பெருக்குவார்கள்.  பிள்ளைகளால் நல்ல தனப்பிராப்தி இருக்கும்.  பாரம்பரிய சொத்துக்கள் மூலம் வருமானம் வரும்.

2. இரண்டாமதிபன் பத்தாமதிபன் சேர்ந்து ஒன்பதில் இருந்தால் நல்ல பொருளாதார முன்னேற்றமும், பணம் சம்பாதிப்பதில் வெற்றியும் பெறுவார்கள். பணத்தின் மூலமாக பணத்தை பெருக்குவார்கள்.  தந்தை மூலம் தன்ப்பராப்தி வரும்.

3. ஐந்தாமதிபன் ஒன்பதில் இருந்தால் குழந்தைகளுக்கு முன்னேற்றமும், அவர்களால் குடும்ப மகிழ்ச்சியும் இருக்கும். பிள்ளைகள் பங்கு வர்த்தகத்தின் மூலம் அதிகமாக சம்பாதிப்பார்கள். சில சமயம்  தாத்தாவின் தொழிலை பேரன் தொடர்ந்து செய்வான்.

4. பத்தாமதிபன் ஒன்பதில் இருந்தால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.  ஆனால் உத்யோகத்தில் நல்ல பயன் பெற முடியாது. இவர்கள் இருவரும் பரிவர்த்தனை ஆனால் சொத்து சேரும், நிலத்தால் நல்ல வருமானம் கிடைக்கும், திடீர் பணவசதிகள் வரும், பெரிய மனிதர்கள் சந்திப்பு கிடைக்கும்.

5. ஏழாமதிபன் ஓன்பதாமதிபன் பரிவர்த்தனை ஆனால் வாழ்க்கையில் அதிர்ஷடம் இருக்காது. சில சமயம் மனைவியின் வீம்பான போக்கால் மண வாழ்க்கையில் போராட்டம் இருக்கும். 

6. நான்காம் அதிபதி, ஒன்பதாமதிபதி பரிவர்த்தனை ஆனால் நல்ல அந்தஸ்து, அதிகார பதவி, நல்ல தனம், குடும்ப உறுப்பினர்களின் உதவிகள் கிடைக்கும்.

7. எட்டு, ஒன்பதாம் அதிபதிகள் பரிவர்த்தனை ஆனால் வாழ்க்கையில் தோல்வி, பெரும் ஏற்ற இறக்கம், கஷ்டங்கள், ஏற்படும்.  தந்தையால் ஆதாயம் கிடைப்பது கஷ்டம். 
 
8. லக்னாதிபதி ஒன்பதாமதிபதி தொடர்பால், நல்ல பேச்சு திறமையும் நல்ல அதிர்ஷ்டமும், சமூகத்தில் வெற்றியும், நல்ல அதிர்ஷ்டசாலி பெண் குழத்தைகளும் கிடைக்கும்.  இவர்கள் நல்ல நட்பு நக்ஷத்திர சாரத்தில் நின்றால் தந்தைக்கும் மகனுக்கும் மிகுந்த ஒற்றுமை இருக்கும்.

9. ஆறாமதிபதி, ஒன்பதாமதிபதி தொடர்பு பெற்றோருக்கு கஷ்டமும், காரிய தடையும், சமூகத்தில் இறக்கமும், இருக்கும்.  மரம், கல் சிமெண்ட், நிலக்கரி, மணல் வியாபாரம் செய்தால் சிறப்பு.

10. இரண்டாமதிபன், ஒன்பதாமதிபன் பரிவர்த்தனை நல்ல உடல் வாகும், நல்ல பண வசதியும், வாழ்க்கையில் அந்தஸ்து, முன்னேற்றம் இருக்கும்.

11. மூன்றாஅதிபதி, ஒன்பதாம் அதிபதி பரிவர்த்தனை இருந்தால் சொத்து அழியும், வாழ்க்கையில் துக்கங்கள் மிகும்,  மணக்கணக்குகள் பொய்யாகும், பணக்கஷ்டம் அதிகம் இருக்கும்.  இளைய சகோதரன் மனைவியால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படும்.

12. பனிரெண்டாமதிபனும் ஒன்பதாம் அதிபனும் தொடர்பு கொண்டால் புண்ய தலங்களை தரிசிக்கும் பாக்யமும் , புனித நதிகளில் நீராடும் பாக்யமும் ஏற்படும்.


13. நான்காமதிபன், ஆறாமதிபன் சேர்ந்து ஒன்பதில் இருந்தால் தந்தைக்கும் ஜாதகருக்கும் ஒத்து வராது.  சண்டை சச்சரவுகள் இருக்கும்

Monday, 6 March 2017

எட்டாம் பாவம் சம்பந்தப்பட்ட முக்கியமான விதிகள்

 1.  எட்டாமாதியும், லக்னாதிபதியும் சேர்ந்து எட்டில் நின்றால் வேலையில் சரியான வருமானம் இருக்காது.  கூட்டு தொழில் ஆகாது.  தனி வியாபாரம் நல்லது.  இங்கு இரண்டாமாதியும் சேர்ந்து நிற்க  சில சமயங்களில் தனக்கு ஏற்படும் தடை தாமதங்களை கண்டு வாழ்வில் விரக்தி ஏற்பட்டு அவசரப்பட்டு விபரீதமான முடிவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்புண்டு.

 2.  எட்டில் லக்னாதிபதி இருந்தாலோ, பரிவர்த்தனை ஆனாலோ, சூதாட்டத்தில் விருப்பம், குதிரை பந்தயத்தில் ஆர்வம், பிறர் பெண் மீது நாட்டம், திருட்டு புத்தி இருக்கும். தீர்க்காயுள் உண்டு.  தன் கஷ்டங்களுக்கு தானே காரணமாவான்.   மேஷ லக்னத்திற்க்கு இது பொருந்தாது.

 3.  11ம் ஆதியும் 8ம் ஆதியும் தொடர்பு கொண்டால் தீடிரென்று நெருங்கிய நண்பர் மரணமடையலாம்.  இவர்கள் இரண்டாம் இடத்தில் சேர்க்கை பெற்றால், நண்பர்களின் சொத்தை ஜாதகர் பராமரிக்கும் நிலை ஏற்படும். ரிஷப லக்னத்திற்கு இது பொருந்தாது.

 4.  9ம் ஆதியும் 8ம் ஆதியும் தொடர்பு கொண்டால் எதிர்கால சிந்தனை அதிகம் இருக்கும்.  மதத்தின் மீது அதிக பற்று இருக்காது.  தந்தையின் மரணத்திற்கு பிறகு உயில் மூலம் சொத்து கிடைக்க வாய்ப்புண்டு.  சொந்த சமூகத்தில் மரியாதை இருக்காது.  சில சமயம் தன் மதத்தில் இருந்து வேறு மதம் மாரக்கூடிய நிலை ஏற்படும்.  மிதுன லக்னத்திற்கு இது பொருந்தாது.

5.  3ம் ஆதியும் 8ம் ஆதியும் சேர்ந்து எட்டில் இருந்தால் ஆன்மீகத்தில் நாட்டம் வரும்.  சொந்த இரத்த சம்மந்தமுள்ளவர் இறப்பால் அவரின் சொத்து இவருக்கு வரும்.  துக்கம் விசாரிக்க செல்லும் போது ஜாதகருக்கு விபத்து ஏற்படலாம். பரிவர்த்தனை பெற்றால் தீர்க்காயுள். சகோதரர்களுக்குள் ஒற்றுமை இருக்காது.  கன்னி லக்னத்திற்கு இது பொருந்தாது.  ஆனால் இந்த லக்னத்திற்கு மூன்றுக்கும் எட்டுக்கும் உடைய செவ்வாய் உச்ச மடைந்தால் இவர்கள் நில சம்மந்தமான வியாபரம் செய்தால் அதிகமாக வில்லங்கத்தில் சிக்குவார்கள்.

 6.  4ம் ஆதியும் 8ம் ஆதியும் சேர்க்கை பெற்றால் அதுவும் 8ல் இருந்தால், ஆரோக்யம் நன்றாக இருக்கும்.  தன வசதி இருக்கும்.  ஆண் வாரிசு வருவதற்கு வாய்ப்பு குறைவு. 

 7.  5ம் ஆதி 8ம் ஆதி தொடர்பு, நல்ல பணவசதி, ஆனால் நிலையில்லாத மனம். பரிவர்த்தனை பெற்றால் பிள்ளைகளுக்கு கஷ்டம்.  சிம்ம லக்னத்திற்க்கு இது பொருந்தாது.

 8.  12ம் ஆதியும் 8ம் ஆதியும் பரிவர்த்தனை பெற்றால் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள்.  அவனே எட்டில் இருந்தால் மறைமுக அதிக செலவுகள்.  தனிக்காட்டு ராஜா.  வாழ்க்கையில் திடீர் உயர்வு.

 9.  4ம் ஆதியும் 7ம் ஆதியும் எட்டில் நின்றால் நல்ல ஆரோக்யம், நல்ல தனம் ஆனால் வாரிசு இருப்பது கஷ்டம்.  ஜாதகன் தன் துணைக்கும்  தாய்க்கும் இடையில் ஏற்படும் பிரச்சனைகளால் மனம் வெறுத்து போகும் சூழ் நிலை வரும்.  ஜாதகனின் தாய் தன் மருமகளை வெறுப்பாள்.  தன் மகனுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க விரும்புவாள்.  மூலை லக்னங்களான , கன்னி  ,  மீனம் ஆகியவைகளுக்கு களத்திர சுகத்தை கெடுத்து தார தோஷத்தை ஏற்படுத்தும்.

10.  6ம் ஆதி 8ல் இருதால், நோய் அதிகமாகும். நீடித்த நோயால் கஷ்டப்படுவார்கள்.  பண வசதி இருந்தும் அதை அனுபவிக்க முடியாத  நிலை இருக்கும்.

11.  7ம் ஆதி எட்டில் தொடர்பு கொண்டால் துணைக்கு ஆகாது.  தன் மறைமுக தொடர்புகளுக்கு அதிகம் செலவழிப்பான்.  கடக லக்னத்திற்கு இது பொருந்தாது.  மேஷ லக்னத்திற்கும், துலா லக்னத்திற்கும் இரண்டுக்கு ஏழுக்கும் உடையவர் ஒருவரே ஆவதால், அவர் எட்டில் மறைந்தால்  திருமணத்திற்கு பிறகு அதிக பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். சில சமயங்களில் திருமண முறிவு ஏற்படலாம். 
  
12.   5ம் ஆதியும் 10 ஆதியும் சேர்ந்து எட்டில் நின்றால், புத்ர தோஷம், தீராத கஷ்டம். அப்படி, பிள்ளைகள் இருந்தால், அவர்கள் ஜாதகனை வயதான காலத்தில் கவனிக்க மாட்டார்கள்.  கடக லக்னதிற்கு  ஐந்துக்கும் பத்துக்கும் உடைய செவ்வாய் யோக காரகான இருப்பதால் நல்ல பலனாக அமைய வேண்டும். ஆனால் ஜாதகருக்கு அந்த யோகம் அமைவது தடைபடும்.

13.  4ம் ஆதியும், 5ம் ஆதியும் எட்டில் நின்றால் பிள்ளைகளுக்கு நோய் உண்டாகும்.  சொத்தில் வில்லங்கம் ஏற்படும்.    துலாம் லக்னத்திற்கு நான்கிற்கும் ஐந்திற்கும் உடைய சனி எட்டில் நிற்கும் போது இந்த பலன் இல்லை. ஆனால் ஜாதகரின் தாய்க்கு நோயின் தாக்கம் இருக்கும்.  பிள்ளைகளால் சில கஷ்டங்களை சந்திப்பார்கள்.

14.  9ம் ஆதியும் 10 ஆதியும் சேர்ந்து 8ல் நின்றால் தாய் தந்தைக்கு கஷ்டம், பூரிவீக நிலச் சொத்தில் வில்லங்கம் ஏற்படும்.   ரிஷப லக்னத்திற்கு இருவருமே ஒருவராக இருப்பதால் இந்த பலன் இல்லை.  ஆனால் ஜாதகர் தந்தைக்கு கர்மம் செய்வதில் பிரச்சனை ஏற்படும்.  அல்லது அந்த சமயத்தில் தந்தையில் அருகில் இல்லாமல் போக நேரிடும்.

15.  2ம் ஆதி 8ம் ஆதி தொடர்பு ஏற்பட அதிக செலவுகள் ஏற்படும். துணை மூலம் கஷ்டங்கள். மனைவி அதிக செலவாளியாக இருக்கு வாய்ப்புண்டு.   மேஷத்திற்கும், துலாதிற்கும் இந்த பலன் கண்டிப்பாக இருக்கும்.

16.  2க் குடையவனும் 11க் குடையவனும் சேர்ந்து 8ல் நின்றால் பொருளாதாரத்தில் தடையும் பணக்கஷ்டமும் ஏற்படும். குடும்ப வறுமை காரணமாக அதிக கடன் வாங்கி அதை கட்ட முடியாமல் கஷ்டப்படுவார்கள்.  மேஷ லக்னத்தார்க்கு இது அதிகமாக இருக்கும். 11ம் அதிபதி பாதகாதிபதிதானே அவன் மறையலாமே என்று கேட்பார்கள்.  ஆனால் அவன் விருச்சிகத்தில் அமராமல் இருப்பது நல்லது.  அதுவும் போக காரகனும் சனிக்கு யோக காரகனும் ஆன சுக்ரனோடு சேர்ந்து எட்டில் அமர்வது நல்லதல்ல்.

17. லக்னாதிபதி,  4ம் அதிபதி, 9ம் அதிபதி சேர்ந்து எட்டில் நின்றால் வாழ்க்கையில் வறுமை அதிகமாக இருக்கும்.  சுகத்தை அனுபவிக்க முடியாது.  பாரம்பரிய சொத்துக்களை கடனுக்காக இழக்க வேண்டிவரும். 

18.  4ம் அதிபதி  மட்டும் எட்டில் நின்றால் சொந்த வீட்டை இழக்க நேரிடும். சில பேர் சொந்த வீடு வைத்து இருந்தாலும் அதில் வசிக்க முடியாது.  வாடகை வீட்டில் தான் வசிக்க நேரிடும்.  அப்படியே சொந்த வீட்டில் வசித்தாலும் நிம்மதி இருக்காது.

19.  8ம் அதிபதி நான்கில்  இருந்தால் பரம்பரை நோய் உடம்பில் இருக்கும்.  அது தசா புத்திகளில் தாக்க வாய்ப்புண்டு.  என்றோ காணாமால் போன பொருள் ஒன்று கையில் கிடைக்க வாய்ப்புண்டு.  பாரம்பர்யத்தில் தொலைத்த, கைவிட்டு போன சொத்து அல்லது விலைமதிக்க முடியாத புதையலுக்கு சமமான விஷயங்கள் கைக்கு எட்டும்.

20.பொதுவாகவே எட்டாம் இடம் என்பது எல்லோருக்குமே  கஷ்டத்தை தரும் இடம்.  நீடித்த அதாவது தீராத நோய், தடை தாமதம், வறுமை,விரக்தி இவைகளை தரும் இடமாக இருக்கிறது.  எட்டாம் இடத்துக்காரன் எட்டில் நின்றாலும்,  அல்லது அந்த இடத்துக்கு காரகர் சனி அங்கு நின்றாலும் காரக பாவ நாஸ்தியை தரமாட்டார் .  பூரண ஆயுள் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது . ஆயுளை நீட்டித்தாலும்,  கடைசி வரை நோயில்லாத வாழ்க்கை தானே நிம்மதியான வாழ்க்கை.  ஆயுளை நீட்டித்து, நோயின் பிடியில் சிக்கி கட்டிலில் கிடந்து எல்லாவற்றிற்கும் அடுத்தவர் உதவியை நாடி வாழ்வது ஒரு வாழ்க்கையா. அதற்காக பூரண ஆயுள் தேவையில்லை என்று சொல்லவில்லை.  தீர்க்கமான ஆயுளும் தேவை.  நோய் நொடி இல்லாத வாழ்க்கையும் தேவை.

பூர்வ புண்யத்தை ஐந்தாம் பாவம் சொன்னாலும் அதனுடைய நான்காவது கேந்திரமான எட்டாமிடம் பூர்வ பாபத்தை சொல்லும்.  அதாவது கர்ம வினைகளை சுட்டி காட்டும் இடம்.
எட்டு என்பது, டெஸ்டினி நம்பர் என்று சொல்வார்கள். எங்கு ஆரம்பிக்கிறது எங்கு முடிகிறது என்பதை கண்டு பிடிக்க முடியாத எண்.  வாழ்க்கையும் அப்படிதான் எங்கு ஆரம்பிக்கிறது எங்கு முடிகிறது என்பதை நம்மால் தீர்மானிக்க முடியாது.   எட்டில் இருக்கும் அல்லது பார்க்கும், அல்லது அதன் அதிபதி, அவரை பார்க்கும் கிரஹங்களை வைத்து  நம் வாழ்க்கையின் அல்லல்களை தீர்மானித்து, அதை களைய நம் முன்னோர்கள் வழிபட்ட குல தெய்வங்களை தொழுது அதை போக்கி கொள்வோம்.  அந்த காலத்தில்  பூட்டெல்லாம் பார்த்தீர்கள் என்றால் இரும்பில் கருப்பாக எட்டு வடிவில் இருக்கும். அதனால் தான் எட்டின் தாக்கத்தை போக்க கருப்பு தெய்வங்கள் நம் பாதுகாப்பிற்காக வந்து நிற்கும் என்று சொல்வார்கள்.  நாம் வீட்டில் சேர்த்து வைத்த எல்லா பொருட்களுக்கும் காவலாக ஒரு பூட்டு காவலாக இருந்து பாதுகாக்கும் போது, நம் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கெளுக்கெல்லாம் காவலாக அந்த காவல் தெய்வங்கள் இருந்து நம்மை காப்பாற்றும் என்ற நம்பிக்கையோடு, எட்டாமிடத்தை பற்றி கவலை படாமல் குல தெய்வ வழிபாட்டை செய்து வாழ்க்கையை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டுகிறேன்.


 



ஏழாம் பாவம் சம்பதப்பட்ட முக்யமான விதிகள்

 1.  ஏழாம் பாவத்தில் மூன்று, பனிரெண்டு அதிபதிகள் சேர்ந்து இருந்தால் விசுவாசுமுள்ள நன்னடத்தையுள்ள அழகிய மனைவி அமைவாள்.

 2.  ஆறு பனிரெண்டாமாதிகள் சேர்ந்து 7ல் இருந்தால் உடலில் நோய் இருக்கும்.  பெற்றோருக்கு பாரமாக இருக்க நேரிடும். வழக்குகள் ஜாதகனுக்கு சாதகமாக இருக்காது.  எதிலும் தோல்விதான்.

 3.  ஏழாம் பாவத்தில் லக்னாபதியும் பனிரெண்டாமாதியும் இருப்பது திருமண வாழ்க்கையை பாதிக்கும். 

 4.  ஏழாமாதியும் ஐந்தாமாதியும் பரிவர்த்தனை பெற்றாலோ, சேர்ந்தாலோ திருமண வாழ்க்கை பாதிக்கும்.  புத்ர தோஷம் ஏற்படும்.  மனைவியை பிரிய நேரிடும்.   மனைவி அடிக்கடி பிரிந்து தாய் வீடு செல்வாள். பிறரின் தலையீடு இருக்கும்.

 5.  ஏழாமாதியும் நாலாமதிபதியும் பரிவர்த்தனை , சேர்தல்,தொடர்பு கூடாது.  பரம்பரை சொத்து அழியும்.

 6.  ஏழாமாதியும் ஆறாமாதியும் தொடர்பு கொண்டால்  தைரியம், துணிச்சல் இருக்கும், ஆனால், மலட்டு தன்மை வரலாம்.  வரும் துணைக்கு நோய் இருக்கும். வரும். பரிவர்த்தனை பெற்றால் வெளி நாட்டு வாசம் ஏற்படும்.

 7.  5ம் அதிபதி 7ல் இருந்தால் தன் முதலாளிக்கு விசுவாசமாக இருப்பான். தைரியம் இருக்கும்.

 8.  ஏழாமாதி இரண்டாமாதி தொடர்பு அல்லது இரண்டாமிடம் தொடர்பு துணையால், தன விருத்தி ஏற்படும்.
 
 9.  லக்னாதிபதியும் ஏழாமாதியும் பரிவர்த்தனை அடைந்தால் அரசாங்கத்தால் உதவி, பண வரவு, பாராட்டு, பத்திரங்கள் கிடைக்கும், நல்ல லாபம் ஏற்படும் ஆனால் வாக்கில் நாணயம் இருக்காது.

10.  ஏழாமாதி எட்டாமாதி தொடர்பு ,  தோலில் வியாதி ஏற்படும்,  இருதாரம் ஏற்பட வாய்ப்புண்டு.

11.  ஏழாம் பாவத்தில் 2,4ம் ஆதிகள் சேர்க்கை பெற்றால் முன்னேற்றமும், பல துறைகளில் சாதிக்கும் திறமையும், பல மொழி படிக்கும் திறமையும் இருக்கும்.  ஆனால் பரம்பரை சொத்து அழியும்.

12.  9ம் ஆதியும், 7ம் ஆதியும் தொடர்பு கொண்டால் புகழும், சமுதாயத்தில் மதிப்பும் கிடைக்கும்.  இவர்கள் பரிவர்த்தனை ஆனால் திருமணத்திற்கு பிறகு  உயர்ந்த நிலைக்கு செல்வார்கள். 

13.  பனிரெண்டாமாதி  ஏழாமாதி தொடர்பு அதிக ஸ்தீரி போகத்தால் உடலில் நோய், பணக் கஷ்டம்.

14.  ஏழாமாதியும், மூன்றாமாதியும் பரிவர்த்தனை பெற்றால்  வீண் வதந்திகள் செய்வது, காரியத்தில் தடை எற்படுவது, மோசமான நடத்தையும் இருக்கும்.

15.  ஏழாமாதி, இரண்டாமாதி, பத்தாமாதி தொடர்பு பாபர்கள் சேர்க்கை பெற்றால் அதிக பெண் போகம் ஏற்படும்.

16.  ஏழாமாதி, 3,6,10,11ம் ஆதிகளோடு தொடர்பு கொண்டால் திருமணத்திற்கு பிறகு அதிக தனலாபம் இருக்கும்.

17.  ஏழாமாதி லக்னத்தோடு தொடர்பு கொண்டால், களத்திரம் கை ஒங்கும்.  அடிமைதனமான வாழ்க்கை ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்படும்.

18.  ஏழாமாதி 2,5ம் ஆதியோடு தொடர்பு கொண்டால் தீர்க்கமான முடிவு எடுக்கும் தன்மையும், எதிலும் உண்மையான எண்ணமும், பிறருக்கு உதவி செய்யும் குணமும் இருக்கும். 

19.  ஏழாமாதி பாபகிரஹத்தோடு சேர்க்கை பெற்று  செவ்வாயின் பார்வையில் இருந்து இரண்டில் இருந்தால் அடுத்தவர் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ளும் தன்மை வரும்.

20.  ஏழாம் அதிபதி பாவர் சேர்க்கை பெற்று 2, 7 ல் நின்று  சுபர் பார்வை பெறாமல் இருந்து பதினோராம் இடமும் வலுத்து இருந்தால் இருதார யோகம் கண்டிப்பாக உண்டு.

21.  மகர , கடக,  சிம்ம லக்னகாரர்களுக்கு  2,7ம் அதிபதிகள்  பகைவர்கள்.  அவர்கள் எந்த வீட்டிலும் சேர்ந்து இரூக்க கூடாது. அப்படி இருந்தால் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது.

22.   சுக்ரன், குரு, செவ்வாய் சேர்ந்தோ, தனித்து  சுபர் பார்வை இல்லாமல் இருந்தால் அந்த பாவ காரகத்துவம் சார்ந்த விஷயங்களினால் திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படலாம்.
23. செவ்வாய்க்கு ஏழில் குரு அல்லது சுக்ரன் தனித்து நிற்பது தம்பதிகளுக்குள் மன வேற்றுமையை ஏற்படுத்தும்.

24.  ஆண் ஜாதகத்தில் ஏழில் சுக்ரன் களத்திர தோஷம்.  பெண் ஜாதகத்தில் ஏழில் குரு இருந்தால் களத்திர தோஷம்.  அதேபோல் பெண் ஜாதகத்தில் சுக்ரன் ஏழில் இருந்தால் அவள் கணவன் வீட்டை சார்ந்த பெண் வழியில் பிரச்சனை ஏற்படும்.


25.  ஏழாம் அதிபதி சுக்ரன் கூடி நிற்க லக்னாதிபதி ஏழில் நிற்க , இரண்டாம் அதிபதி உச்சம் பெற்று இவர்களை குரு பார்த்தால்  இவர்களுக்கு அமையும் துணை நல்ல புத்திசாலியாகவும், கணவனை தெய்வமாக மதிக்கும் குணமுடையவளாகவும்,  இருந்து குடும்பத்தின் பெருமையை உயர்த்துவாள்.