Thursday, 16 March 2017

பனிரெண்டாம் பாவம் சம்பந்தப்பட்ட முக்யமான விதிகள்

1. லக்னாதிபதி பனிரெண்டில் இருந்தால் கெளவரத்திற்கு பங்கம் ஏற்படும்.

2. பத்தாமாதி பனிரெண்டில் இருந்தால் ஸ்திரமான தொழில் இருக்காது. வியாபாரம் நல்லது. உத்யோகத்தில் தொல்லைகள் இருக்கும்.  கூட்டாளிகளே எதிரிகள் ஆவார்கள்.

3. பனிரெண்டாமாதி அங்கேயே இருந்தால் கடைசிகால அமைதியான வாழிக்கை. முக்கியமாக இங்கு சாத்வீகமான கிரஹங்கள் இருந்தால் நல்லது.  உஷ்ண கிரஹங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். உஷ்ண கிரஹங்கள் இருந்தால் அமைதியான தூக்கம் இருக்காது.

4. ஏழாமாதி பனிரெண்டில் இருந்தால் அதிக செலவாளி, கூட்டு வியாபரத்தில் நஷ்டம். நோயாளியான மனைவி, பிரிவு, அதிக பணத்தாசை,  நண்பர்களால் அதிக நஷடத்தை ஏற்பார்கள். சிலர் வெளி நாட்டில் அதிக பிரச்சனையை சந்திப்பார்கள்.

5. எட்டாமாதி பனிரெண்டில் இருந்தால் தீர்க்காயுள், கடன் வசூலாகும், உயில், சொத்து, இன்சூரன்ஸ் மூலம் திடீர் தன வரவு. பலவிதமான நோய்கள், விஷ ஜந்துக்களால் தொல்லை முதலியவை ஏற்படும். இந்த பாவாதிபதியின் தசையில் ஒரு ஜாதகர் தன் கடனை அடைப்பதற்கு முயற்ச்சி எடுத்தால் அது சாத்யமாகும்.

6.  ஒன்பதாமதிபதி, பதினோராமதிபதி, பனிரெண்டில் இருந்தால் சரியான வருமானம் இருக்காது. தகப்பனாரின் சகோதரர்களால் நஷ்டங்கள் ஏற்படலாம். 

7.  இரண்டாமதி பனிரெண்டாமாதி பரிவர்த்தனை தரித்தர யோகம், வீண் செலவுகள். கண் நோய்கள் ஏற்படலாம்.

8.  மூன்றாமாதி பனிரெண்டாமாதி பரிவர்த்தனை வாக்கில் நாணயம் இருக்காது. பயணத்தால் வீண் செலவு,  இளைய சகோதரனால் வீண் விரயம், குழந்தைகளால் நிம்மதி இல்லாமை, பெண்ணால் வாழ்க்கையில் உயர்வு, ஆனால் கஷ்டங்களும் ஏற்படும்.

 9.  மூன்றாமாதி  பத்தாமாதி பனிரெண்டில் இருந்தால் எதையும் தப்பாக நினைக்கும் எண்ணம்,  உடன் பிறப்புகளால் வம்பு வழக்கு, கோர்ட் பிரச்சனை, எற்படும். முக்யமாக தம்பியின் திருமணத்திற்கு பிறகு குடும்பத்தில் பிரச்சனை ஏற்படலாம்.   வெளிநாடு செல்லும் யோகம் வரும்.

10.  ஐந்தாமாதி, பனிரெண்டாமாதி பரிவர்த்தனை குடும்ப தகராறு, குழந்தைகளால் பிரச்சனை அவர்களால் வழக்கு பிரச்சனை ஏற்படும். போட்டி, பந்தயங்களில் தோல்வி ஏற்படும்.  சிலருக்கு பிரசவத்தில் பிரச்சனை ஏற்படும்.

11. ஒன்பதாமாதி பனிரெண்டாமாதி பரிவர்த்தனை வாழ்க்கையில் அதிக எற்ற தாழ்வுகள், சரிவுகள், கஷடங்கள் இருக்கும். இங்கே சுக்ரன் அமர்ந்த சில ஜாதகரின் தந்தைக்கு இரண்டு குடும்ப்பங்கள் இருக்கலாம். அல்லது இரண்டு மனைவிகள் அமைந்திருக்க வாய்ப்புண்டு.

12.  நான்காமாதி, பனிரெண்டாமாதி தொடர்பு பரிவர்த்தனை, வண்டி வாகனங்களால் தொல்லை, வீட்டை பராமரிப்பதில் அதிக செலவு,  தாயுடன் சண்டை, ஏற்படும். சிலருக்கு மனைவி வழி உறவுகளால் ஆதாயம் அடையவும் வாய்ப்புண்டு.

13. ஆறாமாதி பனிரெண்டாமாதி தொடர்பு, அதிக நோய், பிற பெண்களின் மீது ஆசை எறபடும்.

இது விரய பாவமாக இருந்தாலும்,   இங்கு இருக்கும் கிரஹங்களால் ஒரு ஜாதகரின் இறப்பிற்கு பின் அவரின் புகழை பார்க்கலாம்.  இங்கு பலம் பெறாத உஷ்ண கிரஹங்கள் இருந்தால் அதாவது சூரியன், செவ்வாய்,புதன், ராகு, ராகுவுடன் சேர்ந்த கிரஹங்கள் இருந்தால் (குருவை தவிர) அவரின் இறப்பிற்கு பின் அவரை பற்றி அவ்வளவு நல்ல பெயர் இருப்பது கடினம்.  ஆனால், சந்திரன்,  குரு, சுக்ரன் போன்ற கிரஹங்கள் இருந்தால் அவரின் புகழ் நிலைக்கும்.   குரு சனி, குரு ராகு இவர்கள் சேர்ந்து இருந்தால் அதுவும் அது நீர் ராசியாக இருந்தால் அவரின் பூத உடலுக்கு பின் ஆயிரம் பேர் வருவார்கள்.   குரு கேது, கேது, சனி கேது  சேர்க்கை இருப்பின் அவர் இந்த ஜன்மத்தின் கர்ம வினைகளை தீர்த்தவராக இருப்பார்.  அதாவது அவரின் கர்ம வினை தொடர்ச்சி இருக்காது.  அதாவது மறு பிறப்பை அவர் எடுக்க வேண்டிய நிலை வராது. 

      

No comments:

Post a Comment