இரண்டாம் பாவம்
சம்பந்தப்பட்ட முக்கியமான விதிகள்
7,8க் குடையவர்கள்
2ல் இருந்தால் பொருளாதர சிக்கல் ஏற்படும். பணமுடையும், அது சம்பந்தமான கஷ்டம் பிரச்சனை தோன்றும்.
2,11 அதிபதி
2ல் இருந்தால் பொருளாதாரம் உயரும். அதிக தனப்பிராப்தி
உண்டு.
லக்னாதிபதி
2ல் இருந்தால் தனம் சேரும். தான் சம்பாதித்தை அனுபவிக்கும் யோகம் உண்டு.
செலவுகள் நல்ல
வழியில் அமையும். 7க்குடையவனும் 2ல் இருந்தாலும் தனவந்தனாக இருப்பான். செல்வ வளம்
நன்றாக இருக்கும்.
லக்னாதிபதியும்,
2ம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றால், கஷ்டமின்றி லாபம், பணம் கிடைக்கும். சுய சம்பாத்தியத்தின்
மூலமாகவும் பணம் வரும்.
4,5ம் அதிபதிகள்
2ல் இருந்தால் பணம் சேரும். நிதி நிலைமையில்
நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
4ம் அதிபதி,
2ம் அதிபதி, மற்றும் 9ம் அதிபதி, 2ம் அதிபதி பரிவர்த்தனை பெற்றால் பெண் தெய்வத்தின்
(லக்ஷ்மி) அநுக்கிரஹம் பெற்றவன். பணம், பரிசு,
அரசால் லாபம், ஆதிக்கம், அடக்க ஒடுக்கமான சந்ததிகள்
எல்லாம் அமையும்.
8ம் அதிபதி
2ல் இருந்தால் கடத்தல் , திருடு போன்ற வேலைகளில் ஈடுபடுவான்.
9ம் அதிபதி
2ல் இருந்தால் வெளி நாட்டு முயற்சி மூலம் அதிக தன சம்பாத்தியம் உண்டு. நல்ல படிப்பு
இருக்கும். குறிக்கோள்கள் நிறைவேறும்.
10 அதிபதி 2ல்
இருந்தால் தொழில், வாணிபம் மூலம் லாபமும், அரசால் ஆதாயமும் உண்டு. நல்ல படிப்பு இருக்கும்.
எல்லோருக்கும் உண்மையானவனாக இருக்கும்.
6ம்,2ம் ஆதி
பரிவர்த்தனை கூடாது. குடும்ப கடன் அதிகரிக்கும்.
5ம் அதிபதி
2ல் இருந்தால் போட்டி, பந்தயம், லாட்டரி மூலம் பணவசதி பெருகும்.
2,12ம் ஆதிகள்
பரிவர்த்தனை ஆக கூடாது. அதிக செலவுகள் ஆகி
தரித்திர நிலை வரும்.
4ம் அதிபதி
2ல் இருந்தால் வாகன யோகம் உண்டு. சுகபோக அனுபவம் இருக்கும். ஆனால் கெட்டவர் சகவாசம்
வரும்.
9, 10ம் அதிபதியும்
சேர்ந்து 2ல் இருந்தால் உயர்ந்த படிப்பு, பிறந்த இடத்திலேயே உயர் தொழில் அமைந்து செல்வந்தனாக
உயர்வார்கள்.
6ம் அதிபதி
2ல் இருந்தால் இவன் சொத்தை இவன் பிள்ளையே அபகரிப்பான்.
7ம் அதிபதி
2ல் இருந்தால் பல பெண்களுடன்போக சுகம் உண்டு.
2ம் அதிபதி
2ல் இருந்தால் அதிக செல்வ வளம் உண்டு.
3ம் அதிபதி
2ல் இருந்தால் பெண்கள் மூலம் லாபம், சோம்பேறி சந்தோஷம் இல்லாதவன், கீழ்தரமான காரியங்களில் ஈடுபடுவான்.
6ம் அதிபதி பலமாக
2ல் இருந்தால் தைரியசாலி, தன் கடமையில் அதிக ஊக்கமாக சம்பாதிப்பான். பல ஊர் இடங்களில் வாசம் செய்ய நேரிடும். நல்ல படிப்பு இருக்கும்.
11ம் ஆதி 2ல்
இருந்தால் தரும குணம் இருக்கும். மதப்பற்று
இருக்கும். புண்ணிய க்ஷேத்திரங்களுக்கு செல்வான்.
12ம் ஆதி 2ல்
இருந்தால் குழந்தைகளுக்கு சுகக் குறைவு, தாய் தகப்பனுக்கு கஷ்டம் இருக்கும். பிறருக்கு
அடிமையாக வேலை செய்வான்.
**************************************************
No comments:
Post a Comment