ஐந்தாம் பாவம்
சம்பந்தப்பட்ட முக்கியமான விதிகள்
1. 5ம் அதிபதியும் லக்னாபதியும் பரிவர்த்தனையானால்
மிகவும் அறிவு சார்ந்த புத்திசாலியாக இருப்பான்.
புத்திசாலிதனத்தால் எல்லோரையும் ஜெயிக்க வல்லவன்.
2. ஐந்தாம் அதிபதியும் மூன்றாம் அதிபதியும் பரிவர்த்தனையானால்
வாழ்க்கையில் பல ஏற்ற தாவுகள் இருக்கும். ஆனால்
3ம் அதிபதி 5 ல் இருந்தால் பல வழிகளில் பணம் சம்பாதிக்கும் திறமை இருக்கும். ஆனால் மனைவி இவனை மதிக்கமாட்டாள்.
3. 4ம் அதிபதியும் 5ம் அதிபதியும் தொடர்பு கொண்டால்
சந்தோஷம், கடவுள் நம்பிக்கை, சுயமாக சம்பாதிக்கும் திறமை, உயர்ந்த லட்சியங்கள் உடையவனாக
இருப்பான். குலம் தழைக்கும். ரியல் எஸ்டேட்
மூலம் நல்ல வருமானம் வரும். நிறைய வெகுமதிகள்,
பாராட்டுகள் கிடைக்கும்.
4. 5ம் அதிபதியும் 2ம் அதிபதியும் பரிவர்த்தனையானால்,
நல்ல பணவசதியும், மகிழ்ச்சியும், நல்ல போக பாக்யமும் இருக்கும். வாழ்க்கையில் எல்லா சந்தோஷங்களையும் எப்படி அனுபவிக்க
வேண்டும் என்ற விஷயத்தில் புத்தியை செலுத்துகிறவன். சூதாட்டத்தில் விருப்பமுடையவன்.
5. லக்னாதிபதியும் இரண்டாம் அதிபதியும் சேர்ந்து
5ல் நின்றால் ஜாதகர் குடும்பத்தாரோடு நல்ல உறவு இருக்காது. அவர்களே இவனை வெறுப்பார்கள். பிறருக்கு உதவும் குணம் இருக்கும் அதே நேரம் கல்
நெஞ்சக்காரனாகவும் இருப்பான்.
6. 7ம் அதிபதி 5ல் நின்றால், திருமண வாழ்க்கையில்
பிரச்சனையும், இவர்களோடு கொடிய பாபர்கள் சம்பந்தப்பட்டால், பிறக்கும் குழந்தைக்கு சில
சமயம் குறை இருக்கும். இவர்கள் இருவரும் பரிவர்த்தனை
ஆனால் சந்ததிகள் மூலம் குடும்பம் உயரும்.
7. 7ம் அதிபதி, 12ம் அதிபதி இருவரும் சேர்ந்து 5ல் நின்றால் சஞ்சல புத்தியும்,
வரும் களத்திரத்தால் குடும்ப்பத்தில் பிரச்சனையும் , இவர்களோடு கேது, ராகு சேர்ந்தால்
மனப்பிரமை ஏற்பட வாய்ப்புண்டு.
8. 10 அதிபதியும், 5ம் அதிபதியும் பரிவர்த்தனை ,
சேர்க்கை இருந்தால் நல்ல ஆலோசனை கூறும் உத்யோகத்தில் இருப்பபர். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆனால் சில சமயம் ஜாதகருக்கு கெளரவ பங்கம் ஏற்படும்.
9. 7,8ம் அதிபதி அல்லது 3,12ம் அதிபதி 5ல் நின்றால் பிறக்கும் சந்ததிக்கு தோஷம் ஏற்படும். மனக்கவலை அதிகம் இருக்கும்.
10. 8ம் அதிபதியும்,
5ம் அதிபதியும் தொடர்பு கொண்டால் அதிக செக்ஸ் நாட்டம் இருக்கும். தீய வழிகளில் புத்தியை செலுத்துவான். மறைமுகமான
காரியங்களில் ஈடுபடுவான்.
11. 5ம் அதிபதியும் 11ம் அதிபதியும் தொடர்பு கொண்டால்
நண்பர்களால் உதவியும், அவர்களால் மகிழ்ச்சியும் ஏற்படும். சில சமயம் நண்பர்களால் தொழிலில் நஷடமும் ஏற்படும்.
12. 5ம் அதிபதியும், 6ம் அதிபதியும் சம்பந்தப்பட்டால்,
நீடித்த நட்பு இருக்கும். சொத்துக்கள் நிலையாக
இருக்காது. பிறரை வேலை வாங்குவதில் சாமர்த்தியசாலி.
13. 5ம் அதிபதியும், 9ம் அதிபதியும் சம்பந்தப்பட்டால்,
நல்ல அதிர்ஷடமும், நல்ல கெளவரமும் ஏற்படும்.
இவர்களோடு 11ம் அதிபனும் தொடர்பு கொண்டால் நல்ல செல்வ சேர்க்கை இருக்கும்.
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-
No comments:
Post a Comment