Monday 6 March 2017

ஏழாம் பாவம் சம்பதப்பட்ட முக்யமான விதிகள்

 1.  ஏழாம் பாவத்தில் மூன்று, பனிரெண்டு அதிபதிகள் சேர்ந்து இருந்தால் விசுவாசுமுள்ள நன்னடத்தையுள்ள அழகிய மனைவி அமைவாள்.

 2.  ஆறு பனிரெண்டாமாதிகள் சேர்ந்து 7ல் இருந்தால் உடலில் நோய் இருக்கும்.  பெற்றோருக்கு பாரமாக இருக்க நேரிடும். வழக்குகள் ஜாதகனுக்கு சாதகமாக இருக்காது.  எதிலும் தோல்விதான்.

 3.  ஏழாம் பாவத்தில் லக்னாபதியும் பனிரெண்டாமாதியும் இருப்பது திருமண வாழ்க்கையை பாதிக்கும். 

 4.  ஏழாமாதியும் ஐந்தாமாதியும் பரிவர்த்தனை பெற்றாலோ, சேர்ந்தாலோ திருமண வாழ்க்கை பாதிக்கும்.  புத்ர தோஷம் ஏற்படும்.  மனைவியை பிரிய நேரிடும்.   மனைவி அடிக்கடி பிரிந்து தாய் வீடு செல்வாள். பிறரின் தலையீடு இருக்கும்.

 5.  ஏழாமாதியும் நாலாமதிபதியும் பரிவர்த்தனை , சேர்தல்,தொடர்பு கூடாது.  பரம்பரை சொத்து அழியும்.

 6.  ஏழாமாதியும் ஆறாமாதியும் தொடர்பு கொண்டால்  தைரியம், துணிச்சல் இருக்கும், ஆனால், மலட்டு தன்மை வரலாம்.  வரும் துணைக்கு நோய் இருக்கும். வரும். பரிவர்த்தனை பெற்றால் வெளி நாட்டு வாசம் ஏற்படும்.

 7.  5ம் அதிபதி 7ல் இருந்தால் தன் முதலாளிக்கு விசுவாசமாக இருப்பான். தைரியம் இருக்கும்.

 8.  ஏழாமாதி இரண்டாமாதி தொடர்பு அல்லது இரண்டாமிடம் தொடர்பு துணையால், தன விருத்தி ஏற்படும்.
 
 9.  லக்னாதிபதியும் ஏழாமாதியும் பரிவர்த்தனை அடைந்தால் அரசாங்கத்தால் உதவி, பண வரவு, பாராட்டு, பத்திரங்கள் கிடைக்கும், நல்ல லாபம் ஏற்படும் ஆனால் வாக்கில் நாணயம் இருக்காது.

10.  ஏழாமாதி எட்டாமாதி தொடர்பு ,  தோலில் வியாதி ஏற்படும்,  இருதாரம் ஏற்பட வாய்ப்புண்டு.

11.  ஏழாம் பாவத்தில் 2,4ம் ஆதிகள் சேர்க்கை பெற்றால் முன்னேற்றமும், பல துறைகளில் சாதிக்கும் திறமையும், பல மொழி படிக்கும் திறமையும் இருக்கும்.  ஆனால் பரம்பரை சொத்து அழியும்.

12.  9ம் ஆதியும், 7ம் ஆதியும் தொடர்பு கொண்டால் புகழும், சமுதாயத்தில் மதிப்பும் கிடைக்கும்.  இவர்கள் பரிவர்த்தனை ஆனால் திருமணத்திற்கு பிறகு  உயர்ந்த நிலைக்கு செல்வார்கள். 

13.  பனிரெண்டாமாதி  ஏழாமாதி தொடர்பு அதிக ஸ்தீரி போகத்தால் உடலில் நோய், பணக் கஷ்டம்.

14.  ஏழாமாதியும், மூன்றாமாதியும் பரிவர்த்தனை பெற்றால்  வீண் வதந்திகள் செய்வது, காரியத்தில் தடை எற்படுவது, மோசமான நடத்தையும் இருக்கும்.

15.  ஏழாமாதி, இரண்டாமாதி, பத்தாமாதி தொடர்பு பாபர்கள் சேர்க்கை பெற்றால் அதிக பெண் போகம் ஏற்படும்.

16.  ஏழாமாதி, 3,6,10,11ம் ஆதிகளோடு தொடர்பு கொண்டால் திருமணத்திற்கு பிறகு அதிக தனலாபம் இருக்கும்.

17.  ஏழாமாதி லக்னத்தோடு தொடர்பு கொண்டால், களத்திரம் கை ஒங்கும்.  அடிமைதனமான வாழ்க்கை ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்படும்.

18.  ஏழாமாதி 2,5ம் ஆதியோடு தொடர்பு கொண்டால் தீர்க்கமான முடிவு எடுக்கும் தன்மையும், எதிலும் உண்மையான எண்ணமும், பிறருக்கு உதவி செய்யும் குணமும் இருக்கும். 

19.  ஏழாமாதி பாபகிரஹத்தோடு சேர்க்கை பெற்று  செவ்வாயின் பார்வையில் இருந்து இரண்டில் இருந்தால் அடுத்தவர் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ளும் தன்மை வரும்.

20.  ஏழாம் அதிபதி பாவர் சேர்க்கை பெற்று 2, 7 ல் நின்று  சுபர் பார்வை பெறாமல் இருந்து பதினோராம் இடமும் வலுத்து இருந்தால் இருதார யோகம் கண்டிப்பாக உண்டு.

21.  மகர , கடக,  சிம்ம லக்னகாரர்களுக்கு  2,7ம் அதிபதிகள்  பகைவர்கள்.  அவர்கள் எந்த வீட்டிலும் சேர்ந்து இரூக்க கூடாது. அப்படி இருந்தால் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது.

22.   சுக்ரன், குரு, செவ்வாய் சேர்ந்தோ, தனித்து  சுபர் பார்வை இல்லாமல் இருந்தால் அந்த பாவ காரகத்துவம் சார்ந்த விஷயங்களினால் திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படலாம்.
23. செவ்வாய்க்கு ஏழில் குரு அல்லது சுக்ரன் தனித்து நிற்பது தம்பதிகளுக்குள் மன வேற்றுமையை ஏற்படுத்தும்.

24.  ஆண் ஜாதகத்தில் ஏழில் சுக்ரன் களத்திர தோஷம்.  பெண் ஜாதகத்தில் ஏழில் குரு இருந்தால் களத்திர தோஷம்.  அதேபோல் பெண் ஜாதகத்தில் சுக்ரன் ஏழில் இருந்தால் அவள் கணவன் வீட்டை சார்ந்த பெண் வழியில் பிரச்சனை ஏற்படும்.


25.  ஏழாம் அதிபதி சுக்ரன் கூடி நிற்க லக்னாதிபதி ஏழில் நிற்க , இரண்டாம் அதிபதி உச்சம் பெற்று இவர்களை குரு பார்த்தால்  இவர்களுக்கு அமையும் துணை நல்ல புத்திசாலியாகவும், கணவனை தெய்வமாக மதிக்கும் குணமுடையவளாகவும்,  இருந்து குடும்பத்தின் பெருமையை உயர்த்துவாள்.

No comments:

Post a Comment