Monday, 6 March 2017

நான்காம் பாவம் சம்பந்தப்பட்ட முக்யமான விதிகள்

1.  4, 5ம் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றால் நல்ல சுகமும் , அரசியிலில் ஆதாயமும் நல்ல அதிகாரம் மிக்க பதவியும் கிடைக்கும். பிள்ளைகளால் முன்னேற்றமும் இருக்கும்.

2.   4, 9, ம் அதிபதிகள் சேர்க்கை இருந்தாலும், 9ன் அதிபதி நாலில் இருந்தாலும் நல்ல ஒழுக்கமும், அமைதியான குணமும், அதே சமயம் எடுத்த காரியங்களில் துணிச்சலும், சந்தோஷம், புகழ் ஏற்படும். தந்தையின் தொழிலை நிர்வாகம் செய்யும் திறனும் ஏற்படும்.

3.  6,9க்குடையவன் சேர்ந்து 4ல் நின்றால், சொத்து விஷயமாய் சண்டை, சச்சரவுகள் ஏற்படும். தந்தையின் சொந்தங்கள் சில சமயம் ஜாதகரை கோர்ட்டுக்கு இழுப்பார்கள்.

4.  4, 6ம் ஆதிகள் பரிவர்த்தனை பெற்றால் ஆரோக்ய குறைவு, வாதம்,  சொத்துக்கள் இழப்பு, கல்வியில் குறைபாடு, சில சமயம் அடுத்தவர் பொருளை அபகரிக்கும் குணமும் ஏற்படும்.

5.  2ம் அதிபனும், 4ம் அதிபனும் தொடர்பு கொண்டாலோ, 4ல் இருந்தாலோ, நல்ல செல்வ வளம், நல்ல வாக்கு திறன், விவசாயத்தில் வளர்ச்சி, நல்ல கெளவரவம் ஆகியவை ஏற்படும். தாயின் சொத்துக்கள் மூலமாக ஜாதகருக்கு வருமானம் வரும். தாய் வழி உறவு ஆதாயம் தரும்.

6.  லக்னாதிபதி, 4ம் அதிபதி பரிவர்த்தனை பெற்றால் , நல்ல பணவசதியும், கடவுள் நம்பிக்கையும், , நல்ல வாகன யோகமும், அரசாங்கத்தால் ஆதரவும், நல்ல வீடு வசதியும் ஏற்படும்.

7.  6,8,12 அதிபதிகள் 4ல் இருந்தால் , எதிலும் அவமரியாதை, கல்வியில் தடை, நிலம், வீடு வகையில் வம்பு, வழக்குகள்,  வாகனத்தால் நஷ்டம், சொந்த பந்த்ங்களுடன் விரோதம் ஏற்படும்.

8.  4ம் அதிபதியும், 11ம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றால்  நல்ல செல்வ வளமும், நல்ல ஆதிக்க திறனும், அரசாங்க ஆதரவும் இருக்கும்.  பாபர்கள் சம்பந்தம் பெற்றால் வில்லங்க சொத்தை வாங்கி நஷ்டப்பட நேரிடும். 

9.  2, 11ம் அதிபதிகள் 4ல் சேர்க்கை பெற்றால்,  நல்ல வருமானத்தில் வேலையும், அதனால் நல்ல சுகமும் ஏற்படும்.  தன் லாபாதிபதிகள் சுகஸ்தானத்தில் இருப்பது நல்ல சுகத்தை தரும்.

10.  4ம் அதிபதியும் 7ம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றால் நணபர்கள் மூலமாகவும், வரும் களத்திரத்தின் மூலமாகவும் நல்ல உதவிகளும் , அவர்களால் சந்தோஷமும் ஏற்படும். 

11.  4ம் அதிபதியும், 12ம் அதிபதியும் தொடர்பு கொண்டால், அதிக குடும்ப செலவுகளும், அதனால் மனக் கவலையும், பூமி, வீடு, சொத்து, இவைகளை தன் கடனுக்காக இழப்பான்.

12.  2,7,10 அதிபதிகள் 4ல் இருந்தால் அந்நிய பெண்களால் சுகம் கிடைக்கும்.  

13.  4ல், 2,7,12ம் ஆதிகள் தொடர்பு,  பரத்தையர் பெண்களுடன் தொடர்பு அதிகமாகும்.

14.  மூன்றாம் அதிபதியும் ஆறாமதிபதியும் சேர்க்கை பெற்று 4ல் இருந்தால் அதிக கோபமும், அதிக சஞ்சல புத்தியும்,  பிறரை துன்புறுத்தும் குணமும் இருக்கும்.

15.  லக்னாதிபதி , 8ம் அதிபதி சேர்ந்து 4ல் இருந்தால் அதிகமான துன்பங்களும், உறவுகளை துறந்து செல்லும் நிலைமையும் ஏற்படும்.

16.  4ம் அதிபதியோடு, 8ம் அதிபதியும் 10 அதிபதியும் சேர்க்கை பெற்றால் உண்மை, நம்பிக்கை அற்றவனாக எல்லோருக்கும் மறியாதை அற்றவனாக இருப்பான்.



-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-

No comments:

Post a Comment