Thursday, 16 March 2017

பத்தாம் பாவம் சம்பந்தப்பட்ட முக்யமான கிரஹ சேர்க்கைகளும் அதன் பலன்களும்.

எபோதுமே  ஒரு விதியை பின்பற்றுகிறபோது அந்த விதி அந்த பாவம், அதன் அதிபதி அதனை பார்க்கும் கிரஹம் ஆகியோருக்கு பொருந்துகிறதா என பார்க்கவேண்டும்.  ஒரு பாவத்தின் வலுவை நிர்ணயம் செய்யும் போது, அந்த பாவத்தில் ஒரு நீச்ச கிரஹம் இருக்க கூடாது. அந்த பாவம் வலு இழக்கும். அதேபோல் அந்த பாவதிபதி ஒரு நீச்ச கிரஹத்தோடு சேரக்கூடாது. அந்த கிரஹம் வலு இழக்கும்.  ஒரு நீச்ச கிரஹம் பார்க்ககூடாது. பலனை தருவதில் சிக்கல் இருக்கும். பத்தாம் பாவத்தில் ராகு இருந்து அது நீர் ராசியாக இருந்தால் அந்நிய தேசத்தில் வேலை வாய்ப்புகளும்,  தொழில் வாய்ப்புகளும் வரும். 
 1.  இரண்டாமதிபன் ஐந்தாமதிபன் சேர்ந்து பத்தில் இருந்தால் பொருளாதார உயர்வும், எல்லா காரியங்களிலும் வெற்றியும் இருக்கும். பிள்ளைகளால் தன வரவு இருக்கும். ரேஸ், லாட்டரி, பங்கு வர்த்தகம் , அதாவது யூக வருமானங்கள் அதிகம் இருக்கும்.  

 2.  இரண்டாமதிபன் ஒன்பதாமதிபன் சேர்ந்து பத்தில் இருந்தால் செய் தொழிலில் அதிர்ஷ்டமும், கூட்டு வியாபாரத்தில் நல்ல லாபமும் இருக்கும்.  ஒன்பதாம் இடம் இரண்டுக்கு எட்டாமிடம் ஆக வருவதால் குடும்ப உறுப்பினர்களின் வற்புற்த்தலுக்கு ஏற்ப ஜாதகர் தன் தந்தையில் சொத்தை பிரித்து வாங்கிச் செல்வார்.  தந்தை மகன் பிரிவு வரவும் வாய்ப்பு உண்டு.

 3.  பனிரெண்டாமதிபனும், பத்தாமதிபனும் பரிவர்த்தனையானால் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகளும் தோல்விகளும், தடை, தடங்கல்களும், கஷ்டங்களும் ஏற்படும்.  அடிக்கடி வேலை மாறுதல் உண்டாகும்.  அடிக்கடி தொழிலை மாற்ற வேண்டிய சூழல் வரும்.  

 4.  பத்தாமதிபனும் பதினோராமதிபனும் பரிவர்த்தனையானால் நல்ல நண்பர்கள் தொடர்பும், தொழிலில் லாபமும், நல்ல உயர்வும், முன்னேற்றமும் ஏற்படும்.  அதேசமயம் மூத்த சகோதரரால் சில நஷ்டங்களும் ஏற்படும். சில பேருக்கு லக்னாதிபதி பலமில்லாமல் இருந்தால் , கூட்டுத் தொழ்லில்  நண்பனே லாபத்தை எடுத்துச் செல்வான்.  இந்த பலன் கடக லக்னத்தாருக்கு கண்டிப்பாக இருக்கும்.  சில ஜாதகர் தன் சுகத்திற்காக தன் தாயை பிரிவார்கள்.

5.  லக்னாதிபதியும், பத்தாமதிபதியும் பரிவர்த்தனை யானால் உத்யோகத்தில் வெற்றியும், நல்ல தொழிலும் அதில் வெற்றியும் இருக்கும்.  மேஷ லக்னத்திற்கு இந்த பலன் சரியாக வராது.

6.  பத்தாமதிபதி ஏழாமாதி பரிவர்த்தனை ஆனால் கூட்டு தொழிலில் வெற்றியும், நல்ல உதவிகளும் கிடைக்கும். குடும்பத்தில் அன்யோன்யம் இருக்கும்.  சில பேருக்கு மாமனார் தொழிலை ஏற்று நடத்தக் கூடிய வாய்ப்பு வரும். வீட்டோடு மாப்பிள்ளையாக போகும் யோகம் வரும். மிதுன லக்னம்,  தனுசு லக்னத்திற்கு இந்த பலன் வராது.

7.  எட்டாமாதி பத்தாமாதி பத்தில் இருந்தால் செய் தொழில் சரியாக வராது.  சில சமயம் தன் தொழில் விருத்திக்காக, முறை தவறிய வழிகளில் கடன் பெற்று சிறை ஜீவனம் ஏற்படும்.  இந்த அமைப்பில் ராகு சம்பந்தப்பட்டால், தொழில் போட்டியால், சில சமயம்  பங்கு தாரரின் இறப்பிற்க்கு ஜாதகரே காரணமாக இருப்பார்.

8.  இரண்டாமாதி, ஏழாமாதி பத்தாமாதி சேர்க்கை பத்தில் இருந்தால் தொழிலில் நல்ல லாபம் இருக்கும்.  துணையால் நல்ல வருமானம் ஏற்படும்.  ஆனால் இது சில லக்னங்களுக்கு மாரக ஸ்தானமாக இருப்பதால் (2,7)  அதன் தசா புத்திகளில்  பத்தில் ஏதேனும் கிரஹம் கெட்டு இருந்து கோசாரத்தில் தொடர்பு ஏற்படும் போது தொழில் நஷ்டம் காரணமாக தற்கொலை செய்யும் மன நிலை வரும். இந்த அமைப்பில் சந்திரன் கெட்டு கேதுவோடோ, மாந்தியோடோ சேரக்கூடாது.

9.  பத்தாமாதியும் ஆறாமாதியும் பரிவர்த்தனையானால் தந்தைக்கு இரண்டு குடும்பங்கள் இருக்கும்.  சொத்து பிரச்சனைகள் அதிகம் வரும். 

10. லக்னாதிபதி, நான்காமாதி, பத்தாமாதி தொடர்பு இருந்தால் ஜாதகனுக்கு பிற பெண்கள் சேர்க்கை இருக்கும். சந்தோஷம் இருக்கும். 

11.   பத்தாமாதி, லக்னாதிபதி, ஐந்தாமாதி, ஏழாமாதி பரிவர்த்தனை வாழ்க்கையில் அதிக முன்னேற்றம் , ஆதிக்கம், புகழ் ஆகியவை கிடைக்கும்.  மனைவி வழியில் சொத்துக்கள் ஜாதகரின் பிள்ளைகளுக்கு வந்து  சேரும் . 

12.  ஐந்தாமாதி, ஒன்பதாமாதி பத்தாமதியோடு தொடர்பு கொண்டால் அரசனுக்கு சமமான வாழ்வும், நல்ல புகழும் ஏற்படும்.  அடிக்கடி யாத்திரைகள் செய்வான்.  புண்ணிய சேத்திரங்களை தரிசனம் பண்ணும் பாக்கியம், புண்ணிய நதிகளில் நீராடும் பாக்கியம் ஆகியவை ஏற்படும்.

13.  பத்தாமாதி, பதினோராமாதி மற்றும் ஒன்பதாமதியோடு தொடர்பு கொண்டால் அரசு மரியாதைகளும், எல்லா காரியங்களிலும் ஒழுக்கமும் நேர்மையும் இருக்கும்.  நல்ல புகழ் கிடைக்கும்.   



No comments:

Post a Comment