சர்க்கரை நோய்
இனிப்பு: இந்த வார்த்தையே வயது வித்யாசம் இல்லாமல் எல்லோருக்கும் நாக்கில்
நீர் வரவழைக்கும். விளம்பரங்கள் கூட ஸ்வீட்
எடு கொண்டாடு என்பதாக இருக்கிறது. சிறு குழந்தைகளுக்கு
சாக்லட்ஸ் கொடுக்கும் போது தனக்கும் ஒன்று எடுதுத்துக் கொள்ளும் தன்மை. சர்க்கரை வியாதி
உள்ளவர்கள் கூட கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல்அந்த இனிப்பை ஒருவருக்கும்
தெரியாமல் சாப்பிடும் தன்மை. இப்படி எல்லோர் வாழ்விலும் அன்றாடம் கோலோச்சி கொண்டிருக்கும்
சர்க்கரை ஒருவருக்கு உடலில் அதிகமானால் வரும் நோய் சர்க்கரை நோய். இன்சுலின் குறைபாட்டால்
வரக்கூடியது இது ஒருவருக்கு சர்க்கரையால் மட்டுமே
வரக் கூடிய நோயா. அல்லது தற்காலத்தில் இன்சுலின்
குறைபாட்டை ஏற்படுத்தி எல்லோருக்கும் வரவழைக்கும் ஒரு உணவு சார்ந்த விஷயமா அல்லது பரம்பரை பரம்பரை வழியாக வரக்கூடியதா. உடலில் சர்க்கைரையின் அளவு கூடியிருப்பதை கணிக்கும்
ஒரு மருத்துவர் கூட கேட்கும் கேள்வியே உங்கள் குடும்பத்தில் அம்மா அப்பா அல்லது தாத்தாவிற்கு
இருக்கிறதா என்று கேட்கிறார். இப்படி இருக்கும்
இந்த நோய் இருப்பதை ஜாதக ரீதியாக கணிக்க முடியுமா என்ற கேள்விக்கு விடையே என்னுடைய
இந்த கட்டுரையாகும்.
வெறும் சர்க்கரை மட்டும் அல்லாமல், நேரம் தவறி உணவருந்துதல், அதாவது சாப்பிடும் வேளைக்குண்டான இடைவெளி அதிகமாக
இருத்தல், பட்டை தீட்டப்பட்ட அதாவது பாலீஷ்
செய்த பச்சரிசி அதிகமாக உண்பது , ஸ்வீட் பொட்டெடோ
எனப்படும் அதிக வெள்ளை உருளைக்கிழக்கை உணவில் சேர்த்துக் கொள்வது, அதிக வெள்ளை சர்க்கரை சேர்த்த இனிப்புகள் சாப்பிடுவது
. இவையெல்லாம் உடலில் இன்சுலின் சுரப்பியை
பாதித்து அதில் குறைபாட்டை ஏற்படுத்தி சர்க்கரை நோயை கொடுக்கும். இதில் அதிக இடைவெளி கொடுத்து உண்பது அதாவது நேரம்
தவறி உண்பது உடலில் வாயுவை ஏற்படுத்தும். இது
ஜாதகத்தில் குருவின் காரகத்துவம். அதேபோல்
சாதரண வெல்லம், நாட்டு சர்க்கரை, வெல்லப்பாகு இவைக்கும் குரு காரணமாக இருந்தாலும் அதை
நவீனமயமாக்கி வெள்ளை சர்க்கரை ஆக்கும் போது அது ஜாதகத்தில் சுக்ரனின் காரகமாக மாறும். இதில் இதை நீடித்து பரம்பரை வழியாக கொண்டுவருவது
சனியின் வேலையாகும். இந்த நோயை அதிகப்படுத்துவது
ராகுவின் வேலையாகும். இந்த நோயை கடுமையாக்கி
அதாவது ஒரு இடத்தில் தங்கவைத்து சுரப்பிகளின் செயல்பாட்டை குறைத்து உடலில் கிட்னியின்
செயல் பாட்டை வலுவிழக்க செய்வது கேதுவின் வேலையாகும்.
நமது உடலில், ஜெனடிக் கோட்
எனப்படும் விகிதாசாரம் ஒரு ஜாதகனின் தந்தையின் அளவு 24%, தாத்தாவினுடையது 32%, அவருடைய தந்தையினுடையது
16% அதற்கு முன் 8%,6%,4%,2% ஆக மொத்தம் ஏழு
தலை முறை ஜெனடிக் சார்ந்த அணுக்கள் சார்ந்த விஷயங்களும் ஜாதகனுடையது 8% ஆக மொத்தம் 100 சதவீகமாக இருக்கும். இதில் எந்த தலை முறையில் என்ன வியாதி இருந்ததோ,
அது அந்த விகிதாசாரத்தில் ஜாதகனின் உடலில் இருக்கும். அதை அதிகப்படுத்திக் கொள்ளாமல் இருப்பது ஜாதகனின்
கடமையாகும்.
ஜாதகத்தில் நோயை குறிக்கும்
பாவம் ஆறாம் பாவம், அதை தீவிரப்படுத்தி தீர்க்க
முடியாமல் சிறு நீரக பாதிப்பை ஏற்படுத்துவது எட்டாம் பாவமாகும். அதற்கு தீவர சிகிச்சை
எடுத்து கொள்வதையும் அல்லது மருத்துவமனையில் தங்கி டயாலிசிஸ் செய்து கொள்வதையும், அந்த
நோயால் கண்கள் பாதிக்கப்படுவதையும் பனிரெண்டாம் பாவமும் சொல்லும். இந்த ஆறாம் பாவமும் பனிரெண்டாம் பாவமும் மிக முக்யமாக ஒருவரின் நோயின்
தன்மையை துல்லியமாக குறி காட்டும். ஒரு ஜாதகத்தில்
அயன சயன சுகஸ்தானமான பனிரெண்டாம் பாவம் ஒருவரின் தூக்கத்தை சொல்லும். ஒருவருக்கு இந்த
பாவம் கெட்டு தூக்கம் சரிவர இல்லையென்றால் உடலில் முதலில் பாதிப்பது
கல்லீரல் மற்றும் கணையமும் பாதிக்கும் . இவை
கண்களை சோர்வாக்கி பார்வையில் குறைபாட்டை ஏற்படுத்தி விடும்.
இதை ஒரு மருத்துவர் இப்படி விளக்குகிறார்.:
Your body converts the food you eat into
glucose that your cells use for energy. But your cells need insulin to bring
the glucose in. (Reproductive system by Venus)
If your body doesn't make enough or anyinsulin,
or if your cells resist the insulin your body makes, the glucose can't get into
them and you have no energy. This can make you more hungry and tired than
usual.
The average person usually has to pee
between four and seven times in 24 hours, but people with diabetes may go a lot
more.
Why? Normally your body reabsorbs glucose
as it passes through your kidneys. But when diabetes pushes your blood
sugar up,
your body may not be able to bring it all back in. It will try to get rid of
the extra by making more urine, and that takes fluids.
You'll have to go more often. You might pee
out more, too. Because you're peeing so much, you can get very thirsty. When
you drink more, you'll also pee more.
Because your body is using
fluids to make pee, there's less moisture for other things. You could get dehydrated,
and your mouth may feel dry. Dry skin can make you itchy.
Changing
fluid levels in your body could make the lenses in your eyes swell up. They
change shape and lose their ability to focus.
These
tend to show up after your glucose has been high for a long time.
கிரஹங்களில் சுக்ரன் சர்க்கரை
நோயை முதலில் உடலில் ஆரம்பித்து வைக்கும். அதன் பிறகு குரு அதை தீவிரப்படுத்தும். பிறகு அதை நிரந்தரமாக்கி விடுவது சனியின் வேலையாகும். ஆகவே இந்த கிரஹங்கள் ஜாதகத்தில் 6,8,12 ம் பாவங்களோடு
தொடர்ப்பு கொண்டாலோ, இந்த பாவங்களில் சேர்க்கை பெற்றாலோ ஒருவருக்கு சர்க்கரை வியாதி
கண்டிப்பாக வரும். மேலும் இந்த பாவங்கள் நீர் ராசியாக வந்தால் அதாவது கடகம்,
விருச்சிகம், மீனம் ஆக வந்து குரு, சுக்ரன், சனி தொடர்பு கொண்டால் நோயின் தாக்கம் அதிகமாகி
அவர்கள் சிறுநீரை கட்டுப்படுத்தமுடியாமல் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். இதோடு ராகு தொடர்பு கொண்டால் அதுவும் பனிரெண்டாம்
பாவத்தோடு சேர்ந்தால் உடலில் அவயத்தை வெட்ட வேண்டிய நிலைக்கு செல்ல வேண்டி இருக்கும்.
அதேபோல் கேது தொடர்பு கொண்டால் அதுவும் எட்டாம் பாவத்த்தில் சேர்க்கை பெற்றால் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு செயல் இழந்து அதை மாற்றக்கூடிய நிலைக்கு கூட செல்ல
நேரிடும். ஆகவே ஒருவரின் ஜாதகத்தில் சர்க்கரை நோயை கொடுக்க கூடிய கிரஹங்களாக குரு,
சுக்ரன் ஆகியவைஆகும். அதை பாரம்பர்யத்தில் சம்பந்தப்படுதுவது சனி ஆகும். அதை தீவிரமாக
மாற்றி அவயத்தை வெட்டுவது ராகுவும் , உறுப்புகளை
செயலிழக்கச் செய்வது கேதுவாகும். ஓவ்வொரு ராசியிலும்
மிருத்யு பாகை அதாவது கண்டத்தை ஏற்படுத்தும் பாகை என்று ஒன்று இருக்கும். அந்த மிருத்யு
பாகையில் உள்ள கிரஹங்கள் உடலில் உள்ள நோயை குறிகாட்டும். அந்த பாகையில் 6,8,12ம் பாவாதிபதிகள் , ராகு, கேது
ஆகியவை நின்றால் நோயை சற்று அதிகமாகவே தரும்.
இதை சமீபத்தில் மறைந்த நமது முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள்
ஜாதகத்தை பார்த்தால் தெரியும். அவர் ஜாதகத்தில்
நீர் ராசியான குருவின் வீடான மீனத்தில் சுக்ரன் நின்று, கடகத்தில் சனி நின்று ராகு
மேஷத்தில் சுக்ரன் நக்ஷத்திரல் நின்று சர்க்கரை வியாதியை அதிகப்படுத்தியது.
இதற்கு பரிகாரமாக முதலில் நல்ல தூக்கம் வேண்டும். நேரம் தவறாமல் உணவு எடுத்துக் கொள்வது நல்லது.அதிலும்
மேலே சொன்ன உணவு வகைகளில் கட்டுப்பாடு அவசியம். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பச்சரிசி உணவை விட புழுங்கள் அரிசி உணவு எடுத்துக்
கொள்வது நல்லது. அதிக நெய் சேர்த்த இனிப்புகள் சாப்பிட கூடாது. ஐஸ்கீரீம், வாழைபழம்,
மாம்பழம், உலர்ந்த பழங்கள், திராட்சை, கல்கண்டு ஆகியவை சாப்பிடகூடாது. பீடி, சிகரட், மது இவை கூடாது. சிறிய
பாகற்காய் சூப் வைத்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். நார் சத்து
உள்ள பொருட்கள் எடுத்துக் கொள்ளலாம். வெள்ளரி, கொய்யா, சாத்துக்குடி, ஆரஞ்சு பழம் சாப்பிடலாம்.அரிசி
உணவிற்கு பதிலாக கோதுமை, கேழ்வரகு கலந்த உணவு எடுத்துக் கொள்ளலாம். இந்த நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி பசி ஏற்படும்.
ஆகவே சிறிய அளவு உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. சர்க்கரை
கொல்லி என்ற பொடி ஆயுர்வேதத்தில் உள்ளது அதை
வாங்கி மருந்தாக எடுத்துக் கொள்ளலாம். முதன்
முதலில் மருந்து எடுத்துக் கொள்பவர்கள் ஞாயிற்றுக் கிழமை அன்று வரும் குரு ஓரையில்
எடுத்துக் கொண்டால் நோய் சீக்கிரம் குணமாகும்.
சித்த மருத்துவம் நன்கு பயனளிக்க கூடியது.
இதில் பஞ்ச கர்ம முறையில் மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டால் சந்ததிகளுக்கு
இதன் தாக்கம் இருக்காது. மேலும் தகுந்த மருத்துவர்
ஆலோசனையின் பேரிலேயே மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
நோயற்றே வாழ்வே குறைவற்ற செல்வம். வாழ்க வளமுடன்
அன்புடன் ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்………………………..ph: 9094176198