பதினோராம்
பாவம் சம்பந்தப்பட்ட முக்யமான விதிகள்
1. பதினோராமதிபன் அந்த பாவத்திலேயே இருப்பது நல்ல
அறிவும், நல்ல பேச்சு திறமையும் இருக்கும்.
இவரோடு குருவும் புதனும் பலமாக இங்கு நின்றால் Phd. போன்ற உயர் படிப்புகள் சித்தியாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றமும் பேரும் புகழும் உண்டாகும். ஆனால் குரு, புதன் லக்ன
பாதகாதிபதியாகவோ, மாரகாதிபதியாகவோ வந்து இங்கு
பலம் பெற்றால் தசா புத்திகளில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மாரகத்துக்கு ஒப்பான கணடங்களும் ஏற்படும்.
2. லக்னாதிபதி பதினோராமாதி தொடர்பு வேதாந்தியாகவும்,
அதில் நிம்மதியும் அடுத்தவர்களுக்கு விட்டுக்
கொடுக்கும் குணமும் இருக்கும். கும்ப லக்னக்காரர்களுக்கு
இந்த அமைப்பு சரியாக இருக்கும். இந்த அமைப்பில்
சனியானவர் விரயாதிபதியாகவும் வருவதால் அவரின் மூல திரிகோண ஆதிபத்யம் பலம் பெற்று இந்த
அமைப்பை கொண்டு வரும். சிலர் குடும்பத்தை விட்டு
தனியான வாழ்க்கை வாழ ஆசை படுவார்கள். மூத்த
சகோதரர்களால் சிலர் ஆதாயம் பெறுவார்கள்.
3. இரண்டாமாதி பதினோராமாதி தொடர்பு நல்ல தனபிராப்தியும்,
நல்ல வருமானமும் இருக்கும். பரிவர்த்தனை சிறப்பு.
நல்ல செல்வ செழிப்பை கொடுக்கும். மீன
லக்னத்திற்க்கு இந்த பலனை எதிர்பார்க்க முடியாது.
4. ஏழாமாதியும்,
பதினோராமாதியும் தொடர்பு கொண்டால் நிறைய வெகுமதிகள் கிடைக்கும். பரிவர்த்தனை ஆனால்
கூட்டு தொழிலில் பெரும் லாபம் கிடைக்கும். மனைவி வழியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சிலருக்கு திருமணத்திற்கு நல்ல முன்னேர்றம் இருக்கும்.
5. ஆறாமாதியும் பதினோராமாதியும் தொடர்பு , நண்பர்
பகை, எதிலும் தடை, பொருளாதாரத்தில் சரிவு, நோயும் இருக்கும். இந்த அமைப்பில் ஆறாமாதி
இங்கு உச்சம் பெறக் கூடாது. வசதிக்காக அதிக
கடன் எற்பட்டு அதிக கஷ்டத்தை கொடுக்கும். வரும்
வருமானம் வியாதிக்காக விரயமாகும்.
6. ஒன்பதாம் அதிபதியும் பதினோராமாதியும் பரிவர்த்தனை
ஆனால் அரசங்கத்தால் லாபமும், பொருளாதாரத்தில் வெற்றியும், சந்தோஷமான குடும்பமும் அமையும்.
சிலர் அரசில் உயர் பதவியில் அமரும் பாக்யம் கிடைக்கும். அரசாங்கத்தில் கெளவரமும் மதிப்பும்
மரியாதையும் உண்டாகும்.
7. பத்தாமாதியும்
பதினோராமாதியும் தொடர்பு கொண்டால் நல்ல நண்பர்கள், அதிக சம்பாத்தியம், அரசியிலில் வெற்றி,
பணக்காரர்களின் தொடர்பு ஏற்படும். செய் தொழிலில் நல்ல வெற்றி உண்டாகும். மேஷ லக்னத்திற்க்கு
இந்த பலன் பொருந்தாது.
8. ஒன்பதமாதி, பத்தாமாதி பதினோராமாதியும் தொடர்பு
கொண்டால் தொழிலில் நல்ல லாபமும், வேலையில் முன்னேற்றமும், நல்லவர்களின் நட்பும், பெரிய
பணக்காரர்களின் நட்பும் கிடைக்கும். சமூகத்தில் நல்ல மரியாதையும், மதிப்பும் கிடைக்கும்.
9. ஐந்தாமாதி, பத்தாமாதி , பதினோராமாதியும் தொடர்பு
கொண்டால் நல்ல உயர்ந்த படிப்பும், நல்ல குழந்தைகளும் உண்டாகும், உயர்ந்தவர்களின் நட்பும்
கிடைக்கும். குழந்தைகளால் குடும்பம் வளர்ச்சி அடையும். குழந்தைகளில் ஒருவர் வெளிநாட்டில் இருப்பதற்கு வாய்ப்புண்டு.
10. பனிரெண்டாமாதியும் பதினோராமாதியும் தொடர்பு கொண்டால்
தன் லாபத்தை தானே விரயம் செய்வான். சிற்றின்பத்தில்
அதிக நாட்டம் இருக்கும். உல்லாச பயணங்களுக்காக
அதிகம் செலவு செய்வார்கள்.
…………………..அன்புடன்
ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்.
No comments:
Post a Comment