லக்னாதிபதி சம்பந்தப்பட்ட
முக்கியமான விதிகள்
லக்னத்தில்
8, அல்லது 11ம் வீட்டின் அதிபதி இருந்தால் சுகமும் ஆரோக்யமும் குறையும்.
2ம் அதிபதி இருந்தால்
வருமானம் அதிகரிக்கும்.
10 அதிபதி இருந்தால்
தொழில் வாணிபத்தில் வெற்றி உண்டாகும். சுய தொழில் அமையும். சினிமா, சங்கீதம் போன்ற
துறைகளில் ஈடுபடுவார்கள். அந்தஸ்த்து, திறமை,
பாராட்டு, இண்டஸ்ட்ரீஸ் மூலம் நல்ல வருமானம், அரசாங்கத்தால் இலாபம் கிடைக்கும். ஆனால்
சிறு வயதில் கஷ்டமும், கடைசி காலத்தில் சுகமும் ஏற்படும்.
7ம் அதிபதி இருந்தால்
சந்தோஷமான தாம்பத்யம் இருக்கும். அரசால் ஆதாயம் , சுகம் கிடைக்கும்.
12ம் அதிபதி
இருந்தால் அதிக செலவுகள் இருக்கும். பலவீனமான
உடல் இருக்கும். கபம் சம்பந்தமான நோய் இருக்கும்.
3ம் அதிபதியோ,
6ம் அதிபதியோ இருந்தால் பொதுவாக நல்ல பலன்கள்
எல்லாம் கெடும்.
லக்னாதிபதியும்,
12ம் அதிபதியும் பரிவர்த்தனை ஆனால் காரியங்கள் நஷ்டமாகும்.
லக்னாதிபதி,
6,8,12 ல் இருந்தால் வறுமை, ஒழுக்கமின்மை, வாழ்க்கை, தொழில் நிலையில் கஷ்டமும் மந்தமான
நிலையும் இருக்கும்.
3ம் அதிபதி,
10 அதிபதி லக்னத்தில் இருந்தால் பொறுமை, அதிக உழைப்பால் தன் லட்சியத்தை அடைதல், தாராளமான
மனது போன்றவை இருக்கும்
லக்னாதிபதியும்
8ம் அதிபதியும் பரிவர்த்தனை அடைந்தால் ஆயுளுக்கு பங்கம் ஏற்படும்.
11ம் அதிபதி
பலமாக லக்னத்தில் இருந்தால் நல்ல பண வசதி உண்டு சிறந்த பேச்சாளனாக் இருப்பன்.
4ம் அதிபதி லக்னத்தில்
இருந்தால் முன்னோர் சொத்து அழிவதற்க்கு வாய்ப்புண்டு.
3ம் அதிபதிமட்டும்
தனியாக பலமாக இருந்தால் சொந்த உழைப்பால் சம்பாத்யம், சந்தோஷம், பிறருக்கு உதவும் குணம், சேவை செய்யும் குணம், முன்கோபம் இருக்கும்.
லக்னம் ஏழாமாதி
பரிவர்த்தனை பெற்றால் அந்தஸ்து செல்வாக்கு, ஆதிக்கம், நல்ல தாம்பத்யம், பொருளாதார உயர்வு
உண்டு.
6ம் ஆதி அல்லது 7ம் ஆதி இருந்தால் நல்ல சம்பாத்தியம்
உண்டு. நோயாளியின் மனைவி, தாம்பத்ய சுகம் குறைவு.
6ம் ஆதி பலமாக
இருந்தால் சத்ரு நாசமாவார்கள்.
4,9க்குடையவர்கள்
சேர்ந்து இருந்தால் அதிர்ஷடமானவன், வாகன யோகம் உண்டு.
12ம் ஆதியும்
10 ஆதியும் சேர்ந்து இருந்தால் புத்ர தோஷம் எற்படும்.
5ம் ஆதியும்
லக்னாதிபதியும் பரிவர்த்தனை ஆனால் ஜாதகரின் குழந்தை மதிப்பும் மரியாதையும் தருவான். அவன் சாதனையாளனாக இருப்பான். அவன் மூலம் சுய கெளவரவம் எல்லம் ஜாதகனுக்கு கிடைக்கும்.
லக்னாதிபதி
9ம் அதிபதி பரிவர்த்தனை ஆனால் வெளி நாட்டு வாசம், நல்ல தன் வசதி எல்லம் ஏற்படும். அரசால்
அநூகூலம் ஏற்படும்.
லக்னாத்பதியும்
இரண்டாமாதியும் பரிவர்த்தனை ஆனால் நல்ல பண வசதியும், மரியாதை, மதிப்பு, நற்பண்புகள்
உண்டு. எல்லோருக்கும் உதவும் குணம் உண்டு.
5, 9 ம் ஆதிகள்
இரண்டும் சேர்ந்து லக்னத்தில் நின்றால் மிகச் சிறந்த பலன்கள் ஏற்படும் பெயர், புகழ்,
பணவசதி ஆகியவை உண்டு.
ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்.
**********************************************
No comments:
Post a Comment