ஆறாம் பாவம்
சம்பந்தப்பட்ட முக்கியமான விதிகள்
1. மூன்றாம்
அதிபதியும் ஆறாமதிபதியும் சம்பந்தப்பட்டால் திடீர் பணவரவு வரும்.
2.  2ம் அதிபதியும் 6ம் அதிபதியும் சம்பந்தப்பட்டால்
பண நஷ்டமும், எதிரிகள் மூலம் விரயம் ஏற்படும். சுயமான முயற்ச்சியில் வெற்றி கிடைக்காது.  
3.  6ம் அதிபதியும் 7ம் அதிபதியும் தொடர்பு கொண்டால்
திருமண தடை, கணவன் அல்லது மனைவியின் உடல் நலம் கெடலாம்.  குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படும்.  தன்னை விட வசதி குறைவான இடத்தில் திருமணம் ஆகும்.  காதல் தோல்வி ஏற்படலாம்.  தன் கீழ் வேலை பார்பவர்களுடன் விரோதம் ஏற்படும்.   விவாரத்து ஏற்படலாம்.
4.  லக்னாதிபதி 10அதிபதி 6ம் அதிபதி தொடர்பு அரசு உத்யோகம்
கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால் பரிவர்த்தனை கூடாது. 
வேலை இழப்பு , பெற்றோர் பகை, கண் நோய் ஏற்பட வாய்ப்புண்டு.
5.  6ம் அதிபதியும் லக்னாதிபதியும் தொடர்பு கொண்டால்
கடன், வறுமை, இதோடு சுக்ரன் தொடர்பு கொண்டால் இரண்டு விவாகம் ஏற்படும்.  உடலில் அடிக்கடி நோய் ஏற்படும்.
6.  6ம் அதிபதியும் 10 அதிபதியும் தொடர்பு கொண்டால்
வேலைக்கு போவது மேல்.  அதனால் நன்மைகள் ஏற்படும்.  ஆனால் வியாபாரம் செய்தால் நஷ்டம் ஏற்படும்.  
7. 6ம் அதிபதியும்
11ம் அதிபதியும் தொடர்பு கொண்டால் பொருளாதார நிலையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும்  வியாபாரத்தில் லாபமும், குடும்பத்தில் அமைதியும்.
சுகமும் கிடைக்கும்.   ஆனால் 6ம் ஆதி இங்கு
உச்சமாக கூடாது.  அதிக கடன் ஏற்படும்.
8.  9மதிபன், 10ம் அதிபன் சேர்ந்து 6ல் நின்றால் அரசாங்க
உத்யோகத்தில் ஆதாயம் உண்டு.
9.  6ம் அதிபன், 7ம் அதிபனோடு அல்லது 8ம் அதிபனோடு பரிவர்த்தனை
ஆதல் கூடாது.  குடும்பம் அமைவது கஷ்டம்.   தனிமை வாழ்க்கை வாழ நேரிடும்.
10.  9ம் அதிபதி 6ம் அதிபதி பரிவர்த்தனை தன நாசம் ஏற்படும்.
11.  5ம் ஆதி, 10 ஆதி சேர்ந்து 6ல் நின்றால் நல்ல ஆரோக்யமும்,
 எதிலும் வெற்றியும், பெயர், புகழ், குடும்ப
மேன்மை, சொத்துக்கள் சேரும்.
12.  5ம் ஆதி, 6ம் ஆதி பரிவர்த்தனை கூடாது.  எதிரிகள் தொல்லை, மன சஞ்சலம், எதிலும் தடை, யாரோடும்
ஒத்துப் போகும் குணம் இல்லாமை எற்படும்.  தொடர்பு,
பிள்ளையே விரோதி. 
13.  4ம் அதிபனும், 6ம் அதிபனும் தொடர்பு கொண்டால், வாகனத்தால்
விபத்து ஏற்படும். சொத்துக்கள் விரயமாகும். 
14.  3ம் அதிபனும் 6ம் அதிபனும் தொடர்பு கொண்டால் சகோதரனுக்கு
நல்லதல்ல.
15.  லக்னாதிபதி 6ல் பலமானால் போட்டி, பந்தயங்களில் வெற்றி,
உயர்ந்த அந்தஸ்த்து, கிடைக்கும். 
16.  லக்ன பாதகாதிபதியும், 6ம் அதிபதியும் பரிவர்த்தனை
ஆனால் பிளாக் மேஜிக் என்ப்படும் மந்திர தந்திரங்களில் ஆர்வம் ஏற்படும்.
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-
No comments:
Post a Comment